Friday 27 June 2014



 நம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது சென்று தரிசிப்போம்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.

பஞ்சநத நடராஜர்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
சிவகாமி அம்மையும் அழகோ அழகு.


 தனிப்பாடல் என்று இல்லாமல் மற்றொரு பாடலில் வைத்து பாடல் பெற்ற வைப்புத்தலம்.

ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்).

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணலாமே.

-அப்பர் சுவாமிகள் தேவாரம்.


இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது


நன்றி-  https://www.facebook.com/saravanan.sivathanu
 https://www.facebook.com/malar.mannan.923724

0 comments:

Post a Comment