Saturday 25 January 2014



அறிமுகம்:
மூலவர்:சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்)
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பெரிய நாயகி
தல விருட்சம்:-
தீர்த்தம்:கிணற்று நீர்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திருவாலந்துறை
மாவட்டம்:பெரம்பலூர்
மாநிலம்:தமிழ்நாடு

தல சிறப்பு:

திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.

தலபெருமை:

 திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் ஊடாகச் சென்று பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இதற்கு ஸ்வேதா நதி, நீவா நதி என்ற பெயர்களும் உண்டு. நீவா நதி என்பது வசிஷ்டர் அழைத்த பெயராகும். அர்ச்சுனனின் பாணத்தால் இந்த நதி உருவானதாக புராணக்கதை ஒன்றுண்டு. தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தீர்த்த மலை அடிவாரத்துக்கு வந்தபோது சிவபூஜை செய்ய ஆயத்தமானான். அப்போது பூஜைக்குத் தண்ணீர் தேவைப்படவே, கண்ணனின் ஆலோசனைப்படி தனது பிறைவடிவ பாணத்தால் மலையைத் துளைத்தான். அப்போது கங்கையில் பத்திலோர் பகுதி கொண்ட நீர் மலையிலிருந்து பெருகி ஓடியது. அதைத் தொடர்ந்து நடந்த சிவபூஜையின் முடிவில், சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி தந்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ச்சுனன் காலத்திலேயே தோன்றிய நதியென்பதால் இது 5000 வருட வரலாறுடையதென சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய வெள்ளாற்றின் கரையில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சப்த துறைகள் எனப்படும் காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருவரத்துறை, முடவன்துறை என்னும் ஏழு துறைகள் உள்ளன. திருவரத்துறை நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர் இந்த ஏழு துறைகளையும் பற்றி பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

தலவரலாறு:

 திருமால், பிரம்மா இருவருக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி உருவானது. அவர்களுக்கு திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தந்த சிவபெருமான் உண்மையைப் புரிய வைத்தார். அதுபோல இந்த தலத்திலும் சிவபெருமான் அவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். திருமாலும் அயனும் சிவனை வழிபட்ட துறை எனும் பொருளில் திருமால் அயன்துறை என வழங்கி, காலப்போக்கில் திருவாலந்துறையென மருவியதாகச் சொல்லப்படுகிறது. கூகையூர் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்க மன்னன் வானவ கோவராயர் கி.பி. 1179-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் ஒன்றாம் தேதி இவ்வாலயத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். இறை தரிசனத்தின்போது இறைவனுக்கு அருகே படமெடுத்த கோலத்தில் நாகம் ஒன்று காட்சி தந்து மறைந்தது. இதனையடுத்து, அம்மன்னன் இவ்வாலயத்துக்கு நிலங்கள் தந்து இதனை விரிவுபடுத்திக் கட்டினான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

அதிசயத்தின் அடிப்படையில்:

  திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில். 

நேர்த்திக்கடன்:

 வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சார்த்தியும், நெய் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்

 பிரார்த்தனை:

 ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

நன்றி-தினமலர்.

புதுடில்லி: தற்போதைய சூழலில் பார்லி., தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ., வே கூடுதல் சீட்டுக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாகவும், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட பெரும் இழப்பு ஏற்படும் என்றும் , ராகுலை விட மோடியே பிரதமர் ஆக வேண்டும் என கூடுதல் சதவீதத்தினர் விரும்புவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சி.என்.என். சார்பில் நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பு 18 மாநிலங்களில் பல் தரப்பு வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. நேரில் மற்றும் பேஸ்புக், இணையதளம் ஆகியன மூலம் இந்த கணிப்புகள் நடந்தன.

இந்த கணிப்பின்படி கடந்த 2009 நடந்த லோக்சபா தேர்தலை விட காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பெற்ற 206 தொகுதிகளில் 92 முதல் 108 வரை மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 211 முதல் 231 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. இது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு மிக ( 272 தேவை) குறைந்த வித்தியாசமே.

மாநில அளவிலான கட்சிகள் இந்த முறை அதிக இடங்களை பிடிக்க வாயப்பும் உள்ளது. குறிப்பாக மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி, தமிழகத்தில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், இந்த நேரத்தில் மத்தியில் பிரதமரை முடிவு செய்வதில் இந்த கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியே பிரதமர் ஆக வேண்டும்; மோடியே பிரதமர் ஆக வேண்டும் என அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 25 வயது வரையிலானவர்ககளில் 48 சதவீதத்தினர் மோடிக்கும், 25 சதவீதத்தினர் ராகுலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், போன்ற மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றியை தேடித்தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினமலர்.

சென்னை : லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,
பிரவீண்குமார் தெரிவித்தார்.

நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதேபோல், பணம் கொடுப்போர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் கொடுத்ததாக, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது;தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது. 

நன்றி-தினமலர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் நியாயவிலை கடை பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவுபடி, பொது விநியோகத் திட்டம் மற்றும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டில் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில், நியாய விலைக் கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் கணக்குகள் 121 ஊரட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன் வைக்கப்படும். எனவே, கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இதேபோல, 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், ஏற்கெனவே நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அளிக்ககப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். 
கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஊராட்சி) பற்றாளர்களாகவும், வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்காளர்களாக சார்ந்துள்ள ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும்.
எனவே, மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பங்கேற்று ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நன்றி-தினமணி.

Friday 24 January 2014

    பேஸ்புக்கில்  இந்து தர்மத்தின் பெருமைகள்,  இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு  பிரசாரங்களுக்கும் அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்..  இத்தகைய தர்ம சேவகர்களை ஒன்றிணைத்தால்  இன்னும் சிறப்பாக இணையத்திலும்  அதோடு  நேரடி களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன்  சில குழுங்களும் தொடங்கப் பட்டுள்ளன.


இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட DHARM பேஸ்புக் குழுமம் மிக அருமையாக இந்து தர்மம் குழித்த விழிப்புணர்வை உண்டாக்குவதுடன், களப்பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்தக் குழுமத்தின் வலைத்தளம்: https://www.facebook.com/groups/dharamwarriors/
சமூக வலைத்தளங்களை  அரட்டைக்கும், நேர விரயத்திற்குமே பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்,  அதன் மூலம்  நல்ல பணிகளை  முன்னெடுக்கும் இக்குழுமத்திற்கு தமிழ்ஹிந்து தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது போன்ற குழுக்கள் மேன்மேலும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பெருக வேண்டும். 

நன்றி-தமிழ் இந்து.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களில், வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, வங்கி இணைப்பு பணிகளை மேற்கொள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தாற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். ஆலம்பாடி தொகுப்பில் அம்மாபாளையம், ஆலம்பாடி, கோனேரிப்பாளையம், வடக்குமாதவி, எசனை, கீழக்கரை, மேலப்புலியூர், லாடபுரம், எளம்பலூர், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளும், சிறுவாச்சூர் தொகுப்பில் அய்யலூர், பொம்மனப்பாடி, சிறுவாச்சூர், புதுநடுவலூர், நெச்சியம், கல்பாடி, கவுள்பாளையம், செங்குணம், சத்திரமனை, வேலூர் ஆகிய ஊராட்சிகளும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களுக்கு, அந்தந்த ஊராட்சிகளுக்கு உள்பட்ட ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாகவும், 35 வயதிற்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கணினி அனுபவம், தகவல் தொடர்பு திறன் மற்றும் கையெழுத்து அழகாக எழுதத் தெரித்தவராக இருக்க வேண்டும்.
இந்த தகுதியுடைய நபர்கள், தங்களது ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பரிந்துரையுடன், திட்ட அலுவலர், தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு ஜன. 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றுகளுடன் பிப். 5-ம் தேதி மேற்கண்ட முகவரியில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

நன்றி-தினமணி.
2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்.  இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன.  இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும்  இணைந்து  நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே.



அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் நரேந்திர மோடி அலையால், பாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியா டுடே குழுமம் எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி,
காங்கிரஸ் கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார் 150 இடங்கள் வரை குறைவாகப் பெற்று, 100 இடங்கள் வரை பெறக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஐ.மு.கூட்டணி, தே.ஜ.கூட்டணி அல்லாத மூன்றாவது அணி, சுயேட்சைகளுக்கு அதிக ஆதரவு கிட்டும் என்றும் அவை 220 இடங்கள் வரை பெறக்கூடும் என்றும் தெரிகிறது.
இதில் தெரியவந்த சில சுவாரஸ்யமான அம்சங்கள்...
காங்கிரஸ் தெலங்கானா பகுதியில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ஆனால் தென்னகத்தில் படு தோல்வியைத் தழுவும்.
மோடி அலை, பீகாரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் பெரு வெற்றி பெறும்.
மோடி அலையால் மேற்கு இந்தியப் பகுதியில் 85 சதவீத இடங்களை தே.ஜ.கூட்டணி பெறும்.
மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி, தற்போதைய ஐ.,மு.கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றும்...
- இவ்வாறு இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
2010க்குப் பின்னர் 200 இடங்கள் என்ற அளவை தே.ஜ.கூட்டணி தாண்டக்கூடும் என்றும் தெரியவருகிறது. தே.ஜ.கூட்டணிக்கு 34 சதவீதம் வாக்கும், ஐ.மு.கூட்டணிக்கு 23 சதவீதமும், மற்ற கட்சிகள் 43 சதவீத வாக்குகளும் பெறும் என்று தெரிகிறது.

நன்றி-தினமணி........ தினமலர்.

Thursday 23 January 2014

டெல்லியில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  28 இடங்களை பெற்று ஆட்சியில் அமர்;ந்துள்ளது.  பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்ற பின்னரும் பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து இடங்கள் குறைவாக இருப்பதால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சி  பதவி ஏற்றுள்ளது.  நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மறைமுகமாக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டுகளும் உண்டு.  கீழ் தட்டு மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிகாரத்தை கைபற்றியுள்ள கட்சி ஆம் ஆத்மி கட்சியாகும்.  உண்மையிலேயே இந்த கட்சி ஊழலை ஒழிக்க கூடிய கட்சிதானா என்றும், இவர்களின் பின்புறத்திலிருந்து இயக்குவது யார் என்று பார்க்க வேண்டும்.  இதில் அங்கம் வகிக்கும் பெருவாரியான உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் என்றால் மிகையாகாது.


நிதி பெற்ற விவரங்கள்
அமெரிக்காவிலிருந்து செயல்படும் போர்ட் பவுன்டேஷன் (Ford Foundation ) நிறுவனத்திடமிருந்து, அர்விந்த கெஜ்ரிவால் மற்றும் அவரது நன்பர்களும், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமானவர்களான மணிஸ் சிசோடியா (Manish Sisodia) போன்றவர்கள் ஏற்படுத்திய கபீர் (Kabir)என்ற NGO விற்கு பெற்ற நன்கொடை.4லட்சம் டாலர். அதாவது ரூ86,61,742  ஆகும். இவ்வளவு பெருந்தொகையை பெற்றுக் கொண்டு, அதை எவ்வாறு செலவு செய்தார்கள், எதற்காக செலவு செய்தார்கள் என்பதை மக்கள் முன் வைக்கவில்லை. 2007-ம் வருடம் முதல் 2010-ம் வருடம் வரை இந்த தொகை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எதே போர்ட் பவுன்டேஷன் நிறுவனத்திடமிருந்து மட்டும் பணம் பெற வில்லை.  அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றவர்களிடமிருந்தும் பணம் பெற்றுள்ளார்கள்.
2007-ம் ஆண்டு முதல் 2010-ம் வருடம் வரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஸ் சிசோடியா ஆகியோரின் கபீர்   விற்கு கிடைத்த நன்கொடையின் பட்டியல் பிரியா (PRIA) ரூ2.37,035, மஞ்சுநாத் சண்முகம் ட்ரஸ்ட் ரூ3,70,000, டச்சு தூதரகம் வழங்கியது ரூ19,61,968. இந்திய வளர்ச்சி அமைப்புAssociation for India’s Development) ரூ15,00,000.  இந்திய நன்பர்கள் சங்கம் வழங்கியது ரூ7,86,500.  ஐ.நா.சபையின் வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில்(United Nations developing programs)வழங்கியது ரூ12,52,742  . இத்துடன் இந்த மூன்று ஆண்டுகளில் வேறு சிலரிடம் வசூல் செய்த தொகை ரூ11,35,857 ஆகும்..  இவை மட்டுமில்லாமல் இன்னும் சில நிறுவனங்களிடம் பெற்ற தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ் தனது தனிப்பட்ட தொண்டு அமைப்பிற்காக போர்ட் பவுன்டேஷனிடம் பெற்ற தொகை 3,50,000 டாலர்.
ஐ.டி. தொழிலில் கொடி கட்டி பறக்கும்  Infosys  என்ற நிறுவனத்தின் தலைவரான நாராயண மூர்த்தி கெஜ்ரிவாலுக்கு கொடுத்த பணம் ரூ12 லட்சம்.. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஈனம் செக்யூரிட்டி (Enam Securities)   என்ற  பங்கு வர்த்தக நிறுவனம் வழங்கிய தொகை ரூ2 லட்சம்.  2ஜீ அலைக் கற்றை ஊழலில் சிக்கிக் கொண்ட டாடா நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான டாட்டா சோஷியல் வெல்பேர் ட்ரஸ்ட் (Tata Social Welfare Trust) அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுத்த தொகை ரூ25 லட்சம், Eicher Goodearth Trust என்ற நிறுவனம் கொடுத்த தொகை ரூ3லட்சமாகும்.  நாடு முழுவதும் கல்லூரிகளை நடத்தி வரும் ஜகன் நாத் குப்தா நினைவு கல்வி அறக்கட்டளை (Jagan Nath Gupta Memorial Education Society) 13 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.  இவ்வாறு லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு, ஏழைகளின் நன்மைக்காகவே பாடுபடுவதாக கூறும் இவர்கள், பெற்ற பணத்தை எவ்வாறு செலவழித்தார்கள் என்பதற்குறிய கணக்குகளை பொது மக்கள் முன்னிலை வைக்க வில்லை.
இந்திய திருநாட்டில் டெல்லி மாநிலத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நன்கொடை பெற்றவர்கள், நாளை தினம் இந்த நாட்டை அந்நிய நாட்டினருக்கு விற்க மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.  இந்த வாத்த்தை வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ஆம் ஆத்மி கட்சியின் இணைய தளத்தில் வெளி நாடுகளிலிருந்து பெற்ற நன்கொடை விவரத்தை வெளியிட்டுள்ளார்கள்.  இந்தியாவில் நன்கொடை பெற்ற தொகை ரூ3,77,56,484-, அமெரிக்காவில் பெற்ற நன்கொடை ரூ44,59,490-, இங்கிலாந்தில் வாங்கிய நன்கொடை ரூ10,93,699-, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சில் பெற்றது ரூ14,12,696-, சிங்கப்புரில் பெற்றது ரூ10,74,514-, கனடாவில் ரூ4,46,175 என செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.  இந்திய நாட்டில் உள்ள ஊழல்களை ஒழிக்க எடுத்த அவதாரமாக கருதும் ஆம் ஆத்மியினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முழுமையான விளக்கங்கள் அளிக்க முன்வருவார்களா? என்பது தெரியவில்லை.
தேச விரோத சக்திகளுடன் உறவு  


ஆம் ஆத்மி கட்சியின்  முக்கிய நபரும், கட்சி துவங்குவதற்கு முன்பே களத்தில் இறங்கிய பிரசாந்த் பூஷன் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் ஆதரவாக களத்தில் உள்ளவர்.  கூடங்குளம் அனல் மின்நிலையத்தை மூட வேண்டும் என்ற போராட்டம் நடக்கின்றது. இந்த போராட்டம், அமெரிக்காவின் ஆலோசனையின் படி இங்குள்ள சில பாதிரியார்களின் துணையோடு போராட்டம் நடத்தும் உதயகுமாருடன் நெருங்கி தொடர்ப்பு கொண்டவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர்..   1998-ல் கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அத்வானி அவர்களை கொல்ல திட்டமிட்டு வெடி குண்டு தாக்குதல் நடத்திய் சம்பவத்தின் சூத்ரதாரியான அப்துல் நாசர் மதானிக்கு ஆஜராகும் அட்வகேட். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாகவும், தனி நாடு கோரி போராடும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் இடது சாரி சக்திகளுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு  தேசத்திற்கு விரோதமாக குரல் கொடுப்பவர் பிரசாந்த் பூசன்.  இவரின் ஒரு கருத்து இந்திய இறையான்மைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும். /Our role is to facilitate a dialogue between Kashmir India and Pakistan ‘  என்பதாகும். இந்த வாதத்தை போலவே But if we still feel that people feel alienated in Kashmir then a UN mandated plebiscite can be conducted . மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிரசாந்த் பூஷன் தொடர்புகளை அம்பலப்டுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானோ அல்லது லஷ்கர் இ தொய்பாவே கலவரத்தை தூண்டவில்லை என இந்திய மண்ணில் பேசியவர் பிரசாந்த பூஷன். (there was no hand of Pakistan and Lashker-e-Toiba in instigating any disturbance in Kashmir ) பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து, இந்திய ராணுவம் வகுப்புவாதமாக மாறிவிட்டது என பிரச்சாந் பூசன் பேசியது அவரின் தேச விரோத சிந்தனையை தெரிந்து கொள்ள வேண்டும்.




அரவிந்த் கெஜ்ரிவால்

தன்னை தூய்மையானவராக காட்டீக் கொள்ளும் கெஜ்ரிவால் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 20 ஆண்டு காலமாக டெல்லியிலேயே பணி புரிந்த ரகசியம் என்ன என்பது தெரியவில்லை. IFS பணியில் உள்ள அதிகாரி கட்டாயமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே பணியாற்ற வேண்டும் என்ற விதியை ஒரு முறை கூட கெஜ்ரிவால் பயன்படுத்த வில்லை. ஒரு முறை கூட டெல்லிக்கு வெளியே பணி மாற்றம் செய்யப்படவில்லை.  அரசு ஊழியர் வெளிநாட்டில் படிக்க சென்றால், முழு சம்பளத்துடன் கூடிய  விடுப்பு கொடுக்கப்படும்,  அதே சமயம் படிப்பு முடித்த பின்னர் கட்டாயமாக மூன்று ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும், விதிக்கு புறம்பாக நடந்து கொண்டது ஏன்? முழு சம்பளத்துடன் வெளிநாடுகளில் படிக்க செல்லும் அரசு ஊழியர், படிப்பு முடிந்தவுடன், அரசுக்கு முழு அறிக்கை சமர்பிக்க வேண்டும், கெஜ்ரிவால் ஏன் அறிக்கை சமர்பிக்கவில்லை. ஒரு முறை கெஜ்ரிவால் சண்டிகருக்கு பணி மாறுதல் செய்த போது, பணி மாறுதல் ரத்து செய்ய காரணம் என்ன? அரசு ஊழியராக இருக்கும் போதே  கபீர் என்ற NGO தொண்டு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன் அரசின் அனுமதி பெற வேண்டும், நீங்கள் அனுமதி பெற்றீர்களா என்பது தெரிய வேண்டும். இவருடைய தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற அரசின் அனுமதி உண்டா என்பதும் தெரியவில்லை.  சட்டததிற்கு விரோதமாக மின் இணைப்பு துண்டிக்கப்ட்ட பகுதிகளுக்கு, மின் இணைப்பு கொடுத்தது சரியா, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது, ஜனநாயக வழியா என்பதை விளக்க வேண்டும்.
இறுதியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அமைச்சர்களை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த போது, மிகவும் கேவலமான முறையில் பிரணாப் முகர்ஜியை விமர்சனம் செய்த கெஜ்ரிவால், குடியரசு தலைவராக பதவி ஏற்றவுடன் அவரை புகழ வேண்டிய அவசியம் என்ன?  தேர்தலுக்கு பின்னர் பல முறை தாங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை சந்திதததின் பின்னணி என்ன? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கூற வில்லை.  ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் முடிந்த பின்னர், சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்து பின்னர் அவரை பதவி ஏற்க முடிவு செய்வார்கள்.  ஆனால் சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தானே டெல்லியின் முதல்வர் என முடிவு செய்தது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதை பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சி டெல்லி முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டுகளை கொடுத்தால்  விசாரனை நடத்த தயார் என அறிவித்துள்ளார்.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  சட்ட மன்ற தேர்தல் நடக்கும் முன் , காமன்வெலத் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் சம்பந்தமான அறிக்கை வெளியானவுடன், முதல்மந்திரி பதவியிலிருந்து ஷிலா தீட்ஷித் விலக வேண்டும் என குரல் கொடுத்தவர் கெஜ்ரிவால் என்பதை மறந்து விடக்கூடாது.  இது சம்பந்தமாக மத்திய அரசு நியமித்த சாங்குலு குழுவினரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே விசாரனை நடத்த முடியும்.  ஆனால் தன்னை யோக்கியனாக காட்டுக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியினர்  ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிய மாட்டார்கள் என்பது உண்மையாகும்.
ஷாஜியா இல்மி
Shazia Ilmi என்ற இந்த பெண்மனி ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்.  இவர் முழு காங்கிரஸ் ஆதரவாளர்.  இவரது தகப்பனார் உத்திர பிரதேச சட்ட மன்ற உறுப்பினராக பல முறை கான்புர் சட்ட மன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.  உத்திர பிரதேசத்தில் அமைச்சாரகவும் பதவி வகித்தவர்.  இவ்ரது சகோதரியின் கணவர் முன்னாள் மத்திய அமைச்சர் அரீப் முகமது கான்.  இவர் கல்வி பயின்றது ஜாம்மிய இஸ்லாமிய பல்கலை கழகத்தில்.  இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்காதவர்.

யோகேந்திர யாதவ்
காங்கிரஸ் ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்தவர். 2009-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்திக்கு ஆலோசகராக பணியாற்றியவர். 2005-2012 வரை தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசியல் விஞ்ஞானம் என்ற புத்தகத்தின் ஆய்வாளராக பணியாற்றினார்.  சோனியா காந்தியின் தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.  கல்வி உரிமை சட்டம் பற்றி தேசீய ஆலோசனை குழு உறுப்பினர்,  2011-ல் பல்கலைகழக மானிய குழு உறுப்பினர்.  ஆகவே மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, தற்போது ஊழல் மிகுந்த ஆட்சி என வர்ணிப்பது விசித்தரமானதாகும்.  எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. 
ஆம் ஆத்மி கட்சியும் கூட காங்கிரஸ் கட்சியை போல் சிறுபான்மையினரை தாஜா செய்யும் காரியத்தில் ஈடுபட்டது.  டெல்லி சட்ட மன்ற தேர்தலுக்கு முன்  Barelui    பகுதியில் உள்ள இஸ்லாமிய தலைவரான மௌலானா தக்கீர் ஈஸா கான்  (Taugeer Raza Khan)என்பவரை சந்தித்து, வரும் சட்ட மன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.  இவர் பங்களா தேஷ் நாட்டின் எழுத்தாளாரான தஸ்லீமா நஸ்ஸூரிதின் மீது பட்வா விதித்தவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே  இஸ்லாமியர்களுக்கு ஆதரவான போக்கினை கடை பிடித்தவர்கள்.  மௌலானா தக்கீர் ஈஸா கானை சந்தித்த்து போல், அடிப்படைவாத இஸ்லாமிய தலைவரான மதானியைச் சந்தித்து தனது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதராவினை கேட்டவர் கெஜ்ரிவால் என்பதை மறந்து விடக் கூடாது.
சர்வாதிகாரம் என்பது ஆம் ஆத்மி கட்சியில் சர்வசாதராணமாகும்.  தேர்தலில் டெல்லியில் உள்ள பத்ராபுர் தொகுதியின் வேட்பளாராக அம்ரீஸ் சௌத்திரிக்கு கொடுப்பதாக கூறியவர்கள், திடீர் என வேட்பாளரை மாற்றி விட்டார்கள்.  இதில் வேடிக்கை என்ன வென்றால், ஆன்லைனில் பத்ராபுர் தொகுதியின் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என கட்சியினரிடம் கருத்து கேட்ட போது 60 முதல் 70 சதவீதமானவர்கள் அம்ரீஸ் சௌத்திரிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் இந்த மாற்றம் ஏற்பட்டது.  இதன் காரணமாக அம்ரீஸ் சௌத்திரி கெஜ்ரிவாலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.  How much money you took to sell the Badarapur seat?  என அனுப்பினார் .   இதற்கு பதிலாக கெஜ்ரிவால் அனுப்பியது  In Rs.2 crore .          ஆகவே. ரூ2 கோடிக்காக ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி விற்கப்பட்டது என்றால் இவர்களா லஞ்சத்தை ஒழிக்க முற்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வருடங்களாகவே அன்னா ஹசாரே இயக்கத்திலிருந்து கெஜ்ரிவால் தொடாந்து வலியுறுத்தி வந்த விஷயம், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி உள்ளவர்களை நிறுத்தக் கூடாது என்று கூறியவர்.  இந்த கருத்துக்கு மாறாக கெஜ்ரிவால் மேல் 9 கிரிமினல் வழக்குள் நிலுவையில் உள்ளன. கோபால் ராயின் மீது கலவரம் ஆயுதங்களுடன் தாக்குதல் என்று இரண்டு வழக்குகளும், தனது நிர்வாக குழு உறுப்பினரும், கபீர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்துபவருமான மணீஷ் சிசோடியா மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன.  இதை விட கேலவமான வழக்கு ஒன்று உள்ளது, ரேஷன் கடைகளில் முறைகேடுகள் செய்த்தற்காகவும், ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்ட தனது தந்தையின் வாழ்நாள் கால் பென்ஷனை இறந்த்தை மறைந்து வாங்கி வரும் வழக்குகள் கொண்ட தேஷ்ராஜ் ரகாவ்  ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்.  இது போல் இன்னும் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
எனவே  புரையோடி போன அரசியலை புனிதமாக்க அவதரித்த்தாக தன்னை காட்டிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் மறு அவதாரம் என்றால் மிகையாகாது.

நன்றி-http://www.tamilhindu.com


ரியாத்: சவுதியில் விசா முடிந்த பிறகும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக தங்கி பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். மேலும், போலி பாஸ்போர்ட்டில் பலர் வந்து தங்கிவிடுகின்றனர். போலி ஏஜென்சிகளால் ஏமாற்றப்பட்டு சவுதிக்கு வருபவர்களும் வேறு வழியின்றி கட்டுமான கம்பெனிகளின் பிடியில் சிக்கி பரிதவிக்கின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்க ஆவணங்களை சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

சவுதி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், Ôதொழிலாளர் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்தனர். அவர்களில் 2.5 லட்சம் பேரை வெளியேற்றி இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சவுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏமன் வழியாக சவுதிக்குள் ஊடுருவியவர்கள் என்று தெரிய வந்ததால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

சவுதியில் 90 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினகரன்.

Tuesday 21 January 2014


குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 01 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் 01.02.2014 மற்றும் 15.02.2014 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, 01.02.2014 அன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஆகிய வட்டங்களுக்கும், 15.02.2014 அன்று ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய வட்டங்களுக்கும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
                இம்முகாமில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கியதற்கான சான்று, குடியிருப்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளின் பெயர்களை சேர்க்க அவர்களின் பிறப்புச்சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும்.
                குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்வோர் பெயர் சேர்க்கப்படவேண்டிய அல்லது பெயர் திருத்தப்படவேண்டிய நபருக்கான பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி நிலையத்தில் படித்துவருவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும். குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் பெயர் நீக்கப்பட வேண்டிய நபரின் திருமண அழைப்பிதழ் அல்லது இறப்புச்சான்றிதழ் நகலை கொண்டு வரவேண்டும். மனுவுடன் அசல் குடும்ப அட்டை தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்பங்கள் சிறப்புமுகாம் நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று நடைபெறவுள்ளது. என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.

வெளியீடு:  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Monday 20 January 2014



vkalathur வ.களத்தூர் பொங்கல் அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான ஆடல் பாடல் நிகழ்ச்சி.


vkalathur வ.களத்தூரில் பொங்கல் விளையாட்டுவிழாவில் ஒற்றுமையை உணர்த்தும் ஒரு விளையாட்டு.


vkalathur மறந்துபோன ஒரு விளையாட்டு மலரும் நினைவுகளாக.



vkalathur இந்த சைக்கிள் பந்தயம் பார்த்திருக்கவே மாட்டிங்க...


vkalathur வ.களத்தூரில் நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டி ..... பொங்கலை முன்னிட்டு நடைபெற்றது.

Sunday 19 January 2014


தேச நலனில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்(RSS) - இணைவோம் நம் குடும்பத்தினருடன் !!! ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் என்று ஊழையிடும் கூட்டம் ஒரு பக்கம். சங்கத்தின் செயல்பாடு அறிய ஒரு நாள் ஷாகா வந்து பாருங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தேசத்துக்காய் ஒரு மணி நேரம்- 

இது சங்கத்தின் வேண்டுகோள். அங்கே போனால் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக மூளை சலவை செய்வார்களோ, கிறிஸ்துவ இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பிட்ட ஜாதிக்கு எதிராக கொம்பு சீவி விடுவார்களோ என்றெல்லாம் கற்பனை செய்து சென்றேன்........ 

அங்கே போனால், வரிசையில் நிற்க சொன்னார்கள், கம்பீரம் கலந்த கர்ஜனையுடன் கட்டளைகள் பறந்தன, கொள்கைகள் பேசப்படவில்லை, சரீர பயிற்சிகள் ஆரம்பமாயின, சூரிய நமஸ்கார் செய்ய சொன்னார்கள், உடலெல்லாம் சிலிர்த்தது, பிரகார்மார் அடிக்க சொன்னார்கள், புஜங்கள் வலுவடைந்தது போல் உணர்ந்தேன். 

 தக்ஷ ஆரம சொன்னார்கள், ராணுவத்தின் மிடுக்கை கண்டேன், விளையாட்டு விளையாடினோம், குளம் கரை, டாக்டர்ஜி, காந்திஜி, நேதாஜி, உத்தம உத்தம உத்தம பாய், சுந்தர சுந்தர சுந்தர பாய் விளையாட்டு விளையாட சொன்னார்கள். விழிப்புணர்வு, சமயோஜித புத்தி, ஞாபக சக்தி தூண்டப்படுவதை கண்டேன். நியூத்த கற்றேன், பயம் கொள்ளும் சுபாவம் மாறக்கண்டேன், சிலம்பம் சுற்ற தன்னம்பிக்கை மிளிரக்கண்டேன், 

யோகாசனம் செய்ய சொன்னார்கள் உடலின் உள் உறுப்புகள் உறுதியாவதை உணர்ந்தேன். பதவின்யாஸ், வியாயாம்யோக் கற்றேன் உடல் உறுப்புக்களை எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்த கற்றுக்கொண்டேன். வட்டத்தில் உட்கார்ந்து சுபாஷிதம், அம்ருத வசனம், தேசநலம், தேச ஒற்றுமை, தேசப் போராளிகள் பெயர்களை ஞாபகமூட்டும் பாடல்கள் பாடினார்கள். தேசத்தின் வளத்தை சொல்லி தேசம் வெல்க! என்று பிரார்த்தனா பாடினார்கள். ஆனால் எங்கேயும் யுத்தம் செய்ய வேண்டும் என்றோ, எவரையும் மிதிக்க வேண்டும் என்றோ, எவரையும் தூஷிக்க வேண்டும் என்றோ சொல்லும் வார்த்தைகளை கேட்கவில்லை. எவர் மீதும் வெடிகுண்டு வீச சொல்லவில்லை. எவரையும் வெட்டி சாய்க்க வில்லை. இன்னொரு விஷயம் வந்தவர்கள் என்ன ஜாதி என்று எவரும் கேட்கவும் இல்லை, அவர்களுடன் கலந்ததாலோ என்னவோ அது பற்றி அறிய நானும் முஸ்தீப்பு காட்டவில்லை. ஆனால் ஓன்று, எனது உள்ளம், தேகம், சிந்தை தெளிவடைய, உறுதியடையக் கண்டேன், 

முக்கியமாக ஆளுமைத்திறன் என்னிலிருந்து வெளிப்படக்கண்டேன். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய விரும்புகிறீர்களா? வாருங்கள், ஒரே ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம் தோழமையாய் தோளுடன் தோள் சேர்ந்து நமது ஒற்றுமை காண்போம்! நமது பலத்தை காண்போம்! நமது சக்தி என்ன என்று ஒருதரம் நம்மை நாமே உரசிப் பார்ப்போம். 

நன்றி-நமோ உமாசங்கர் .

 வாஷிங்டன் : இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகோட் மீதான விசா விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவிற்கு இந்தியா தரப்பில் எழுந்துள்ள அடுத்த நெருக்கடி பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என பிரபல டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு விசா மறுக்கும் விவகாரம் அமெரிக்காவின் அடுத்த டென்சனாக உருவெடுக்கப் போவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் இதழில், அமெரிக்காவிற்கு அதிகரித்து வரும் விசா நெருக்கடிகள் குறித்து குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகேட் மீது அமெரிக்க அதிகாரிகள் விசா மோசடி குற்றம்சாட்டினர். இது தொடர்பான விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா உறவில் உரசல் ஏற்பட்டது. இதன் விளைவாக தேவ்யானி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இருப்பினும் இந்த விசா சர்ச்சை மீண்டும் தலைதூக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்படும். இந்தியாவின் பலம் மிக்க மனிதராக கருதப்படும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்து வருகிறது. இந்த விவகாரம் இறுதி நிலையை எட்டி உள்ளது. மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் பா.ஜ., வெற்றறி பெற்றால், மோடி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர். இதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

மோடியை தகுதியற்ற மனிதர் என கருதி அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கூறப்படும் காரணம், 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதாகும். மோடியை விமர்சிப்பவர்களும், அவர் தான் கலவரத்தை ஊக்குவித்ததாக கூறினர். ஆனால் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த இந்திய கோர்ட், கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என தீர்ப்பளித்தது.

2005ம் ஆண்டு அமெரிக்க சட்டப்படி மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. மேலும் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், அவர் மத சுதந்திரத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டியது. அவர் குற்றமற்றவர் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீதான குற்றங்கள் பொய்யானவை என காட்டும் வகையில் நாட்டு மக்கள் மத்தியில் அவர் மிகப் பெரிய தலைவராக புகழ் பெற்றார். இருப்பினும் வாஷிங்டன் நிர்வாகம் அவரை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பது ஏன்? மோடி, அமெரிக்கா வருவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என நவம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு 43 காங்கிரஸ் ஒருகிணைப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம், வாஷிங்டனுடன் நல்லுறவை வைத்து கொள்ள விரும்பி இந்தியாவில் அந்நிய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்த மோடியின் பண்பு அமெரிக்க தொழிலதிபர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

தேர்தலில் மோடி வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராகி விட்டால் அமெரிக்க நிர்வாகத்திற்கு உள்நாட்டில் நெருக்கடியும், உலக நாடுகளிடையே கண்டனமும் அதிகரிக்கும். ஆனால் தேசிய நலன் கருதி கொள்கைகளில் மாற்றம் செய்யவே ஒபாமா கருதுவார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவை விட பிற நாடுகளில் உள்ள ஏராளமான விரும்பதகாத தலைவர்களுடன் அமெரிக்கா தொழில் உறவு வைத்து வருகிறது. ஆனால் மோடி விவகாரத்தில் குஜராத் கலவரத்தில் தனது கவனத்தை வைத்துக் கொண்டு மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. ஆனால் மோடி பிரதமர் ஆகி விட்டால், டில்லி உடனான வாஷிங்டனின் ஒப்பந்த உறவு மிகவும் முக்கியமாகும். மோடியின் கடந்த கால வாழ்க்கையை வைத்து அவருக்கு அனுமதி மறுப்பதை விட்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்லதொரு தீர்வை காண இரு நாடுகளும் முன்வர வேண்டும். இவ்வாறு டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி-தினமலர்.



டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரத் மாதா கீ,., பாரத் மாதா கீ என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பி பேச்சை துவக்கினார். பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 2 நாட்களாக நாம் இந்த நாட்டின் அரசியல் சூழலை ஆராய்ந்துள்ளோம். வரும் 2014 தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். நல்ல மாற்றத்தை பார்க்க முடியும் .
தலைமை- கொள்கை இல்லை: நாடு உரிய தலைமை இல்லாமல், உரிய கொள்கைகள் இல்லாமல் இருந்து வருகிறது. இது போன்ற நிலையை நாம் இதுவரை பார்த்தது இல்லை. கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இது இந்த கட்சியை காப்பாற்ற நடந்தது. ஆனால் நாங்கள் இந்த நாட்டை காப்பாற்ற இங்கு முயற்சித்து வருகிறோம்.

சமீபத்திய கூட்டத்தில் காங்கிரஸ் பிரதமர் யார் என்று சொல்லவில்லை. இதனால் காங்., தொண்டர்களே மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிரதமர் வேட்பாளரை எதிர்பார்த்த இவர்களுக்கு 3 சிலிண்டர்தான் கிடைத்தது. பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்., அஞ்சுகிறது. இதற்கு தோல்வி பயமே ! நான் காங்கிரசை கேட்கிறேன், ராஜிவ்காந்தியை பார்லி., போர்டு குழுவா பிரதமராக தேர்வு செய்தது ?


டீ விற்றவன் :


எனது பெயரை டீ விற்றவன் என்று கேலி செய்கின்றனர். ஆனால் இந்த டீ விற்றவனிடம் எப்படி போராட போகிறோம் என நினைத்து அஞ்சுகின்றனர். எனது பணி எனக்கு தெரியும். வலிமை வாய்ந்த காங்கிரஸ் டீ விற்பவரை பார்த்து அச்சமுறுவது ஏன்? நாட்டில் உள்ள அனைத்து டீ விற்பவர்களும் நாட்டின் பெருமை மிக்கவர்களாக தற்போது கருதப்படுகின்றனர். நாடு முழுவதும் டீக்கடை காரர்கள் குறித்த பேச்சு ஹாட் டாப்பிக்காக உள்ளது. டீ விற்றவர் இந்த நாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நடத்த முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர்.

சோனியா தாய் தியாகம் செய்வாரா ? மன்மோகன்சிங்கை எம்.பி.,க்கள் தேர்வு செய்யவில்லை. சோனியா நியமித்தார். இதனை மறுக்க முடியுமா ? வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. மோசமான நிலையில் இந்தியா இருக்கிறது. இது போன்ற ஊழல் நடந்ததை கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் நாங்கள் பார்த்தது இல்லை. தேர்தலில் வெற்றி பெற முடியாது, ராகுல் பிரதமராக முடியாது என்ற காரணத்தினால் தான் அறிவிக்கவில்லை. எந்த தாயாவது (சோனியா ) தனது மகனை தோல்விக்காக தியாகம் செய்ய முன்வருவாரா? அவமானத்தை சந்திக்க நேருமே என்று சோனியா அஞ்சுகிறார்.

ஜனநாயகமே இந்த நாட்டின் பெரும் சொத்து. வெறும் பிரதிநிதிகளாக இருக்க கூடாது. இந்த ஜனநாயகத்தின் உயிராக விளங்க வேண்டும். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுத்திறமையே மற்றொரு மூலதனம் . பல மாநில வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கமிட்டி வேண்டாம்; கமிட்மென்ட் தேவை : ஊழல் நடந்தபோது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு தேவை கமிட்டி அல்ல கமிட்மென்ட் வெளிநாட்டில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வந்தால் இந்த நாட்டை செழிப்படைய செய்ய முடியும். சிறந்த நிர்வாகமும், சிறந்த கட்டமைப்பும் தான் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.

பெண்களுக்கு எதிராக குற்றம் பெருகி வருகிறது. இது இந்தியாவிற்கு அவமானத்தை தருகிறது. மகளிருக்கு எதிரான குற்றம் தடுக்கப்பட வேண்டும்.லட்சக்கணக்கான மக்கள் பா.ஜ.,வில் தற்போது இணைந்து வருகின்றனர். வரும் 2014 ல் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் வட கிழக்கு மாநிலங்களில் பெரும் வளர்ச்சியை தருவோம்.


* காங்கிரஸ் காரர்கள் இந்த நாட்டை தேன் கூடாக நினைக்கின்றனர். நாம் தாயாக உணர்கிறோம்.

*இந்த நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*நாட்டில் வாழும் ஏழைகள் அனைவருக்கும் தங்கும் குடியிருப்புக்கள் வழங்க வேண்டும்.

*வேளாண் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

*குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் கூட்டுறவு சொசைட்டிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும்.

*அனைத்து இந்தியர்களும் தொழில்நுட்ப துறையில் கற்கும் நிலை உருவாக வேண்டும்.

*நாட்டு மக்களின் நலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

*ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையில்லை. ஹெல்த் உத்ரவாதம் தான் தேவை. * வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டும்.

* திறமை, வர்த்தகம், சுற்றுலா முன்னேற்றப்பட வேண்டும். இவைதான் நம்மை உலக அளவில் மதிப்பை உயர்த்த உதவும்.

*நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன்பு தேர்தல் வெற்றிக்காக அத்வானியின் ஆசீர்வாதத்தை பெறுவேன்.

நான் விரும்பும் இந்தியா :

* இந்தியா குறித்து எனது எண்ணம் எல்லாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்,

*வன்முறையற்ற இந்தியா,

* நமது தாய்நாடே பிற நாட்டை விட அனைத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் .

*வாரிசு அற்ற ஊழலற்ற அரசு வேண்டும்.

*நாட்டின் வளர்ச்சிக்கு 5 ' டி '- தேவை, அவை வருமாறு: டேலன்ட் ( திறன்), டிரெடிஷன், (பாரம்பரியம்), டூரிசம் (சுற்றுலா), டெக்னாலஜி ( தொழில்நுட்பம்) , டிரேட் ( வர்த்தகம்) .

இவ்வாறு பேசினார்.

நன்றி-தினமலர்.