Friday 11 July 2014

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது. இருநூறுக்கும் அதிகமான பல்வேறு வகைப்பட்ட இந்து அமைப்புகள் பங்கு பெறுகின்றன. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம், திருவான்மியூர். தேசபக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து, பயன் பெற வேண்டுகின்றோம் !!! ...
 

Wednesday 9 July 2014


பாஜக தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் புதன்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமையில் புறநகர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் டி. பாஸ்கர், அமைப்பு செயலர் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் கண்ணன், வாசுதேவன், நகரத் தலைவர் குரு. ராஜேஷ், ஒன்றியத் தலைவர்கள் தனபால், சீனிவாசன், ஈஸ்வர் ஆர். மணி, எஸ். மணி, கலைச்செல்வன், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலர் பி.எல். அடைக்கலராஜ், முத்துக்குமார், ராஜாராம், ஆளவந்தார், சுரேஷ், சதீஸ், ஸ்ரீராம் முத்தையா, கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 26, ஆக. 2-ம் தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாம்களில், 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் பங்கேற்க உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கியாளர்களும் தங்களது சேவைப்பகுதிக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 26-ம் தேதி நடைபெறும் முகாமில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், ஆக. 2-ம் தேதி நடைபெறும் முகாமில் வேப்பூர், ஆலத்தூர் வட்டங்கள் மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் பங்கேற்போர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்கல்வி, உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். வேறு மாவட்டத்திலும் கல்வி பயிலலாம். வங்கியாளர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை மாணவ, மாணவிகள் கொண்டு வந்தால், உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவரும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கடன் முகாமில் தேவைப்படும் இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்கும் சிறப்பு பகுதி அமைக்கப்பட உள்ளது.
கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவம், பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் அல்லது
ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97885 32233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 -தினமணி. 
சென்னை: மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில்  59% மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாக மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார். ஆனால் 60% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று கூறி, அந்த வங்கி கடன் வழங்க மறுத்து விட்டதாக மனுவில் அவர் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரருக்கு கல்வி கடன் வழங்க உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சமந்தப்பட்ட வங்கி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை  மேம்படுத்தவே கல்வி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறினர். கல்வி கடனுக்கு வங்கிகள் வட்டி வசூல் செய்யும் நிலையில் 60% மதிப்பெண் என்ற வரம்பை நிர்ணயம் செய்யக்கூடாது எனக் கூறி வங்கியின் மேல் முறையிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் v.kalathur seithi .

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு காலி மனையுடன் மாதம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
கடந்த 2008ம் ஆண்டு திருமாந்துறை, பென்னகோணம், அயன்பேறையூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசால் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது, பென்னகோணம் கிராமத்தில் உள்ள நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
இதற்காக, நில உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தகுதி அடிப்படையில் வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை தருகிறோம், ஒரு காலிமனை தருகிறோம் எனக்கூறி பத்திரம் அச்சிட்டு கொடுத்த பிறகே மாவட்ட நிர்வாகத்தை நம்பி நிலங்களை வழங்கினோம்.
ஆனால், நிலங்கள் கையகப்படுத்திய பிறகு திட்டத்திற்கான பூர்வாங்கப் பணி இதுவரை எதுவுமே நடைபெறவில்லை. நிலங்களை வழங்கியவர்களுக்கு உறுதியளித்தபடி வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. 2008-ல் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்றியும், சொந்த நிலத்தை வழங்கியதால் விவசாயத்திற்கு வழியின்றியும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
எனவே, நிலம் வழங்கியோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒருவருக்கு 1 மாதத்திற்கு ரூ. 20 ஆயிரத்தை பெற்றுத் தர வேண்டும். மேலும், பத்திரம் வைத்துள்ள அனைத்து நபர்களுக்கும் காலிமனை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை, அப்பகுதியில் மதில் சுவர் எழுப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர v.kalathur seithi.

-தினமணி.
.
அன்னமிடும் கை?
அன்னமிடும் அம்மா…

மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம்.
தமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே.
அதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான பாரதீய கிசான் சங்கம் போராடியபோதும் கூட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர அவர் மறுத்தார். அதேசமயம், தரமான மும்முனை மின்சாரத்தை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே தான் குஜராத் இன்று முன்னுதாரண மாநிலம் ஆகியிருக்கிறது. இன்று நாட்டிற்கு ஒரு செயலூக்கம் மிகுந்த பிரதமரை அளித்தது, இந்த தொலைநோக்குப் பார்வையே.
மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முந்தைய ஆட்சியைச் சொல்லலாம். அதனால் தான் மக்களிடையே செல்வாக்கிழந்து இன்று தனிமரமாகி இருக்கிறார் அக்கட்சியின் தலைவி மாயாவதி.
.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:
தமிழகத்தில் ஆளும் ஜெயலலிதாவின் ஆட்சியை இரண்டாம் வகைக்குள் தான் கொண்டுவர வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இங்கு வழங்கப்படுகிறது. ஆனால், மின்வெட்டுப் பிரச்னை இங்குதான் அதிகமாக உள்ளது.
தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை?
தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை?

விவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் மின்சாரம் கிடைக்காதபோது அது இலவசமாயினும் என்ன பயன்? ஆனால், இந்த இலவச மின்சாரத்தால் மின்வாரியம் கிட்டத்தட்ட தரைதட்டி நிற்கும் கப்பலின் நிலையை அடைந்திருக்கிறது.
உதாரணமாக, 2011- 2012 நிதியாண்டில், விவசாயிகளின் மின்சார உபயோகம் 1,090.30 கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்ய, ரூ. 5.98 செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தக் கணக்குப்படி,  விவசாயப் பயன்பாட்டுக்கு,  ரூ. 6,520 கோடி செலவாகும். ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி,  தமிழக அரசிடம் வெறும்  ரூ. 290 கோடி மட்டுமே,  தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்  மட்டும், ரூ. 6,230  கோடி.
நிதிநிலைமை மோசமாக இருப்பதால் சுமார் 25,000 பணியிடங்களை நிரப்பாமல் விட்டுவைத்திருக்கிறது மின்வாரியம். போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதபோது அத்துறை எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும்?
மக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, மின்வாரியம் போன்ற பொதுத்துறை அமைப்புகளை சீரழியாமல் காப்பதும் அவசியம். அதற்கு அரசிடம் கவர்ச்சி அரசியலை மீறும் தொலைநோக்குப் பார்வை இருந்தாக வேண்டும். ஆனால், இலவச அரசியலே பிரதானமாகிவிட்ட தமிழகத்தில், மாநில மக்களும் சிறிது தரம் உயர வேண்டும். மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கும் வரை, அவர்களுக்கான உடனடி லாபம் தராத தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.
இந்நிலையில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சில திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
.
இலவச பேருந்துப் பயணம்:
இலவச பேருந்து பயண அட்டை வழங்கல்
இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கல்

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் பல்லாண்டுகளாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 28.5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இதற்காக அரசு ரூ. 310 கோடி செலவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன் பெறவும் இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இவற்றை வெறும் கவர்ச்சி அரசியலாகக் கருத முடியாது. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலம் பெறவும் இத்திட்டங்கள் அவசியமானவையே. அதேசமயம், இதனால் ஏற்படும் செலவினம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களின் நலிவில் நலத்திட்டங்களை நீண்டகாலத்திற்குச் செயல்படுத்த முடியாது. இத்தகைய திட்டத்தை அரசு அறிவிக்கும்போது தெரிவிக்கப்படும் செலவினம் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படாவிட்டால், தரமான சேவையை அவற்றால் எவ்வாறு வழங்க முடியும்?
.
‘அம்மா’ திட்ட முகாம்:
அடுத்து ‘மக்களைத் தேடி வருவாய்த் துறை’ என்ற திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதனை சுருக்கமாக ‘அம்மா’ திட்டம் (Assured Maximum service to Marginal people in All Village- AMMA) என்கிறார்கள்.
’அம்மா’ திட்ட முகாம் அறிவிப்பு
’அம்மா’ திட்ட முகாம் அறிவிப்பு

பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தங்கள்,   வருமானம்/  ஜாதி/ குடியுரிமை/ இருப்பிடச் சான்றிதழ்கள், பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், வாரிசுச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்,  இரு பெண்குழந்தைகள் பிறந்ததற்கான சான்று, முதியோர் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான சான்று போன்ற தேவைகளுக்காக  மக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்துக் காத்திருப்பதற்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கிறது.
இதன்படி வருவாய்த் துறை அதிகாரிகளே ஒவ்வொரு ஒன்றியத்திலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் சென்று மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று, அங்கேயே அவற்றுக்கு நிவர்த்தி காண்கிறார்கள். உடனடி நிவர்த்தி காண இயலாத மனுக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிவு காணவும் உறுதி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் ஓரளவிற்கு நல்ல முறையிலேயே இதுவரை இயங்கிவருகிறது. இத்திட்டம் துவங்கிய 24.02.2013 முதல் 19.06.2014 வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 33.14 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவற்றுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் கட்சிப் பிரமுகர்களும் இதனை தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் காண முடிகிறது. இலவசத் திட்டங்களை வழங்கும் நிகழ்வாகவும் அம்மா முகாம்கள் மாறி வருவதைக் காண முடிகிறது.
இத்திட்டம் அரசு நிர்வாகம் மக்களைத் தேடிச் செல்லும் நல்ல திட்டம். இதனை பிற மாநிலங்களும் இப்போது கண்காணித்து தாங்களும் நடைமுறைப்படுத்த விழைவதாக தகவல்கள் கூறுகின்றன. இத்திட்டம் எந்த அதிகாரியின் மூளையில் உதித்திருந்தாலும், அவர் பாராட்டுக்குரியவர். அதிலும், திட்டத்தின் பெயரிலேயே ‘அம்மா’ என்று வருவதாக அமைத்த அதிகாரியின் மூளையை தனியே பாராட்ட வேண்டும்.
.
அம்மா உணவகங்கள்:
கடும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் உணவுக்குத் திண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மலிவுவிலை உணவகத் திட்டம்  ‘அம்மா உணவகம்’ என்ற நாமகரணம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் சோதனை முயற்சியாக 19.02.2013-இல் துவக்கிவைக்கப்பட்ட இத்திட்டம், அதன் வெற்றியால் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தில் அறிவிப்புப் பலகை
அம்மா உணவகத்தில் விலைப்பட்டியல்

இத்திட்டத்தின் படி, காலை 7 மணிமுதல் 10 மணிவரை, அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மாலை தலா 2 ரூபாய் விலையில் 3 சப்பாத்திகள் கிடைக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள அம்மா உணவகங்களில் நீண்டு நிற்கும் மக்கள் கூட்டமே இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி.
முதலில் சென்னையில் 15 இடங்களில் துவங்கிய அம்மா உணவகம், பிற்பாடு அங்குள்ள 200 வார்டுகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. அடுத்து, பிற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. தற்போது மாவட்டத் தலைநகரங்களிலுள்ள 27 அரசு மருத்துவமனைகளிலும் 124 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இத்திட்டத்தின் நிதி ஆதாரம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே. உதாரணமாக, கோவை மாநகராட்சியில் இயங்கும் 10 அம்மா உணவகங்களால் ஏற்படும் செலவாக ரூ. 2.70 கோடி மதிப்பிடப்பட்டு, பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு நேரடி நிதிச்சுமை குறைவு; அதேசமயம், அரசுக்கு நல்ல பெயரும் கூட. இதனால் தினசரி லட்சக் கணக்கானோர் பயனடைகின்றனர். இத்திட்டத்தை விரைவில் ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்த தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளது.
தனியார் உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை அதீதமாக உயர்வதை அம்மா உணவகம் குறிப்பிட்ட அளவிற்கு தடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதால் மகளிர் மேம்பாடும் சாத்தியமாகிறது. எனினும், இதில் உள்ள ஆளுங்கட்சியினரின் தலையீடும், ஆங்காங்கே துவங்கியுள்ள உணவுப்பொருள் கொள்முதல் ஊழலும் எதிர்காலத்தில் பிரச்னையாகலாம்.
.
அம்மா குடிநீர்:
தாகத்திற்கு நீர் கேட்டால் ஓடோடி வந்து தருவது தான் தமிழ் மரபு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் குடிநீர் வர்த்தகம் தான் தமிழகத்தில் அதிகபட்ச லாபம் தரும் தொழிலாகி இருக்கிறது. சுத்தமான குடிநீர் என்பது அரசால் உறுதிப்படுத்தப்படாதபோது, சுகாதாரம் காக்க தனியார் நிறுவனங்களை மக்கள் நாடுவது தவிர்க்க இயலாதது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மழைக்காலக் காளான்கள் போலப் பெருகின. ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புட்டி ரூ. 20-க்கு மேல் விற்பனையாகிறது. பயணங்களின்போது தூய்மையான நீர் தேவை என்பதால் மக்களும் இந்த விலையைப் பொருட்படுத்துவதில்லை.
அம்மா குடிநீர்
அம்மா குடிநீர்

இதன் அடுத்தகட்டமாக வீடுகளுக்கும் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலைக்கு வந்தது. தற்போது 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் கேனில் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. ஆனால், இந்தக் குடிநீர், சுத்திகரிப்பு விதிகளின்படி முழுமையாகவும் சுகாதாரமாகவும், தர அளவுகோல்களின்படியும் சுத்திகரிக்கப்பட்டதா என்பதை நுகர்வோர் அறிய முடியாது. தரச் சான்றிதழ் பெறாத பல நிறுவனங்கள் கூட நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், இதிலும் அரசு களத்தில் குதித்தது. 15.09.2013-இல் துவங்கிய அம்மா குடிநீர் திட்டம், காண்பதற்கு மலிவுவிலை திட்டம் போலத் தெரிந்தாலும், இதில் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. உண்மையில் அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் டாஸ்மாக் போல இதுவும் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக மாறக்கூடும்.
பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட ‘அம்மா குடிநீர்’ ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தினசரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் குடிநீர் புட்டிகள் விநியோகம் ஆவதாகத் தகவல். மேலும் பல இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்க அரசு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
அடிப்படைத் தேவையான குடிநீரை விற்பனைக்கு அரசே கொண்டுவரலாமா என்ற கேள்விகள் எழுந்தாலும், பயணங்களில் செல்வோருக்கு உதவும் இத்திட்டம் தேவையானதே. இதனுடன் ஒப்பிடுகையில் ஐஆர்சிடிசி-யால் விநியோகிக்கப்படும் ரயில் குடிநீரின் விலை அதிகமே.
அம்மா குடிநீர்த் திட்டம் மற்றொரு உண்மையையும் அம்பலப்படுத்துகிறது. கேன்களில் விற்கப்படும் குடிநீரின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ. 1.20 மட்டுமே. அதையே புட்டிகளில் அடைத்து முத்திரைப் பெயருடன் விற்பனை செய்கையில் தனியார் ரூ. 20 வரை விற்கின்றனர். இதையே அரசு ரூ. 10-க்கு விற்கிறது. அதாவது குடிநீர் வ்ர்த்தகத்தில் நியமம் ஏதும் இல்லை என்பதும், தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வெளிப்படை. அரசே கூட குடிநீரை ரூ. 5-க்கு தர முடியும். தனியார் நிறுவனங்கள் மீது நிர்பந்தம் செலுத்தி, அவர்களது தயாரிப்பின் விலையையும் அரசால் ரூ. 10-க்குள் குறைக்க முடியும்.
.
அம்மா உப்பு:
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இதனை உணர்ந்தோ என்னவோ, மலிவுவிலை உப்பை தமிழக அரசே தயாரித்து விற்பனையைத் துவக்கி உள்ளது. குடிநீர் விற்பனை போலவே இதிலும் மாநில அரசு வர்த்தக லாபநோக்குடன் செயல்பட்டுள்ளது. அதேசமயம் வெளிச்சந்தையில் டாடா, ஐடிசி போன்ற பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்பின் விலையில் சரிபாதியாக இருப்பதால், இந்த உப்பு மக்களிடையே பிரபலமாகும் வாய்ப்புள்ளது.
மூன்று வகையில் அம்மா உப்பு
மூன்று வகையில் அம்மா உப்பு

ஏற்கனவே, பொதுவிநியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு ரூ. 2.50-க்கும் தூள் உப்பு ரூ. 4.50-க்கும் விற்பனையாகி வருகிறது. புதிய வடிவிலான அம்மா உப்பின் வருகையால் அவை காலாவதியாகலாம்.
இத்திட்டத்தின்படி, இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு,  குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் வகை உப்பு கிலோ ரூ. 14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ. 10-க்கும், 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த உப்பு மாநில அரசுக்கு வருவாயுடன் நல்ல பெயரையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1974-இல் தமிழ்நாடு உப்புக் கழகம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினைப் பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என லாபமீட்டும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே அம்மா உப்பைத் தயாரிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்றுமதியாகும் சாதாரண உப்பின் விலை கிலோ ஒரு ரூபாய் கூட இல்லை. அதுவே சுத்திகரிக்கப்பட்டது என்ற நாமகரணம் பெறும்போது மதிப்பு கூடிவிடுகிறது.
கூட்டுறவு அங்காடிகள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்கள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 வரை வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. மொத்தத்தில் அம்மா உப்பு திட்டம் மக்களுக்கு சிறு சேமிப்பை அளிப்பதுடன், அரசு கருவூலத்திற்கு வருவாய் ஏற்படுத்துவதாக உள்ளது.
.
அம்மா மருந்தகங்கள்:
தமிழகத்தில் பெருகியுள்ள  ‘அம்மா ஜூரத்தின்’ அடுத்த வெளிப்பாடே அம்மா மருந்தகம். ஏற்கனவே கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் அத்தியாவசிய மருந்துகள் விற்கப்படுகின்றன. இதையே  ‘அம்மா மருந்தகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 26.06.2014-இல் துவக்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விரைவில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அம்மா மருந்தகங்கள் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அம்மா மருந்தகம்
அம்மா மருந்தகம்

‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டிய மருந்துகள் இங்கே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளும் உள்ளன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வரவழைக்கப்படும். இதற்காக அவர்கள் கேட்கும் மருந்துகள் இல்லையென்றாலும், கணினியில் பதிவு செய்து பின்னர் அந்த மருந்தை வரவழைத்து வழங்குவோம்’ என்று கூறியுள்ளார் அம்மா மருந்தக நிர்வாகி ஒருவர். இதற்கென நடப்பாண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ரூ. 500-க்கு மேல் மருந்து வாங்குவோருக்கு வீடுகளிலேயே மருந்துகளை வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எனினும், சில தனியார் மருந்தகங்களில் 20 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி அளிக்கப்படும்போது அரசு மருந்தகங்களில் தள்ளுபடியை அதைவிட அதிகமாகவே தர முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அம்மா மருந்தகங்கள் மக்களிடம் பெறும் செல்வாக்கின் அடிப்படையில், அரசு மேலும் விலையைக் குறைக்கக் கூடும்.
.
வர்த்தக முத்திரை நல்லதா?
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து செயல்படுவதில் ‘அம்மா’ ஆட்சி முன்னிலையில் உள்ளதை மேற்படித் திட்டங்கள் காட்டுகின்றன.
எங்கும், எதிலும்...  ‘அம்மா’ முத்திரை
எங்கும், எதிலும்… ‘அம்மா’ முத்திரை

அடுத்ததாக, அம்மா தேயிலை விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக எங்கும் எதிலும் ‘அம்மா’ என்ற தனித்துவ முத்திரையைப் பதிப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
வர்த்தகத்தில் ‘பிராண்ட்’ எனப்படும்  வர்த்தக முத்திரையை உருவாக்குவது முக்கியமானதாகும். அரசியலும் வர்த்தகமாகிவிட்ட தற்போதைய சூழலில், தமிழகத்தில் நலத்திட்டங்களும், மலிவுவிலை திட்டங்களும் ‘அம்மா’ என்ற பிராண்ட் பெறுவதை காலத்தின் கோலமாகவே காண வேண்டும்.
தமிழக அரசியலில் அம்மா புகழ் பாடுவதே  பிழைக்கும் வழியாக மாறிவிட்டதை, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சில் தூக்கலாகத் தென்படும் அம்மா புராணத்தில் இருந்தே அறியலாம்.  இதை  ‘அம்மா’ விரும்புகிறார்களோ இல்லையோ, தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள  ‘அம்மா பாராயணம்’ செய்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி அதிமுக-வில் உருவாகிவிட்டது.
இது உண்மையில் மக்களிடையே அம்மா எனப்படும் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரையே உண்டாக்கும். 1991- 1996 காலகட்டத்தில் இப்படி அம்மா புகழ் பாடியபடி ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகமே இன்னமும் பல வழக்குகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.  அளவுக்கதிகமான புகழ்ச்சி  யாரையும் நிலைகுலையச் செய்து தடம்புரள வைத்துவிடும் அபாயம் உள்ளது.
‘அம்மா முத்திரை’யும்  ‘அம்மா பாராயணமும்’ அதிமுகவினருக்கு நல்லதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த கலாச்சாரம் தமிழகத்திற்கு நல்லதா? கெட்டதா?
மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் கதாநாயகன் வேலு நாயக்கர் கூறுவதுபோல “தெரியலையே” என்றுதான் கூற வேண்டியுள்ளது.
(நிறைவு)

நன்றி-தமிழ் இந்து.
‘தோட்டத்தில் பாதி கிணறு என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப படிக்கும் எவரும், அதிலுள்ள விலையில்லாத் திட்டங்களுக்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைக் காண முடியும்.
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் மரத்தடி வகுப்பு
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில்   மரத்தடி வகுப்பு

தவிர, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் இதேபோன்ற இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவ மாணவிகளின் விலையில்லாத் திட்டங்களுக்கு திசை திருப்பப்படுகிறது; சமூகநலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருமணத் திட்டத்திற்கு பயனாகிறது.
இது தவறு என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு துறையிலும் கவர்ச்சி அரசியலைத் தாண்டிச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பல பணிகள் உள்ளன. அதற்கான நிதி போதிய அளவுக்குக் கிடைக்காததால் அத்துறைகளின் வளர்ச்சியை எட்ட முடிவதில்லை.
உதாரணமாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான கட்டட வசதியும் ஆசிரியர் பணியிட உருவாக்கமும் அரசின் முக்கியமான கடமை. ஆனால், அதற்குரிய நிதி பெரும்பாலும் கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் உயர்ந்த தரத்துடன் கல்வி கற்பித்தலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கு சமூகநலத்துறையின் நிதி செலவிடப்படுவது ஏற்கத் தக்கதே. ஆனால், ஆதரவற்றோர் நலம், முதியோர் நலம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டுமே. அதற்கான நிதி அத்துறைக்கு கிடைப்பதில்லை. இதற்கு, முன்யோசனையின்றி தடாலடியாக அறிவிக்கப்பட்டும் கவர்ச்சி அரசியல் திட்டங்களே காரணம்.
மத்திய அரசிடம் நிதிக்கு கெஞ்சல்:
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை

இதன் காரணமாகவே மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் கூட மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனுவை அளித்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, ரூ. 3.54 லட்சம் கோடி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதி வரம்பில் வருபவை. உதாரணமாக, கீழ்க்கண்ட சில கோரிக்கைகள் கவனத்திற்குரியவை:
தமிழக காவல் துறையை நவீனப்படுத்த, ரூ. 10 ஆயிரம் கோடி  வழங்க வேண்டும்; தமிழகத்தில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளநீர் கால்வாய் இணைப்புக்கு, ரூ. 1,862 கோடி வேண்டும் (கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து அரசுகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளன) ; பெண்ணையாறு- பாலாறு இணைப்புக்கு, ரூ. 500 கோடி; காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு, ரூ.  5,166 கோடி; தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டுமரங்களை மோட்டார் படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 9 கோடி; ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தேவையான,  உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள,  ரூ. 420 கோடி; மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்த,  ரூ. 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு,ரூ. 10 கோடியாவது ஒதுக்க வேண்டும். காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, ரூ. 11,421 கோடி வழங்க வேண்டும்.
இவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப் படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று சொல்கிறார்களோ?
மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கும் வரவினங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், மத்திய நிதிநிலையே வலுவாக இல்லாத நிலையில், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும்போது மத்திய அரசால் என்ன செய்ய முடியும்?
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  ‘தமிழகத்தின் தேவைகளை மன்மோகன் அரசு புறக்கணிக்கிறது; மாநில அரசு கோரும் நிதியில் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிவந்தார். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கண்டித்திருக்கிறார். அவர்தான் இப்போது நாட்டின் பிரதமர்.  ‘அனைத்து மாநிலங்களும் சம உரிமையுடன் நடத்தப்படும்’ என்ற அவரது அறிவிப்பு அனுபவப்பூர்வமானது.
அதேசமயம், மத்திய அரசால் பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பதால் யாருக்கு லாபம்? தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு இலவச (விலையில்லா) திட்டங்களில் செலவழிக்கப்படும் நிதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலே தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைமை வராதே? வரவுக்கேற்ற செலவு தானே நிம்மதியான பொருளாதாரச் சூழலை அளிக்கும்?
விலையில்லாத் திட்டங்கள் ஏழை, எளியவருக்கானவை; அவற்றின் பயனாளிகளைக் கட்டுப்படுத்த வருமான வரம்பு கண்டிப்பாக அவசியம். அவ்வாறில்லாமல், வாக்களிக்கும் அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்று எண்ணுவது தேர்தல் அரசியலுக்கு உதவுமே ஒழிய, ஏழை மக்களுக்கு நலம் சேர்க்காது.
அதிமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இப்போதே 2 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மீதமுள்ள காலத்தில் அரசின் நலத்திட்டங்கள், உண்மையாகவே தேவைப்படும் கடையருக்குச் சென்றுசேர வேண்டும். அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் என்ற கோஷம் அதற்கு உதவாது. தவிர, மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தொடரவே வழிவகுக்கும்.
அபாயமான அஸ்திவாரம்:
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?

தமிழக அரசின் விலையில்லாத் திட்டங்கள் பல மாநிலங்களாலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகின்றன. இத்திட்டங்களை அப்படியே நகலாக்கம் செய்ய பல மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இலவச மடிக்கணினித் திட்டம் உத்தரப் பிரதேசத்திலும், மிதிவண்டித் திட்டம் பிகாரிலும் பின்பற்றப்படுகின்றன. அம்மா உணவகத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களே ஆய்வு செய்கின்றன. இவை பெருமைக்குரியவையே. ஆனால், இத்திட்டங்கள் எந்தக் கட்டுமானத்தின் மீது எழுப்பப்படுகின்றன என்ற கேள்வியும் அத்தியாவசியமானது.
தமிழகத்தின் பெரும்பாலான விலையில்லாத் திட்டங்களுக்கு நிதி வழங்குவது, தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அளிக்கும் மது விற்பனை வருவாயே என்ற தகவல் எளிதாகக் கடந்துபோகக் கூடியதல்ல. இந்த நிதி போதாமல் தான் மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. அப்போது அதன் முதலீட்டுத் தொகை ரூ. 15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 21,500 கோடி. 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மடங்கு வளர்ச்சி. நாட்டில் வேறெந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது. ஆனால் இது நிதர்சனத்தில் ‘வளர்ச்சி’ தானா?
மது விற்பனையை தனியார் மூலம் (ஏலமுறையில்) நடத்திவந்த அரசு 2003 -04 இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2,828 கோடி. 2012- 13-இல் இது ரூ. 21,500 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2010- 2013) மட்டும் ரூ. 55,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
tn_Data
டாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்

அண்மையில் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம்  பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்,  “டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ. 23,401 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதில் விற்பனை வரியாக ரூ. 17,533 கோடியும்,  கலால் வரியாக ரூ. 5,868  கோடியும்  செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 26,295 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் ரூ. 19,812 கோடி விற்பனை வரியும்,  ரூ. 6,483 கோடி கலால் வரியும் கிடைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, 2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது.
இதைத் தான் “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று ஆவேசத்துடன் கேட்பார் மகாகவி பாரதி. இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில் தான் தங்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன என்ற உண்மையை சாமானிய தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா?
எனவே தான் பல்வேறு சமூகநல இயக்கங்களின் தொடர் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் மதுவிற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தனது அரசியல் வெற்றிக்காக இலவசங்களை வழங்கும் கவர்ச்சி அரசியலைக் கட்டவிழ்த்துவிடும் தமிழக திராவிட அரசியல்வாதிகள் (இவ்விஷயத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேறு வேறல்ல), தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாவது பற்றி ஏன் அச்சம் கொள்வதில்லை?
தமிழகத்தின் எந்தத் தெருவிலும் வீழ்ந்து கிடப்பது போதை ஆசாமிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமும் தான் என்பதை ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உணர மறுக்கிறார்?
1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்டம் (பி.ஏ.பி.), பவானிசாகர், அமராவதி உள்ளிட்ட அணைக்கட்டுகளும், துவக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்.எல்.சி.), திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை போன்ற பெருந்தொழில் நிறுவனங்களும் தான் இன்றும் தமிழகத்தை வாழவைக்கின்றன.
கல்விக்கண் திறந்த காமராஜர்
கல்விக்கண் திறந்த காமராஜர்

அவரும் இலவசம் வழங்கினார்-  ஏழை மாணவர்கள் வயிறார உண்டால் தான் கல்வி செழிக்கும் என்றுணர்ந்து இலவச மதிய உணவுத் திட்டத்தை அவர்தான் கொண்டுவந்தார். அதன்மூலமாக கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்த்தார். அத்திட்டம் தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாறியது. தற்போது அதில் முட்டை, கலவை சாதங்கள் வழங்கல் என்று திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் இலவசம் கவர்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. தற்போதைய திட்டங்களை அவ்வாறு ஒப்பிட முடியுமா?
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எதிர்காலத்தில் எவ்வாறு நினைவுகூரப்படப் போகிறது? போதையில் தமிழகம் தள்ளாடக் காரணமான ஆட்சியாகவா? விலையில்லாத் திட்டங்களுக்காக தங்களை அறியாமலேயே அடகு வைத்த பரிதாபமான மக்களிடம்  ‘விலையில்லாக் கையூட்டு அளித்து’ செல்வாக்குப் பெற்ற ஆட்சியாகவா?
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் காட்சி, எங்கும் அம்மா, எதிலும் அம்மா என்பதாகவே இருக்கிறது. இதன் உடனடி அரசியல் சாதகங்கள் புலப்படுவது போலவே, எதிர்கால வீழ்ச்சியின் தடயங்களும் தென்படுகின்றன. அவ்வாறு தமிழகம் வீழுமானால், அதற்கும் அம்மாவின் இணையற்ற ஆட்சியே காரணமாக இருக்கும்.
எனினும், இலவசங்களை வாரி இறைக்கும் விலையில்லாத் திட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் மட்டுமே அமலாகிவரும் சில பிரத்யேகத் திட்டங்களும் கவனத்திற்குரியவை.  ‘அம்மா’வை கடுமையாக விமர்சிக்கும்போது, இத்திட்டங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உதாரணமாக, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள்,  விற்பனையாகும் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அண்மையில் துவக்கப்பட்ட அம்மா மருந்தகம்,  ‘அம்மா முகாம்’ எனப்படும் மக்களைத் தேடி வருவாய்த்துறை முகாம்கள் போன்றவை மாநிலம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரவலாக நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி-தமிழ் இந்து.
JeyaFree1
தமிழக இல்லத்தரசிகளைக் கவரும் விலையில்லா திட்டங்கள்…

ஒரு மக்கள்நல அரசு என்பது எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். சமுதாயத்தில் வலிவுள்ளோர் பெறும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் எளியோர் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலைக்கு எளியோர் தள்ளப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் தடைப்படும். எனவே தான் மக்களாட்சி முறையில் எளியோரின் நலமே பிரதானம் என்ற கருத்து உருவானது. ஆனால், எளியோர் யாவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. வாக்குவங்கி அரசியலே மக்களாட்சி முறையைத் தீர்மானிப்பதால், எளியோரை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிடுவது சிரமமான காரியமாகி விடுகிறது. இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள்.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இலவசத் திட்டங்களும் (விலையில்லா திட்டங்கள் என்கிறது அரசு), மலிவுவிலை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே அண்மையில் நடைபெற்ற லோக்சபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற கருத்தும் உண்டு.
இலவச கலாசாரம் துவங்கிய பின்னணி:

Free tv
திமுகவின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் துவக்கம்

தமிழகத்தில் இலவச கலாசாரத்தைத் துவக்கிவைத்தவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தான். அவருக்கு முன்னரே பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை, புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்டவை வழங்குவதை எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதலவர்களாக இருந்தபோதே துவக்கி இருந்தாலும், சாமானிய மக்களுக்கு இலவசப் பொருள்கள் வழஙகப்பட்டது கருணாநிதி ஆட்சியில் தான். அவரது சமத்துவபுரம் திட்டம் கூட, திமுகவுக்கு சாதகமான வாக்காளர் படையை உருவாக்கும் நோக்கம் கொண்டதே.
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் (2006- 2011) வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் மாநிலம் முழுவதும் 50 சதவீத மக்களுக்கு மேல் சென்று சேர்ந்தன. அதில் வேடிக்கை என்னவென்றால், தொலைக்காட்சிப் பெட்டி வாங்க வசதி இல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம், தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வால், அனைவருக்குமான திட்டமானது. அதன் காரணமாக, வசதி உள்ளவர்களும் கூட- வீட்டில் நவீன தொலைக்காட்சி வைத்திருந்தவர்களும் கூட- தமிழக அரசின் இலவச வண்ன தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க முண்டியடித்தனர். தமிழக அரசும், இருப்போர்- இல்லாதார் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவித்தது. இலவச சமையல் எரிவாயு இணைப்புடன் அடுப்பு வழங்கபட்டதும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான்.
அதன்மூலமாக, இலவச கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியது. தவிர, எளியோருக்கு உதவ வேண்டும் என்ற திட்டத்தின் நோக்கமும் புதையுண்டது. அதாவது, தேர்தலில் மக்களின் வாக்குகளை வெல்வதற்கான உபாயமாக, முன்கூட்டியே வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் கையூட்டாக தொலைக்காட்சிப் பெட்டி மாறியது.
JeyaFree 3
விலையில்லா மடிக்கணினி திட்டம்

இந்த உபாயத்தை வெல்ல, அதிமுக தலைவி ஜெ.ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதே, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என்ற தேர்தல் பிரசார உறுதிமொழி. சொன்னது போலவே, தேர்தலில் வென்று முதல்வரானவுடன், இம்மூன்றையும் அளிக்கத் துவங்கினார் ஜெயல்லிதா. ஒரே வித்யாசம், கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி  ‘இலவசம்’ என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் வழங்கப்படும் இலவசப் பொருள்கள்  ‘விலையில்லாப் பொருள்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது.
தற்போதைய சூழலில் மின்விசிறியோ, கிரைண்டரோ, மிக்ஸியோ இல்லாத வீடுகள் குறைவு என்பதால், வீட்டில் ஒன்றுக்கு மேல் இவற்றை வைத்திருப்பதை விட விற்பதே மேல் என்ற எண்ணத்துடன் இவை விற்கப்படுகின்றன. தவிர, இத்திட்டத்திலும், எளியோர் அடையாளம் காணப்படாமல், இருப்பவர்- இல்லாதவர் உள்ளிட்ட  அனைவருக்கும் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அரசு உண்மையில் எளியோர் மீது அக்கறை கொண்டிருந்தால் வருமான அடிப்படையில் இவற்றை ஏழைகளுக்கு மட்டும் வழங்க முடியும். ஆனால், அதனால் பிறரது அதிருப்தியைச் சந்திக்கும் திராணியின்றி, அனைவருக்கும் அவற்றை அள்ளி வழங்குகிறது அரசு. மதுரையில் இரவில் பலரது வாசல் கதவைத் தட்டிய பொற்கைப் பாண்டியன் கதையைப் போலத்தான் இது இருக்கிறது.
ஒரு மக்கள்நல அரசு, வாக்குகளின் அடிப்படையில் சிந்திக்காமல், ஏழை மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களை தரம் உயர்த்துவது தான் சரியாக இருக்கும். ஆனால், தேர்தல் அரசியலை மனதில் கொள்ளும் எவரும், ஏழைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் துணிச்சல் இல்லாதவர்களாகி விடுகின்றனர். இதற்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே விதிவிலக்கல்ல. எது எப்படியோ, தமிழகத்தில் இலவச அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. இதன் வெற்றியைக் கண்டு, பிற மாநிலங்களும் இத்திட்டங்களை சுவீகரிக்க முயற்சிக்கின்றன.
விலையில்லாத் திட்டங்களின் பெருக்கம்:

JeyaFree 4
பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் 

தமிழகத்தில் தற்போது விலையில்லா நலத்திட்ட உதவிகள் பல வகைகளில் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. தவிர கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கணினி வழங்கப்படுகிறது.
2001-12 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான மூன்றாண்டுகளில் சுமார் 17 லட்சம் லேப்டாப் கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திட்ட மதிப்பு ரூ. 2,500 கோடி. நிகழும் 2014-15 நிதியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து அதிமுக அரசின் பிரதானத் திட்டமான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டம் மாநிலம் முழுவதும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கிராமப்புறங்களிலும் அடுத்து நகர்ப்புறங்களிலும் இத்திட்டம் சென்று சேர்ந்து வருகிறது.  இதுவரை 1.05 கோடி வீடுகளை இத்திட்டம் சென்று சேர்ந்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. அதிமுக ஆட்சியின் மீதமுள்ள இரு ஆண்டு காலத்திற்குள் மேலும் 35 லட்சம் வீடுகளை இத்திட்டம் சென்று சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டதிலும், உதகை, கொடைக்கானல் போன்ற குளிர்ப்பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று, அப்பகுதிகளில் மின்விசிறிக்குப் பதிலாக விலையில்லா மின்சார வெப்பமூட்டி (ஹீட்டர்) வழங்கப்படுகிறது.
இது கலைஞரின் பொங்கல் பரிசு!
இது கலைஞரின் பொங்கல் பரிசு!

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமலாகியுள்ளது. இதன்படி, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் (அரை பவுன்) தங்கத்துடன் நிதி உதவியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை பல்லாயிரக் கணக்கான பெண்கள் பலனடைந்துள்ளனர். தவிர, பார்வையற்றோர் திருமணத் திட்டத்தில், ரூ. 15,000 நிதியுதவியும் அரசால் வழங்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில் தகுதியுள்ள 1.80 கோடி குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் தலா 18 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அரிசியின் தரமின்மை காரணமாக இத்திட்டம் முழுமையாகப் பயனளிக்கவில்லை. எனினும், வருமானத்திற்கே வழியில்லாத ஏழை மக்கள் பசியாற இத்திட்டம் உதவி வருகிறது. இத்திட்டம் மத்திய அரசின்  ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் பிரதிபலிப்பே. இத்திட்டத்திலும், தகுதியுள்ள பயனாளிகள் மட்டும் வடிகட்டப்படுவது, அரசின் திட்டம் தேவையானோர் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருள்கள் திட்டம் வித்யாசமானது. இதனை வழக்கம்போல கருணாநிதி துவக்கிவைத்தார். இதனை அடுத்த நிலைக்கு ஜெயலலிதா கொண்டுசென்றிருக்கிறார். தைப்பொங்கலிட பச்சரிசி ஒரு கிலோ, அரை கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய தொகுப்புப் பையை உதயசூரியன் சின்னத்துடன் இலவசமாக வழங்கி மகிழ்ந்தார் முந்தைய முதல்வர் கருணாநிதி. அதையே, கூட நூறு ரூபாய் (நோன்புக் காசு?) செலவுக்கு ரொக்கமாகவும் வழங்கி, ஜெயலலிதா உருவப்படத்துடன் தற்போதைய  ‘அம்மா’ ஆட்சி வழங்குகிறது. இந்த நூறு ரூபாயை வாங்க மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பாதிப்பவரும் ரேஷன் கடையில் வரிசையில் நின்றதைக் காண முடிந்தது. எல்லாம் இலவசம் படுத்தும் பாடு! :)
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு 

முதியோர் உதவித் தொகையாக ரூ. 500 வழங்கப்பட்டு வந்ததை ரூ. ஆயிரமாக உயர்த்திய ஜெயலலிதா அரசு, 36 லட்சம் முதியோருக்கு இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. இவையல்லாது ஊனமுற்றோருக்கு உதவித் திட்டம், கைம்பெண் உதவித் திட்டம் உள்ளிட்ட பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்திட்டம் அரசால் அவ்வப்போது மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பசுமை வீடுகள் திட்டம்:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை  மக்களுக்கு பசுமை வீடுகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்து வருகிறது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளில், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையலறை, தாழ்வாரம் ஆகிய வசதிகளுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பும் அமைக்கப்படுகிறது. 300  சதுர அடி அளவில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
JeyaFree 5
பசுமை வீடு திட்டம்

இதற்கு முதலில் ஒரு ரூ. 1.80  லட்சமாக இருந்த நிதி, பின்னர் ரூ. 2.10  லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த பசுமை வீடுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதியுடன் கழிப்பிடம் அமைக்க ரூ. 11 ஆயிரம் வழங்கப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் திமுக ஆட்சியில் செயப்டுத்தப்பட்ட சமத்துவபுரம் திட்டத்தின் மேம்பட்ட வடிவமே. எனினும், அரசியல்ரீதியான பயனாளிகள் தேர்வு இத்திட்டத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தவிர, ஏழை விவசாயிகளுக்காக விலையில்லா ஆடு, மாடு வளர்க்கும் திட்டமும் தமிழகத்தின் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 6  மாத வயதுடைய 4 ஆடுகள் (3 பெட்டை 1 ஆண்) வழங்கப்படுகின்றன. மேலும் ஆடுகளுக்கு தீவனம் வாங்கவும், இருப்பிடக் கொட்டகை அமைக்கவும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆடுகள் நோய் தாக்கி இறந்தால் இழப்பீடு பெறும் வகையில காப்பீடும் செய்யப்படுகிறது. இலவச மாடு வளர்க்கும் திட்டம், ஆடு வளர்க்கும் திட்டம் அளவிற்கு அரசால் கவனம் கொடுக்கப்படவில்லை.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமும் அதிமுக அரசின் கவர்ச்சித் திட்டங்களில் ஒன்று. 2001-2002 இல் தாழத்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சார்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2005இல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
திருக்கோவில் அன்னதானத் திட்டம்
திருக்கோவில் அன்னதானத் திட்டம்

இத்திட்டத்தில் ஆண்டுதோறும் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சமாகும். நடப்பு நிதியாண்டில், 2.86 லட்சம் மாணவர்களுக்கும், 3.57 லட்சம் மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கல், திருக்கோவில்களில்  அன்னதானத் திட்டம்,  மசூதிகளுக்கு ரமலான் நோன்பிற்கான இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆகியவையும் ஜெயலலிதாவின் கவர்ச்சி அரசியல் திட்டங்களில் முக்கிய இடம் வகிப்பவை.
அடுத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ‘அம்மா’  திட்டங்கள் குறித்தும்,  அவற்றின் தாக்கம் குறித்தும் விரிவாகக் காணலாம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழியை தமிழக அரசு மத்திய அரசு நிதியைக் கொண்டு எவ்வாறு வெற்றிகரமாக நிரூபித்து வருகிறது என்பதையும் அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி- தமிழ் இந்து.

Monday 7 July 2014

 வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை . இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நம் மன்றத்தின் சார்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு.

முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
 
 
தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு

 
 கோரிக்கை எண்  2014/789416/AH  கோரிக்கை தேதி  08/07/2014






 கோரிக்கை  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு சுகாதரக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாத அவலநிலை நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற நீரை குடிப்பதன்காரணமாக வாயிற்று உபாதைகள் மற்றும் தோற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 


இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக கொல்லப்படுவதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னால், அரவிந்த ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், வரிசையாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மர்ம நபர்களால்... :

அது தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்க, கடந்த ஒரு மாதத்துக்கு முன், சென்னை அருகில் ஆவடியில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செயலர், சுரேஷ் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அது தொடர்பான பதற்றம் அடங்குவதற்குள், நேற்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலர் ஜீவராஜ், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் குடும்பப் பிரச்னையில்தான் கொல்லப்பட்டார் என சொல்லப்பட்டாலும், அவருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து, தொடர் மிரட்டல்கள் இருந்து வந்தது, என்றும் நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் தெரிவிக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள், தமிழகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டு வருவது, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது:

குறிவைத்து கொல்லும்...:

லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் வென்று, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பது, இந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும், தீவிரவாதிகளாலும் தீவிரவாத அமைப்புகளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்து அமைப்புகளிலும், பா.ஜ.,விலும் யாரெல்லாம் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களையெல்லாம் குறிவைத்து கொல்லும் காரியங்களில், அவர்கள் இறங்கி இருக்கின்றனர். அதோடு, இயக்க செயல்பாடுகளில், தீவிரமாக ஈடுபடும் அந்த நபர்களை கொல்வதன் மூலம், இந்தியா முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தவும், அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கத்தை நிம்மதியாக செயல்பட விடக்கூடாது என்பதிலும், அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

பலம் பெறக்கூடாது:

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தை அவர்கள் குறி வைத்திருக்கின்றனர். காரணம், தமிழகத்தில் இந்து அமைப்புகளும், பா.ஜ.,வும் பலம் பெற்றுவிடக் கூடாது என்றும் எண்ணுகின்றனர். இதற்காக அவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொலை பட்டியலில், 30க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக, ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், பா.ஜ.,வில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். இருந்தும், திருவள்ளூர் சுரேஷ் குமார், சங்கரன்கோவில் ஜீவராஜ் ஆகியோரை பயங்கரவாதிகள் கொன்று விட்டனர். கடந்த 1ம் தேதி, வெள்ளையப்பனின் முதலாவது நினைவு தினம். அதேபோல வரும் 19ம் தேதி, ஆடிட்டர் ரமேஷ், இறந்த தினம் வருகிறது. இந்த இரண்டு தினங்களுக்குள், இரண்டு பேரை தீவிரவாதிகள் கொல்ல திட்டம் போட்டிருப்பதாக, கிடைத்த தகவல் படியே, கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால், பா.ஜ., மாநிலத் தலைவர் பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. அதனால், தமிழக பா.ஜ.,வுக்கு உடனடியாக புதிய தலைவரை கட்சித் தலைமை நியமிக்க வேண்டும்.அதன்பின், அவர் மாநில அரசுடன் பேசி, இந்த கொலை பயங்கரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர் v.kalathur seithi.

-தினமலர்.

புதுடில்லி: 'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
விசாரணைஇந்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.கே.பிரசாத் தலைமையிலான, உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முஸ்லிம்களின் தனிச்சட்டமான, ஷரியத் சட்ட விதிகளை பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள, அகில இந்திய தனிச்சட்ட வாரியம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் (பாத்வா) மக்களை கட்டுப்படுத்தாது. அது, முஸ்லிம் மத தலைவர்களின் கருத்துக்களே. அந்த கருத்துக்களை அமல்படுத்தும் அதிகாரம் எதுவும், அவருக்கு கிடையாது. ஒரு நபரின் விருப்பத்திற்கு மாறாக, தன் உத்தரவை, முஸ்லிம் மத தலைவர் அமல்படுத்த விரும்பினால், அதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.இவ்வாறு, அந்த வழக்கறிஞர் கூறினார்.
ஏற்றுக்கொள்ள முடியாதுஇந்நிலையில், இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தங்கள் முன் ஆஜராகாத அல்லது இல்லாத ஒரு நபருக்கு எதிராக, ஷரியத் நீதிமன்றங்கள், 'பாத்வா' என்ற உத்தரவுகள் பிறப்பிப்பது சரியானதல்ல; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷரியத் நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் கிடையாது.இந்த ஷரியத் நீதிமன்றங்கள், சில நேரங்களில் பிறப்பிக்கும் உத்தரவுகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அப்பாவிகளை தண்டிப்பதாகவும் உள்ளது. அது, சரியல்ல. இஸ்லாம் உட்பட, எந்த மதமும், அப்பாவி நபர்களை தண்டிக்க அனுமதி வழங்குவதில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்v.kalathur seithi .

-தினமலர்.

வ.களத்தூர் முக்கியஸ்தர்   மறைந்த திரு.பரமசிவம் உடையார் அவர்களின் பேரனும், நம் விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளருமாகிய திரு.சத்தியபாலன் அவர்களின் திருமண விழா வ.களத்தூர் adm திருமண மண்டபத்தில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது .

மணமக்களுக்கு விவேகானந்தர் மன்றம் சார்பாக மனமகிழ் வாழ்த்துக்கள்...