Tuesday, 25 July 2017

அரும்பாவூரில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முகமது யாசர் என்ற காம கொடூரனை பஞ்சாயத்து நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை விடுத்துள்ளது...பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்த தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தங்கியிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால் கீற்று கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது கீற்று கொட்டகையினுள் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்தது போல் அங்கு சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் எரிந்து கொண்டிருந்த கீற்று கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஒன்று எரிந்து நாசமானது. மேலும் கட்டிட தொழிலாளர்களின் சமையல் பாத்திரங்கள், உடைமைகள், அரிசி-பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மட்டம் பார்க்க பயன்படுத்தப்படும் கட்டிட தொழில் உபகரணங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது அந்த கீற்று கொட்டகையினுள் ஆள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து போன கீற்று கொட்டகையை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கட்டைகளை எரித்து சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டு இருப்பதும் இந்த கொள்கையின் அடிப்படையில் தான். இது தவிர ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு ஏற்ப தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை அப்போது இருந்த தி.மு.க. அரசு வெளியிட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க வேலைகளும் நடந்தன. 2011-ம் ஆண்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தான் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் காலச்சுழற்சியினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே துறையூர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 70 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக(பொறுப்பு) உள்ள அனிதா தான் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் விபத்தின் போது தலையில் படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் மருத்துவமனையில் இல்லை. மேலும் தீக்காயத்துடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மூளைநரம்பியல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் நவீன வசதிகள் இல்லை. புற்றுநோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் சதைக்கூறு செல்லினை ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறி சிகிச்சைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை தொடங்கி அதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்குமா? என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சரியான பதில் அளிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, www.fo-o-d-l-i-ce nis-i-ng.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராத தொகையினையும் தவிர்க்கலாம்.
மேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் இ – சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர் களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட் களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர் களுக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நட வடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.

Sunday, 23 July 2017


அணுக்கூரில் வயதான முதட்டியிடம் திருட முயன்ற கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து வெளுத்தனர்...