Tuesday 2 December 2014

ஜிகாதிகள் கூடாரமாகும் திருவல்லிக்கேணி
சென்னையில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளில் திருவல்லிக்கேணியும் ஒன்று. மேற்கண்டவற்றில் ராமலிங்க வள்ளலாரை அவமதித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த நிகழ்வும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளிக்கு அடைக்கலம் கொடுத்த நிகழ்வும் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்திருப்பதைக் கவனத்தில் கொண்டால், அப்பகுதி எந்த அளவிற்கு ஜிகாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இவ்வுண்மையை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களில் இரண்டு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நடந்தேறியுள்ளன.
வக்கிர மனம் படைத்த சிறுவனின் பாலியல் வன்முறை
கடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு ஹிந்து குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 8 மணிக்கு திருவேட்டீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டுத் தங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அக்குடும்பத்துப் பெண்மணி ஒருவர் மீது, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் ஒருவன் பாலியல் வன்முறை புரிந்துள்ளான். அந்தப் பெண்மணியின் மேல் கையை வைத்து மானபங்கம் செய்துவிட்டான். அவனுடன் அவன் வயதை ஒத்த மேலும் நான்கு பேரும் இருந்துள்ளனர். அந்தப் பெண்மணியின் மகன் அவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறான். இதனிடையே அந்த நால்வரில் ஒருவன் ஜமாத்திற்குப் போன் மூலம் தெரிவிக்கவே சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்து, தட்டிக்கேட்ட மகனை அடித்து உதைத்திருக்கின்றனர். அவர்கள் அந்த நான்கு சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ஹிந்து குடும்பத்தினர் புகார் செய்வதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து முன்னணியினரும் பாதிக்கப்பட்ட அந்தக் குடுபத்தினருக்கு ஆதரவாகச் சென்றுள்ளனர். அச்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காவல் நிலையத்திற்கு வந்து இந்துக்களிடம் தகராறு செய்து தாக்கவும் முற்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த அந்த நான்கு சிறுவர்களையும் அடையாளம் கண்ட இந்துக்கள் அவர்களைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்களாக இருந்தபோதும், காவல்துறையினர் ஹிந்துமுன்னணியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரையும் கைது செய்துள்ளது.
பாலியல் வன்முறையைத் தொடர்ந்து கொலை முயற்சி
இன்று (புதன் கிழமை) காலை சுமர் 10 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்துகொண்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜ்குமாரின் மனைவிக்கு இன்று பிறந்த நாள். குடும்பத்தினருடன் திரைப்படம் செல்லலாம் என்கிற எண்ணத்துடன் திரைப்படத்திற்கு முன்பதிவு செய்வதற்காக வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளார் ராஜ்குமார்.
பங்காரு தெரு வழியாக வந்துகொண்டிருந்தபோது, ஸ்ரீ பத்ராசல ராமதாஸ் பக்தஜன சபை டிரஸ்ட் அலுவலகத்திற்கு முன்பாக, அவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டனர்.
triplicane assault2

அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இரும்புக்குழாய், உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர். நிலை குலைந்த அவர், மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
பங்காரு தெருவிலிருந்து நாகப்ப ஐயர் தெருவுக்குள் ஓடிச் சென்று கூட்டுக் குடித்தனங்கள் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து மறைந்துகொண்டார். பழைய கதவு எண் 39 புதிய கதவு எண் 64 கொண்ட அவ்வீடு அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.
house
anjaneyatemple
பின்னர் அங்கிருந்து ஹிந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் இளங்கோ அவர்களுக்கு ஃபோன் மூலம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். உடனே இளங்கோ அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லி காவல்துறை உடனே அவ்விடத்திற்கு வந்துள்ளது. இதனிடையே ராஜ்குமாரைக் கொலை செய்ய வந்த அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
பின்னர் ராஜ்குமாரை அழைத்துக்கொண்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜிகாதிகள் மடக்கித் தாக்கும்போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார். இல்லையென்றால் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தின் சாய்ந்திருப்பார். ஹெல்மெட் அணிந்திருந்தாலும், இரும்புக் குழாயினால் தலையிலும் கழுத்திலும் முதுகிலும் அடித்துள்ளதால், அவருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டுள்ளது. மேலும் கை கால்கள், உடல் முழுவதும் கடுமையான வலி எடுக்கவே, ஹிந்து அமைப்பு நண்பர்கள் அவரை அவசர சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
rajkumar
ராஜ்குமார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சேவை மனப்பான்மை கொண்டவர். யாரிடமும் எந்த விதமான வம்பிற்கும் போகாதவர். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளான நான்கு முஸ்லிம்களையும் காவல்துறைக் கைது செய்துள்ளபடியால், அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளதாக ஹிந்து அமைப்பினர்கள் கருதுகிறார்கள். மேலும், இதுவரை ராஜ்குமாரைத் தாக்கியவர்களைக் கைது செய்யாதது காவல்துறையின் இயலாமையைக் காட்டுகிறது என்று கூறும் இந்து அமைப்பினர், திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனரோ என்கிற சந்தேகத்தையும் தெரிவிக்கின்றனர்.
தங்கள் ஆதிக்கத்தை அராஜகத்தின் மூலம் நிலைநிறுத்தும் முஸ்லிம்கள்
தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுடைய ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம் சமுதாயத்தினரின் வழக்கமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அவர்களுடைய குணாதிசியமாகவே இருக்கிறது. அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர் போன்ற மாவட்டங்களில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நமது தளத்திலும் பல சம்பவங்களைப் பற்றி ஆதாரங்களுடன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
இந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் ஞயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவன் 14 வயது சிறுவன். சாதாரணமாக சிறுவர்கள் தகாத காரியத்தில் ஈடுபட்டால், பெரியவர்கள் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் திருத்துவார்கள். இதுதான் மனித இயல்பு. பெரியவர்களின் கடமையும் கூட. ஆனால் இங்கே, ஜமாத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அச்சிறுவர்களைக் கண்டித்துத் திருத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக வன்முறையிலும் கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதைப் பார்க்கும்போது, அவர்களே அச்சிறுவர்களை தூண்டிவிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சம்பவத்தைத் தூண்டிவிட்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து, அதன் மூலம் ஹிந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் தீர்த்துக்கட்டும் யுக்தியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தையும் ஹிந்து அமைப்பினர் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். இது ஜிகாதின் புதிய பரிணாமமாக இருக்கலாம் என்பதே அவர்களின் கருத்து.
தமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளாகவே மீளா உறக்கத்தில் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. மாநிலமெங்கும் ஜிகாத் வேகமாகப் பரவி மாநிலத்தின் அமைதியைக் குலைத்து வருகிறது. இதற்குப் பிறகும் அரசும் காவல்துறையும் விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையென்றால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-http://www.vsrc.in/index.php/articles/2014-07-30-08-48-49/item/639-2014-11-26-19-22-32

0 comments:

Post a Comment