Saturday, 26 July 2014

பட உதவி- மார்டின்.
சின்னாறு பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்ட மான் பலியானது.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பெரியவட கரை, பாண்டகப்பாடி, வெள்ளுவாடி, காரியானூர், கை.களத்தூர், அய்யனார் பாளையம், அரசலூர், மேட்டுப்பாளையம், பேரையூர் ,வி.களத்தூர் மற்றும் குன்னம் தாலுகா, சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர், நக்கசேலம் ஆகியபகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான சமூக வனக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்தக்காடுகளில் அரியவ கை புள்ளிமான்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன.
மழையின்றி வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனத்திற்குள் தங்கியுள்ள மான்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகிலுள்ள வயல் பகுதிகளுக்கு வரு வதுண்டு. வயல்களும் வறண்டு விட்டதால் ஊருக்குள் மான்கள் புகுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நுழைகின்ற மான்களை தெருநாய்கள் துரத்துவதும், கடித்து கொல்வதும் தொடரும் சம்பவங்களாகி விட்டன. இந்நிலையில் நேற்று காலை வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு பகுதிக்கு வந்த ஒரு புள்ளிமானை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன.
இதனால் படுகாயமடைந்த மான் தாவிச்செல்லும்போது தவறி விழுந்து கால்கள் முறிந்ததால் எழுந்து ஓடமுடியாமல் தவித்தது. இதனைப் பார்த்த சிலர் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட வனஅலுவலர் ஏழுமலை, வனச்சரகர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி, வனவர் வீராசாமி, வனகாப்பாளர்கள் கருப்பையா, திருநாவுக்கரசு, திருஞானம்ஆகியோர் சின்னாறு பகுதிக்குச் சென்று படுத்து கிடந்த மான்குட்டியை மீட்டு, வாலிகண்டபுரம் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவர் அஞ்சலி மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க வண்டியில் எடுத்து வந்தனர். அது 2 வயது கொண்ட ஆண் மான் ஆகும். மிகவும் மிரண்டு போயிருந்த மான்குட்டி வழியிலேயே பரிதாபமாக இறந்தது. பிறகு அந்த மான்குட்டி பேரையூர் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்டது.


 -தினகரன்.

Thursday, 24 July 2014


பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப வழங்கிட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டையில்லாமல் பட்டை, நாமம் போட்டு ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்(40). விவசாயி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் விவசாய தவணை கடனாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்.
அதில் ரூ.1.5 லட்சத்தை திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செந்திலின் டிராக்டரை பறிமுதல் செய்து ரூ..1.70 லட்சத்துக்கு ஏலம் விட் டனர். எவ்வித அறிவிப்பும் இன்றி டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், டிராக்டரை திரும்ப வழங் கிட வலியுறுத்தியும் செந்தில் கடந்த 14ம் தேதி கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ராமசுப்பிரமணியனிடம் மேல் முறையீடு செய்துள்ளார். செந்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திட ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இது வரை பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாரதீய கிசான் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அய்யாகண்ணு தலைமை யில் சட்டை அணியாமல், பட்டை நாமம் போட்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி, தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி அமைந்துள்ள வெங்கடேசபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது. அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நீண்ட நேரம் தொடர்ந்ததால் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரு பைசா கூட செலுத்தவில்லை!


ஸ்டேட் வங்கி மேலாளர் கூறுகையில், கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கடந்த 2009ல் டிராக்டர் வாங்குவதற்காக சேவை கட்டணம் ரூ.7500யை செலுத்தி விட்டு, பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் ரூ.6 லட்சம் விவசாய கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்தாததால் கடனாக பெற்ற அசல் ரூ.6 லட்சம், வட்டியும் சேர்த்து சுமார் ரூ.13 லட்சத்து 29 ஆயிரம் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.தவணை தொகை செலுத்த கோரி என செந்திலுக்கு கடந்த 18.10.12 மற்றும் 31.7.13 ஆகிய தேதிகளில் நோட்டீசும், 10.2.14ல் டிராக்டரை பறிமுதல் செய்வதற்கான நோட்டீசும் அனுப்பியும் இதுவரை ஒரு பைசா கூட செலுத்தவில்லை. இதனால் சட்ட ரீதியாக கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி டிராக்டரை பறிமுதல் செய்தோம். மீதமுள்ள கடனை செலுத்திட கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை செந்தில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.


-தினகரன்.

Wednesday, 23 July 2014


பெரம்பலூர், : கல்விக்கடன் வழங்கும் முகாமுக்கான விண்ணப்ப படிவங்ளை வங்கிக் கிளைகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக  கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் 26ம் தேதி முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் கலந்துகொண்டு, பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், பெரம்பலூர், வேப்பந் தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்பட்டு வரு கின்றன.
 பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி கிளைகளிலும் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஏதேனும் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஊராட்சிஒன்றிய அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 94422 71994 என்ற செல்போன் எண்ணிலும், முகாம் ஒருங்கிணைப்பாளரை 97885 32233 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

-தினகரன்.

திருத்தணிக்கு காவடி எடுத்த பக்தர்கள் மீது காவல் ஆய்வாளர் காட்டுமிராண்டித் தாக்குதல்: காது ஜவ்வு கிழிந்த நிலையில் தினமணி நிருபர் மருத்துவமனையில்!
திருத்தணிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் மீது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தினமணி திருவண்ணாமலை நிருபர், காது ஜவ்வு கிழிந்து, இடது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப் பட்டது.
இதனிடையே இந்தப் புகார் குறித்து விசாரித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி., சத்தியமூர்த்தி,
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சரவணப் பெருமாள், தனது புகார் மனுவில் தெரிவித்துள்ள விவரம்:
நான் திருவண்ணாமலையில் தினமணி நாளிதழ் மாவட்ட தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன். 21.7.2014ம் தேதி காலை 9.45க்கு திருத்தணி முருகன் கோயிலில் காவடி சாத்துபடி செய்வதற்காக எங்கள் ஊர் பொதுமக்களுடன் வந்தேன். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உற்ஸவர் முருகர் வைக்கப்பட்டுள்ள கோயில் முதல் தளத்தின் படியேறும் பகுதிக்கு அருகே காவடியை கீழே வைத்து சாத்துபடி செய்ய முடியவில்லை. பக்தர்கள் தள்ளிக்கொண்டே வந்துவிட்டனர்.
எனவே, உற்ஸவர் முருகர் சந்நிதிக்கு எதிரில் இருந்து வரிசையாக 3வது உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான் கொண்டு வந்த மயில் காவடியை கீழே வைத்தேன். உடனே காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் என்பவர் வந்து காவடியை எடுடா நாயே என்றார்.
நான், சார் ஒரு நிமிடம் சார். சாமி கும்பிட்டு விட்டு எடுத்துக் கொள்கிறேன் என்றேன். இதற்கு, என்னடா சொன்னா.. எடுக்க மாட்டியா என்று கூறிக் கொண்டே, இந்த ஆண்டு புதிதாக செய்து எடுத்து வந்த என்னுடைய மயில் காவடியை லத்தியால் கீழே தள்ளி உடைத்தார். மயில் இறகுகள் உடைவதைப் பார்த்து, சார். சார்.. வேண்டாம் சார். காவடியை எடுத்துக் கொள்கிறேன் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் லத்தியால் எனது வயிற்றில் குத்தினார்.
வலி தாங்காமல் அலறிய நான், லத்தியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, சார், நான் தினமணி நிருபர் என்றேன்.
இதற்கு, நிருபர் என்றால் பெரிய மயிரா, போடா (....) என்று திட்டி கொண்டே, ஆய்வாளர் அய்யானரப்பன் அவரது வலது கையால் குற்றவாளிகளைத் தாக்குவது போல் என்னுடைய இடது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
தொடர்ந்து, எனது இடது நெஞ்சிலும் ஓங்கிக் குத்தினார். நான் நிலை குலைந்து கண் கலங்கியதைப் பார்த்துத் தடுக்க வந்த என் அம்மாவை, போடி நாயே.. என்று சொல்லி அடித்தார். மேலும், உன்னை ஜெயிலில் போட்டு விடுவேன்.. போடா.. (....) பையா என்று சொல்லி என் தம்பியை அடித்தார்.
என் அப்பாவையும், தடுக்க வந்த ஊர்க்காரர்களையும் தள்ளி விட்டதுடன், லத்தியால் குத்தினார். மேலும், உங்களை எல்லாம் கூண்டோடு ஜெயிலில் போட்டு விடுவேன். மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள் என்று எங்கள் ஊர்க்காரர்களை கடுமையாக மிரட்டினார்.
உங்களைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று நான் சொன்னதற்கு, நீ, எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐஜி என எவனிடம் வேண்டுமானாலும் போய் சொல். என் மயிரை ஒன்றும் புடுங்க முடியாது. என்னை போட்டோ எடுத்து எந்த பேப்பரில் வேண்டுமானாலும் போடு என்று வலிய வந்து என்னிடம் மல்லுக்கு நின்றார்.
ஆய்வாளர் அய்யனாரப்பன் அடித்ததில் என்னுடைய காது கேட்கவில்லை. கொய்ன் என்று சத்தம் வருகிறது. நெஞ்சு வலி அதிகமாக உள்ளது. எனவே ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பாக, கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐயாவிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் திரண்டு சென்றோம். அவர் அங்கிருந்த காவலர்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
என்னிடமும், எங்கள் ஊர் பொதுமக்களிடமும் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் சிகாமணி என்பவர், உங்கள் பிரச்னை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. எனவே, எழுத்துபூர்வமாக புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கையை நான் எடுக்கிறேன் என்றார்.
இதன்பிறகு, மேற்கண்டவாறு நான் புகார் கொடுத்தேன். பின்னர் காவல் ஆய்வாளர்கள் சிலரும், திருத்தணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சு.மணியழகன் ஐயா அவர்களும் என்னிடம் பேசினர். என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பனை அழைத்து வந்தனர். அப்போது, நடந்த சம்பவத்துக்கு ஆய்வாளர் அய்யனாரப்பன் வருத்தம் தெரிவிக்கவே இல்லை.
காவடி எடுப்பதற்காகவே கடந்த 10 நாட்களாக முருகர் பக்திப் பாடல்களைப் பாடிப் பழகி, அசைவ உணவுகளைத் தவிர்த்து, பக்தி சிரத்தையுடன் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் (ஜூலை 20,21) உண்ணாநோன்பு விரதம் இருந்து, இந்த வருடம் ரூ.3 ஆயிரம் செலவில் புதிதாக செய்த மயில் காவடியை அந்த முருகப் பெருமானையே தோளில் சுமந்து செல்வதாகக் கருதி பல கிலோ மீட்டர் தூரம் காவடியை தோளில் சுமந்து வந்த என்னையும், எங்கள் ஊர் பொதுமக்களையும் முருகன் சந்நிதியில் பேசக்கூடாத வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்திய காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....
- என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் சரவணப் பெருமாள், “என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன், யாரிடமும் சொல்.. என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று என்னை மிரட்டியபடியே தகாத வார்த்தைகளால் திட்டியபடி முன்னே வந்த போது, உடன் இருந்தவர் எடுத்த படம் இது” என்று அவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

நன்றி- https://www.facebook.com/tamilseythikal?fref=photo

இந்தியா ஜனநாயகக் குடியரசாக மட்டுமல்ல, செக்யூலர் குடியரசாகவும் (Democratic Socialistic Secular Republic) உள்ளது. செக்யூலர் என்பதற்குத் தரப்பட்ட விளக்கம் மதங்களுக்கு அரசு அப்பாற்பட்டது என்பதாகும்.
செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது, மார்க்க சார்பற்றது என்ற அர்த்தம் பெற்றது. சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது நமது துரதிருஷ்டம். இந்தப் புரிதல், அரசே மதத்திற்கு எதிரானது என எண்ணுமாறு செய்துவிட்டது.
இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள். இவர்கள் 70 சதவீதம் பேர். எண்ணிக்கையில் சொன்னால் 80 கோடி பேர். இவர்களோடு ஒப்பிடுகிற பொழுது இஸ்லாமியர்கள் 14 சதவீதம். ஏறக்குறைய 15 கோடி பேர். இவர்களைச் சிறுபான்மையினர் என்கிறோம்.
இஸ்லாம் மதத்தின் ஆட்சி நடக்கும் பாகிஸ்தானின் ஜனத்தொகை 19 கோடி. இதே போல்தான் முஸ்லிம் நாடான வங்கதேசத்தின் ஜனத்தொகை 15 கோடி. அந்த நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். அங்கு ஹிந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்களைச் சிறுபான்மையினர் (Religious Minority) என்றே அரசியல் சட்டப்படி கூறுகிறோம்.
முஸ்லிம்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்கள் இந்தியாவில் 3 கோடி பேர். சீக்கியர்கள் 2 கோடி பேர், பெளத்தர்கள் 1 கோடி பேர், ஜைனர்கள் 40 லட்சம் பேர். இவர்களெல்லாருமே சிறுபான்மையினர் - அதாவது 80 கோடி ஹிந்துக்களோடு ஒப்பிட்டால்.
மதச்சார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானது என்ற புரிதலால், ஹிந்து மதத்தினர் பெரும்பான்மையாக இருந்தும், சிறுபான்மையினரைப் போல சிறப்பாக நடத்தப் படுவதில்லை.
உதாரணத்திற்கு, ஒரு தொடக்கப் பள்ளியையோ, உயர்நிலைப் பள்ளியையோ அல்லது தொழில் கல்லூரியையோ ஹிந்து பெயர் கொண்ட ஒருவர் நிறுவினால், அந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்களைச் சுழற்சி முறையில்தான் நிரப்பியாக வேண்டும். அதுவும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலிலிருந்துதான் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறையில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பணி இடங்களை, அவர்களில் தகுதியானோர் கிடைக்கும் வரை வேறு ஜாதியினரை நியமிக்காமல் வைக்க வேண்டும்.
இதேபோன்ற கல்வி நிலையத்தை ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லிமோ, சீக்கியரோ நிறுவினால், இத்தனை விதிகளும் அவர்களுக்குப் பொருந்தாது. இதுதான் சமயச்சார்பற்ற அரசு நடவடிக்கையாக இங்கே நீடித்து வருகிறது.
சமயச் சார்பின்மை (Secularism) கோட்பாட்டிற்கு எதிரானதாக, ஹிந்து மதத்தை வகுப்புவாதம் (Communal) எனப் பேசுகின்றனர். வகுப்புவாதம் என்றால் ஹிந்து வகுப்புவாதம் மட்டும்தானா உள்ளது? மற்ற மத வகுப்புவாதங்கள் இல்லையா?
செக்யூலர் - கம்யூனல் என்ற இந்த இரண்டு சக்திகள் அரசியல் தளத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படுகின்றன. செக்யூலர் என்பது ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகள் என்றும், கம்யூனல் என்பது ஹிந்து மதத் தீவிரவாத சக்திகள் என்றும் பேசப்படுகின்றன.
வாஜ்பாயை பிரதமராக்கிய மக்கள், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை, தேசியவாதியாகத்தான் பார்த்தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திரமோடியை பிரதமர் ஆக்கியிருக்கும் மக்களும், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை. தேசியத் தலைவராகவே பார்க்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்த செக்யூலரிசம் என்பது நடைமுறையில் ஹிந்து மதத்திற்குப் பாதகமாகவும் சிறுபான்மை மதங்களுக்குச் சாதகமாகவும் கையாளப்பட்டுவிட்டது ஒரு மிகப்பெரிய துயரம்.
செக்யூலரிசத்தை நாம் எங்கிருந்து பெற்றோம் என்பதைப் பற்றி அறிஞர்கள் பலர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர் கே.என். பணிக்கர், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குள் இதை நேருஜிதான் புகுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் கிறிஸ்துவ மதத்திற்குக் கீழ்ப்படிந்துதான் இங்கிலாந்து ஆட்சி நடந்தது. அன்றைக்கு ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்கள் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வந்தன. தேவாலயங்களை மீறி அரசாங்கம் செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை மத குருமார்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.
அரசாங்கம் சுயேச்சையாகச் செயல்பட வேண்டுமானால், இந்தத் திருச்சபைகளின் ஆதிக்கத்திலிருந்து அரசாங்கத்தை விடுவித்தாக வேண்டுமென்று தீர்மானித்த அறிஞர்கள் செக்யூலரிசம் என்ற சிந்தனையை உருவாக்கினார்கள்.
செக்யூலரிசத்தைப் பின்பற்றும் ஓர் அரசு, மதத்திற்கு மரியாதை செய்ய வேண்டுமே தவிர, அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றனர். இதுதான் ஐரோப்பாவில் நடந்தது.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ஜவாஹர்லால் நேரு போன்றவர்களை இப்புதிய கருத்து கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.
இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இது வெறும் குடியரசாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் சமதர்மக் குடியரசாகவும் கலாசார ரீதியில் சமயச் சார்பற்ற குடியரசாகவும் உருவாக வேண்டும் என்று நேருஜி விரும்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதைகளும் அதை ஏற்று அவ்வாறே செய்தார்கள்.
செக்யூலரிசத்தை "மதச் சார்பற்ற கோட்பாடு' என்றே நாம் பிரசாரப்படுத்தி வந்துள்ளோம். மதச்சார்பற்ற அரசு என்பதை மதத்திற்குச் சம்பந்தமில்லாத அரசு என்றும், "சம்பந்தமில்லாதது' என்ற வார்த்தையை "அக்கறையில்லாத' என்றும் காலப்போக்கில் "எதிரானது' என்றும் சில சக்திகள் ஆக்கிவிட்டன.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும், கடவுள் நம்பிக்கையுள்ள மத போதகர்களும் செக்யூலரிசத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
செக்யூலர் அரசு என்பது மத அக்கறையற்ற அரசு அல்ல. மதங்களுக்கு எதிரான அரசும் அல்ல. சிறுபான்மை மதத்தாரை அச்சுறுத்தும் அரசும் அல்ல. உண்மையில் செக்யூலரிசத்தை சமயச் சார்பற்றது என்பதைவிட, சமய சமத்துவ முடையது என்றே கூற வேண்டும்.
தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளில் இன்னின்ன பொருள்கள் இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துத் தேர்தலைச் சந்திப்பது ஒரு மரபாகவே ஆகிவிட்டது.
இலவசத்தால் எப்படி வாக்குவங்கி உருவாக்கப்படுகின்றதோ, அதேபோல கிறிஸ்தவ மதத்தாரின் வாக்குகளையோ, முஸ்லிம் மதத்தாரின் வாக்குகளையோ ஒன்று திரட்டுவதற்கு அரசியல் கட்சிகள் ஓர் உபாயத்தைக் கையாளுகின்றன.
நாங்கள் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசு வேலையிலும் கல்வி நிலையங்களிலும் ஒதுக்குவோம் என்று கூறப்பட்டதையும், அது சட்ட விரோதமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதையும் பலமுறை கண்டிருக்கிறோம்.
ஆந்திராவில் முன்பிருந்த காங்கிரஸ் அரசு 30 சதவீத இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மத ரீதியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஒதுக்கியது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 25 சதவீதமாகக் குறைந்தது.
இந்த இடஒதுக்கீடு வசதியான முஸ்லிம்களுக்கு அல்ல என்றும், ஏழ்மை நிலையிலுள்ள சுமார் ஒரு கோடி முஸ்லிம்களுக்கு மட்டுமே என ஆந்திர அரசு விளக்கம் அளித்தது. ஆந்திர அரசு அறிவித்த இந்த மத ரீதியான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதேபோல கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்தபோது, தமிழ்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளே அதை நிராகரித்துவிட்டதும் நினைவு கூரத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ. கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியோ, எதிர்க்கட்சி ஆகக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கிறது.
இந்தத் தோல்விக்கான காரணத்தை சென்ற மாதம் பிரேதப் பரிசோதனை செய்த, கை சுத்தத்துக்குப் பெயர் பெற்ற பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணி, திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சி.கே. கோவிந்தன் நாயரின் நினைவுநாள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், "காங்கிரசின் மதச்சார்பின்மையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சற்றுச் சரிந்துள்ளது. இதை நாம் பரிசீலிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாகும்.
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பதில் கட்சி சறுக்கலைச் சந்தித்ததாக மக்கள் மனதில் சந்தேகம் இருக்கின்றது. அனைத்துப்பிரிவு மக்களுக்கும் சமநீதி கிடைக்கவில்லையோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதை நீக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.
இது காலம் கடந்து பேசப்பட்ட மகத்தான உண்மை. இவருடைய பேச்சை ஒரு பிரதான வாக்கு மூலமாகவே எடுத்துக் கொண்டு, சுராஜ்குண்டில் புதிய பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அரசியல் போதனை செய்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தலைவர் எல்.கே. அத்வானி, கிறிஸ்தவர் ஏ.கே. அந்தோணியின் பேச்சைக் கபடமில்லாத ஒரு வெள்ளைப்பேச்சு' (Plain - Speak) என்று வர்ணித்திருக்கிறார்.
அதோடு நிற்காமல், காங்கிரஸ் கட்சி, தான் கடைப்பிடித்து வந்த செக்யூலரிசத்தை அமில சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி, பா.ஜ.க. எப்போதும் கூறி வந்த ஒன்றை நினைவு படுத்தியுள்ளார்.
செக்யூலரிசத்தில் போலி, அசல் என இரண்டு உண்டு. காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்தது போலி செக்யூலரிசம் (Pseudo Secularism). பா.ஜ.க. கடைப்பிடித்தது மத சமத்துவமான அசல் செக்யூலரிசம். அசல் செக்யூலரிசத்தில் வாக்கு வங்கி இல்லை, இடஒதுக்கீடு இல்லை, சலுகை இல்லை, சிறுபான்மை - பெரும்பான்மை என்ற வரையறை இல்லை.
ஏ.கே. அந்தோணி பேசியதை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்களும் பேசினால்தான், அந்தோணியின் பேச்சுக்கு மரியாதை ஏற்படும். அந்தோணியை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களோ, இல்லையோ, நாடு நலம் பெற நாம் பேச வேண்டும்.
கட்டுரையாளர்: பொறுப்பாசிரியர், ஓம் சக்தி மாத இதழ்.

பெரம்பலூர் அருகே கன்றுக்குட்டியுடன் பசுவைத் திருடிய வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட் டம், எளம்பலூர் அடுத்த உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனக்குச் சொந்தமான 4 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை வீட்டுக்கு பின்பக்கம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியள வில் எழுந்து வந்து பார்த்த போது, பசு மாடு ஒன்றையும், கன்றுக்குட்டியையும் காணவில்லை. இதனால் பதறிய அவர் சுற்றுப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே பெரம்பலூர் அடுத்த செல்வபுரம் பகுதியில் உள்ள ரோவர் இன்ஜினியரிங் கல்லூரி பின்புறம் ஒருவர், பசு மற் றும் கன்றுடன் அதிகாலை 3 மணியளவில் நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது பசு தொடர்ந்து கத்தியது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் எழுந்து வந்து அவரை விசாரித்தனர். அப்போது அவர் எளம்பலூரை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் அவற்றை விலைக்கு வாங் கித் வருவதாகக் கூறி னார். இருந்த போதும், அவ ரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து எளம்ப லூரை சேர்ந்தவர்களுக்கு போன் செய்து கேட்ட போது, ராமசாமி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பசுவை யும், கன்றுக்குட்டியுடன் வந்த அந்நபரை பொதுமக் கள் "முறையாக" விசாரித்த போது, அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வடக்குமரை கிராமத்தை சேர்ந்த முருகன் (32) என்பதும், பசுவையும், கன்றுக்குட்டியையும் அவர் திருடி வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட மாட்டின் உரிமையாளர் ஆறுமுகமும் காவல் நிலையம் சென்று மாடு, கன்றுக்குட்டியை மீட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பட உதவி-வசந்த ஜீவா , தினமணி செய்தி.

Tuesday, 22 July 2014  • அவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது. மத ரீதியிலான தண்டனை என்பது பார்த்ததும் புரிய வேண்டுமென கொலையாளிகள் எண்ணி செயல்பட்டிருந்தனர். நான்குமுறை கொலை முயற்சிகள் அவர் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது பின்னர் தெரிந்தது. திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரான சுரேஷ்குமார் (48) அவர்களைத்தான்  இப்படி உடல் சிதைத்து கொலை செய்திருந்தார்கள் ஜிகாதிகள். கொலை செய்யப்பட்ட நேரம் இரவு 9:30. தேதி: 18-ஜூன் 2014.
martyrs


  • அந்த வயதான இரவுக் காவலாளி இருபதுகள் மதிக்கத்தக்க அந்த மூன்று இளைஞர்களும் அமைதியாக சம்பவ இடத்திலிருந்து சென்றதை கண்டதாக கூறினார். அதில் ஒருவன் அந்த காவலாளியின் கைகளை பிடித்து வைத்திருக்க மற்ற இருவரும் தங்கள் இலக்கை தாக்கியதை அந்த காவலாளி கண்டார். அவர்களின் இலக்கு ஆடிட்டர் ரமேஷ். தமிழக பாஜக பொது செயலாளர். ஒருவன் அவரது கைகளை முறுக்கி மோசமாக உடைக்க மற்றவன் அவரது தலையை சுவரில் கொடூரமாக மோதினான். பின்னர் அமைதி மார்க்கத்துக்கே உரிய வழிமுறையில் அவரது தொண்டையை கிழித்து கொல்ல ஆரம்பித்தான். அதே நேரத்தில் மற்றவன் சடங்குத்தன்மையுடன் அவரது உடலெங்கும் வெட்ட ஆரம்பித்தான். இறுதியில் காவல்துறையினர் வரும் போது அந்த 53 வயது மனிதரின் உடலில் உருகுலைந்த தலையும் 23 வெட்டுக்காயங்களும் இருந்தன. அதை செய்தவர்கள் புனித ரம்ஸான் நோன்பின் ஒரு வெள்ளி கிழமையில் சேலத்தின் இரவில் கரைந்தனர். நாள்- 19-07-2013. [1]
  • இந்த கொடூரக் கொலைக்கு சில வாரங்கள் முன்னர் இதை போலவே பயங்கரத்துடன் மற்றொரு கொலை நடந்தது. 45 வயதான வெள்ளையப்பன் – இந்து முன்னணி தலைவர்களில் ஒருவர் – கோவில் நிலங்கள் மீட்பதில் ஆர்வம் கொண்டு போராடியவர்; மதமாற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இயங்கியவர் வேலூரில் கொல்லப்பட்டார். அது ஜூலை 1 2013. இந்த கொலை வேலூரில் முழுக்க முழுக்க பொதுமக்கள் பார்வையில் நடத்தப்பட்டது. [2]
  • ஏப்ரல் 2013 இன் அதி காலையில் கன்யாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் நகரில் நடை பழகிக் கொண்டிருந்த மாவட்ட பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி அவர்கள் நால்வர் கொண்ட ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். அவரது மென்மையான போக்கும் பரந்த உள்ளமும் அனைவருக்கும் தெரியும். அவரை கொலை செய்ய முயன்றது நான்கு பேரைக் கொண்ட ஒரு கும்பல். அவர்கள் மேலப்பாளையத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. [3]
  • நவம்பர் 6 2012 திரு.ஆனந்த் ஒரு ஆர்.எஸ்.எஸ் அதிகாரி கொடூரமாக தாக்கப்படுகிறார். 10 நாட்களுக்கு பின்னர் சையது அபு தகிர் என்கிற 19 வயது இளைஞன் கைது செய்யப்படுகிறார். இது கோவையில். [4]
  • அக்டோபர் 24 2012 வேலூரில் மருத்துவராக பணி புரியும் பாஜக மருத்துவ அணியின் தலைவர் அரவிந்த் ரெட்டி கழுத்தின் பின்புறம் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார்.[5]
நன்றாக திட்டமிட்டு நடத்தப்படும் இந்த தொடர்கொலைகளை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும். திராவிட இயக்கம் ஊட்டி வளர்த்த அமைதி பூங்கா என வர்ணிக்கப்படும் தமிழகத்தின் உள்ளே ஜிகாத் எனும் வன்முறை விலங்கு அடைகாக்கப்படுகிறது. வகுப்புவாத, வாக்குவங்கி, இந்து வெறுப்பு சக்திகளால் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. இறுதியில் இதில் பலியாவது தமிழர்களின் ரத்தமேதான்.
ஆட்களை கொல்வது முதல் ஆர்.டி.எக்ஸ் வரை
ஏதோ பாப்ரி கும்மட்டத்தை உடைத்த பிறகுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதம் உருவானது என்பதாக பொதுவாக ஒரு எண்ணம் நிலவுகிறது. அறிவுஜீவிகளும் போலி-மதச்சார்பின்மை பேசுகிறவர்களும் இந்த எண்ணத்தை மேலும் பிரச்சார நீர் ஊற்றி வளர்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ்நாட்டில் பாப்ரி கும்மட்டம் அகற்றப்படுவதற்கு பத்தாண்டுகள் முன்பே உருவாகிவிட்டது என்பதுதான் உண்மை. 1982 இல் பாஷா என்பவன் இந்து தலைவர்கள் கோவையிலிருந்து திரும்பும் போது ஒரு கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 18-7-1984 அன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து முன்னணியின் நிறுவன தலைவர் ராம.கோபாலன் மீது கொலை முயற்சியை அவன் செய்தான். அவர் மதுரை ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்து வீழ்ந்தார். பாஷா சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான். ஆனால் இந்த வழக்கில் குற்றம் உறுதிப்படுத்தப்படாமல் விடுதலையானான். [6] திராவிட சூழலில் நீதியை வெற்றி கொள்ள முடியும் என்கிற முதல் குருதி ருசியை ஜிகாதி மிருகம் ருசி பார்த்தது.
jihadis

அகில இந்திய ஜிகாத் கவுன்ஸிலும் அல்-உம்மாவும்: இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக இஸ்லாமிய பயங்கரவாத சக்திகள்  அகமது அலி என்கிற பழனி பாபா எனும் அடிப்படைவாத இஸ்லாமிய மத பிரச்சாரகர் தலைமையில் இணைந்தன. 1989 இல் தமிழ்நாட்டின் முதல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அகில இந்திய ஜிகாத் கவுன்ஸில் (All India Jihad Council, AIJC) உருவானது.  அதன் பின்னர் இந்து இயக்கத்தவர் மீதான தாக்குதல்கள் தீவிரமும் கடுமையும் கொண்டதாக மாறின. 30-ஆகஸ்ட்-1989 அன்று வீர கணேஷ் எனும் இந்து முன்னணி இளைஞர் கோவையில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 5 1991 அன்று வீர சிவா மற்றொரு இந்து முன்னணி இளைஞர் கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதல்கள்  அனைத்துமே தமிழ்நாட்டின் வர்த்தக தலைநகரான கோவையை சுற்றி அமைந்தன. அல்-உம்மா. இப்போது ‘பாப்ரி கும்மட்டம் இடிப்பின் விளைவுதான் இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்பது எப்படிப்பட்ட கதை என்பது புரிந்திருக்கும். ஆட்களை கொல்வது மட்டுமல்ல ஆர்.டி.எக்ஸ் கடத்தலும் பாப்ரி கும்மட்டம் அகற்றப்படுவதற்கு முன்னாலேயே தொடங்கி விட்டது.  இந்த கடத்தல் தென்னிந்தியாவில் மாநிலங்கள் தாண்டிய ஒரு வலைப்பின்னல் மூலம் செயல்படுத்தப்பட்டது. அக்டோபர் 1992 இல் தமிழக காவல்துறை அல்-உம்மா உறுப்பினர் நால்வரை கைது செய்தது. அவர்கள் ஹைதர் அலி (38), அப்துல் முதாலிப் (47), முகமது அப்துல் காதர் (50) மற்றும் ஸாகிர் ஹுசைன் (38) . இவர்கள் அனைவரும் கேரளாவிலிருந்து ஒரு திருடப்பட்ட காரில் ஆர்.டி.எக்ஸை கடத்தி வந்தனர். இந்த நிகழ்வு 29-அக்டோபர்-1992 – அதாவது பாப்ரி கும்மட்டம் இடிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னர். [7]
தொடர்ந்து தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தேறின..  21-ஜனவரி-1993 ராமேஸ்வரம் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு.முனியசாமி ஜிகாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 1993 இல் ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆர்.எஸ்.எஸ் தலைமை செயலகம் தகர்க்கப்பட்டது.  11 பேர் இதில் உயிரிழந்தனர். அக்டோபர் 1994 இல் இந்து முன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து கொல்லப்பட்டார். ஏப்ரல் 1995 இல் இந்து முன்னணியின் மாநில தலைமையகம் தகர்க்கப்பட்டது. ஜூலை 1995 இல் இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வீட்டுக்கு நாகூரில் பார்சல் வெடிகுண்டு அனுப்பப்பட்டது. அதில் அவர் மனைவி உயிரிழந்தார்.
சிக்கந்தர் பக்த் அறிக்கை: தொடரும் படுகொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் தொடர்ந்து பாஜக  உண்மை கண்டறியும் குழு ஒன்றை தமிழ்நாட்டுக்கு சிக்கந்தர் பக்த் தலைமையில் அனுப்பியது.  ராஜ்ய சபை எதிர்கட்சி தலைவராக இருந்த பக்த் தலைமையில் வந்த அந்த குழு ஒரு முக்கியமான விசயத்தை அவதானித்தது.  சிக்கந்தர் பக்தின் வார்த்தைகளில்: “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை… திராவிட இயக்க தாக்கத்தால் இந்து விரோத தன்மை கொண்டதாக உள்ளது” எனவே எந்த ‘தேசிய செயல்பாட்டையும் அது குறுகிய கண்கள் கொண்டே பார்க்கிறது.”  அந்த அறிக்கை மேலும் கூறிய விஷயம் நமக்கு இன்றைக்கும் முக்கியமானதாக இருப்பது வேதனையான உண்மை: “இன்றைய ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் ஒரு பகுதியனருக்கு இந்து என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கிறது.” அவர் மேலும் சுட்டிக்காட்டினார்:  ”சையது அகமது பாஷாவால் உருவாக்கப்பட்ட அல்-உம்மாவுக்கு  அஇஅதிமுக தலைவர்களில் சிலர் உட்பட, பல அரசியல் தலைவர்களின் ஆதரவு உள்ளது. ” 1995 இல் எழுதப்பட்டது இந்த அறிக்கை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  AIJC  அமைப்பு சர்வதேச இஸ்லாமிய சமூகத்திடன் இந்து அமைப்புகளுக்கு எதிராக போராட நிதி திரட்ட கடிதங்கள் எழுதி அனுப்பப்பட்டன. அக்கடிதங்கள் வளைகுடா நாடுகளில் பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன.  கேரளாவில் மதானிக்கும் தமிழ்நாட்டு ஜிகாத் பயங்கரவாத அமைப்புகளும் தொடர்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் இந்த அறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.[8]
kerala

கேரளத் தொடர்புகளும் ஆயுத ஆம்புலன்ஸ்களும்: ஜிகாதி வலைப்பின்னலில் கேரளத்தொடர்பு முக்கியமானது. ஏனெனில் பழனிபாபா தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருந்த அதே காலகட்டத்தில் கேரளாவில் அப்துல் நாசர் மதானி எனும் அடிப்படைவாத பயங்கரவாதி செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஜிகாத் வலைப்பின்னலின் மரணவியாபாரி என்றுகூட இவனை கூறலாம். இவனது அமைப்பான இஸ்லாமிக் ஸேவா சங்க் (ISS) 1993 இல் தடை செய்யப்பட்டது.  இதற்கு அவன் மதச்சார்பற்ற ஒரு பெயர் சூட்டி மக்கள் ஜனநாயக கட்சி (PDP, People’s Democratic Party) என மாற்றினான். அதே காலகட்டத்தில் உருவான மற்றொரு அடிப்படைவாத ஜிகாதி அமைப்பு தேசிய முன்னேற்ற முன்னணி (NDF , National Development Front).  அதிகாரபூர்வமாக இவை வெவ்வேறு அமைப்புகள் என்றாலும் செயல்பாட்டில் அவ்வாறல்ல என்கிறார் எர்ணாகுளம் காவல்துறை உதவி கமிஷனரான  A.V. ஜியார்ஜ். பயங்கரவாத செயல்களை செய்வதில் NDF அமைப்பும் PDP அமைப்பும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தன என்கிறார் அவர்.[9]. மார்ச் 22 1997 முதல் மே 16 1999 வரை கோழிக்கோடு மாநகராட்சி காவல்துறை கமிஷனராக இருந்தவர் நீரா ராவத்.  அவர் NDF அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரகசிய அறிக்கையை தயாரித்தார். அதில் பாகிஸ்தான் ISI அமைப்பும் ஈரானும் NDF அமைப்புக்கு உதவி செய்வதை குறிப்பிட்டிருந்தார். சிறப்பு பிரிவு அறிக்கைகளின் படி ஆம்புலன்ஸ் வேன்களில் ஆயுதங்களை இந்த அமைப்புகள் கடத்துவதையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.  [10]  ஆம்புலன்ஸ்களை ஜிகாதுக்கு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பின்னர் தமிழ்நாட்டில் தெளிவாக வெடிக்கும்.
இதற்கிடையில் இந்த அமைப்புகளுக்காக மக்கள் குடியாட்சி அமைப்புகளில் வாதாட வாக்குவங்கிகளை பயன்படுத்த ஒரு அமைப்பு வேண்டும்.  அந்த தேவையை பூர்த்தி செய்தது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக). வெளிப்படையாக இவர்கள் அல்-உம்மாவின் வன்முறை பயங்கரவாத போக்குகளை விட்டுவிடுவதாக கூறினார்கள். பயங்கரவாத குற்றவாளிகளை மக்கள் மனதில் ஹீரோக்களாக உலவவிடும் கோடம்பாக்கம் இவனது பெயரின் பிராபல்யத்தை பயன்படுத்தி ‘பாட்சா’ எனும் படத்தை வெளியிட்டது நம் சுரணையின்மையின் வெட்கக்கேடான சுவாரசியம்.   ஆனால் கோடம்பாக்கத்தின் அத்தகைய ‘நல்லெண்ண’ முயற்சிகள் ஜிகாதிகளால் கேலிக்கூத்தாகவே பார்க்கப்பட்டன. கோலிவுட்டின் ‘பாட்ஷா’ படம் கோடம்பாக்கத்தின் முன்னணி இயக்குநரான மணி ரத்னத்தின் வீட்டில் அல் உம்மா பைப் வெடிகுண்டுகளை எறிவதைத் தடுத்திடவில்லை. அவர் எடுத்த ‘ரோஜா’ ‘பம்பாய்’ ஆகிய திரைப்படங்கள் காஷ்மிர் பிரச்சனையையும் மும்பை கலவரங்களையும் பேசியது காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பாஷா வலிமையிலிருந்து வலிமைக்கு  வளர்ந்து வந்தான். அவனுக்கு அல் உம்மாவுக்கும் நிதிகள் வருவதில் தடை இருக்கவில்லை. 1990களில் அவனது அல்-உம்மா ‘பையன்களுக்கு’1990களில்   மாதம் ரூபாய் 5000 மும் அதில் முன்னேறிய பயங்கரவாதிகளை ஊக்குவிக்க  100 cc மோட்டார் சைக்கிள்களும் வெகுமதிகளாக அளிக்கப்பட்டன. [11] . பின்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒரு பெரிய அவலத்தின் முக்கிய அச்சுகளாக மாறும்.
ஆகஸ்ட் 1997 இல் மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் 4 அல்-உம்மாவினரால் சிறைக்குள்ளேயே அடித்து கொல்லப்பட்டார்.அன்றைய அஇஅதிமுக அரசு யதார்த்த நிலையை உணர்ந்து அதிமுக அரசு கொஞ்சமாவது ஜிகாதிய பயங்கரவாத சக்திகளைக் கட்டுப்படுத்த முனைந்த போது காலம் தாமதமாகியிருந்தது.  இக்காலகட்டத்தில் கோவையில் கோட்டமேடு பகுதிகளிலும் இன்னும் சில முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் காவல்துறையால் அமைக்கப்பட்டன. உடனடியாக செயலில் இறங்கினர் போலி-மதச்சார்பின்மை ஊடகங்கள். திமுகவுக்கு ஆதரவான நெருக்கமான ஊடக குரல்கள் இஸ்லாமியரை அதிமுக தனிமைப்படுத்துவதாகவும் இந்த காவல் கோபுரங்கள் அகற்றப்பட வேண்டுமென்றும் கூக்குரல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து கோவை மாநகரம் ஜிகாதின் நீண்ட கொடும் இரவுக்குள் நுழைந்தது.
ஆபரேஷன் ’அல்லாஹு அக்பருக்கு’ முன்:
badsha1

1989 முதல் 1997 காலகட்டங்களில் 42 இந்துக்கள் கோவை பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளில் இந்துக்களை கொலை செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைகள் இருந்தன. காஃபிர்கள் மனதில் அச்சத்தை உருவாக்க செய்யப்பட்ட இறையியல் கொலைகள் என்று கூட இவற்றை கருதலாம். (உதாரணமாக 02-09-1997 இல் ஐந்து இந்துக்கள் கொல்லப்பட்டனர்.) பல கொலைகள் குறிவைத்து செய்யப்பட்ட கொலைகள். இந்த கொலைகளை செய்த அமைப்பு அல்-உம்மா. உதாரணமாக ஒரு சில:  ஐந்து பேரைக் கொன்ற வன்முறைக்காக மூவர் கைது [12]; இரண்டு முஸ்லீம் தீவிரவாதிகள் வெறுப்பை தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டியதற்காக கைது, [13], காவல்நிலையத்தை தாக்கிய இஸ்லாமிய பயங்கரவாதி கைது, [14] இந்த மோசமான சூழ்நிலைக்கு முன்னோடியாக மாநில உளவுத்துறை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் திமுக அரசு அல் உம்மா அமைப்பின் தலைவன் பாஷாவை விடுதலை செய்ய முன்வந்தது. அவன் மீதான தடா வழக்குகள் பின்வாங்கப்பட்டு 28 ஜனவரி 1997 இல் அவன் விடுவிக்கப்பட்டான். [15]
selvaraj

நவம்பர் 1997 இன் விடிகாலை பொழுது. மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை மீறி வந்த அல் உம்மா அமைப்பினர் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்படுகிறார். காவல் நிலையத்தில் வாக்குவாதம் நிகழ்கிறது. அல்-உம்மா உறுப்பினர்கள் இதற்கு தாங்கள் பழிவாங்குவதாக காவல் நிலையத்தில் சவால் விடுகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த சவால் கொடூரமாக நிறைவேற்றப்படுகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் செல்வராஜ் என்பவர் அல்-உம்மாவினரால் கொல்லப்படுகிறார்.  பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினரின் மனைவி மக்களே தங்கள் கணவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பொதுவில் வந்து போராடும் அவலநிலையை கோவை பார்க்கிறது.  அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு அபத்தமான விளக்கத்துடன் நொந்த மனங்களில் வேல் பாய்ச்சுகிறார். ‘வெறும் புள்ளி விவரங்களுக்காக காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் போகும் இளைஞர்களை தொந்தரவு செய்யக் கூடாது.” [16]
alummah1

கோவையில் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அந்த கலவரத்தில் இஸ்லாமியர் அடைந்த பாதிப்பு வீடியோக்கள் மூலமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீவிரமாக பண வசூல் செய்தார்கள். ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக திட்டமிட்டார்கள். போலிமதச்சார்பின்மை/திராவிட அரசியலின் வாக்கு வங்கி அரசியலின் ஒவ்வொரு பலவீனமும் அவர்களின் ரத்த அறுவடைக்கு பலமாக மாறியது. அதன் விளைவுதான் ’ஆபரேஷன் அல்லாஹு அக்பர்’. அது திடீர் திட்டமிடுதல் அல்ல. எப்போதும் எங்கும் குண்டு வெடிப்புகளை நடத்தும் கட்டமைப்புகளை பல்லாண்டுகளாக அவர்கள் வளர்த்தெடுத்திருந்தார்கள். 1998 இன் வாலண்டைன் தினத்தன்று கோவையில் நடத்தப்பட்டு 70-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய அந்த குண்டு வெடிப்புக்கு முந்தைய 20 மாதங்களில் தமிழ்நாடெங்கும் 21 குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் சில அமெச்சூர்தனமான குண்டு வெடிப்புகள் தமிழ் அமைப்புகளால் செய்யப்பட்டன. ஆனால் மிகக் கொடுமையான மிகுந்த ஒருங்கிணைப்புடன் குண்டு வெடிப்பு 1997  டிசம்பரில் ஒரே நாள் திருச்சி ஈரோடு என மூன்று ரயில் வண்டிகளில் நடத்தப்பட்டதாகும். அதை செய்தது அல் உம்மா என்றாலும் அதற்கான உதவி கேரளாவிலிருந்து பெறப்பட்டது. [17] ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் உளவுத்துறையால் ஆவணமாக்கப்பட்டாலும் திராவிட இந்து வெறுப்பு அரசியலும் போலி மதச்சார்பின்மையின் வாக்குவங்கி கணக்கீடுகளும் காவல்துறை நடவடிக்கைகளை தடுத்துவிட்டன. அதன் விளைவாக கோவை மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்பை சந்தித்தது. 76 அப்பாவி உயிர்கள் ’ஆபரேஷன் அல்லாஹு’ அக்பருக்கு பலியானார்கள். [18]
’ஆபரேஷன் அல்லாஹு அக்பருக்கு’ பின்:
martyr1

இதற்கு பின்னர் மார்ச் 1998 இல் பாஜக அரசு ஏற்படும் எனும் சூழ்நிலையில் இந்துக்கள் மீது ஒரு வெறித்தாக்குதலை நடத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டனர். காந்தியவாதியும் பேராசிரியருமான பரமசிவம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டார். எல்லா மாணவர்களுக்கும் மத வேறுபாடின்றி உதவிய அவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் முகம் சிதைக்கப்பட்டது.  கோவை குண்டு வெடிப்புகளால் கொஞ்சம் அதிர்ந்து போன திமுக அரசு சிறிதளவு தனது இஸ்லாமிய ஆதரவு முகத்தை மாற்றியது.  அல் உம்மாவினர் வேட்டையாடப்பட்டனர். ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டனர். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி திமுக உள்ளே வந்தது. இக்காலகட்டத்தில் பெரும்பாலான அல் உம்மாவினரின் கைதுகள் பேரா.பரமசிவத்தின் கொலை தொடர்பான கைதுகள் உட்பட நடந்தன.[19]   இருந்தாலும் கொலைகள் தொடர்ந்தன. பிப்ரவரி 2 1999 இல் திருச்சி நகர பாஜக தலைவர் டாக்டர் ஸ்ரீதர் அல்-உம்மாவினரால் கொல்லப்பட்டார். 13 அல் உம்மாவினர் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டனர். [20]
இக்காலகட்டத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறின. 2001  மாநில தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதே நேரம் தமுமுக அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. பழைய ஜிகாதிகள் இப்போது இஸ்லாமிய மத பிரச்சாரகர்கள் ஆனார்கள். டெலிவிஷன், இணையதளம் தொடங்கி இலக்கிய பத்திரிகைகள் வரை இஸ்லாமிய பிரச்சாரமும் இஸ்லாமிய அரசியல் பிரச்சாரமும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய அமைப்புகள் இப்படி தங்கள் பயங்கரவாத ஓநாய்கள் மீது அமைதி மார்க்க பசுத்தோலை போர்த்திக் கொண்டிருந்த போது பாஜக அமைப்பு ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. பாஜக அரசில் இருந்த காலகட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் வாக்குவங்கிகளை நிலைப்படுத்தி திராவிட அரசியல் அரங்கின் முக்கிய இரு அணிகளுடனும் பலன்களை அறுவடை செய்யவும் தங்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கவும் முனைந்தனர்.
imam_ali

கர்நாடகத்தில் கால்பதிக்கும் ஜிகாத்: இப்போது மாநில எல்லைகளைத் தாண்டிய மற்றொரு செயல்பாட்டை ஜிகாதி அமைப்புகள் தொடங்கின. தமிழ்நாட்டில் மனிதநீதி பாசறை (MNP) கர்நாடகத்தில் ‘கர்நாடக சுயகௌரவ அமைப்பு’ (Karnataka Forum for Dignity, KFD) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கோவை குண்டுவெடிப்பு முதல் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் இமாம் அலி என்கிற அல் உம்மா பயங்கரவாதி. 7-மார்ச்-2002 இல் மதுரை அருகே திருமங்கலத்தில் காவல்துறையை தாக்கி அவனையும் அவன் கூட்டாளியான ஹைதர் அலி என்பவனையும் விடுவித்தது ஒரு பயங்கரவாத கும்பல். அவன் அல் முகைதீன் எனும் அமைப்பை பெங்களூருவில் உருவாக்கினான். இந்து தலைவர்களை கொல்வது முதல் இஸ்ரோ போன்ற அமைப்புகளின் கேந்திரங்களை தாக்கி நாசம் செய்வது வரை பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அக்டோபரில் அவன் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த தமிழக -கர்நாடக காவல்துறை அவனையும் அவன் கூட்டாளிகளுமாக நால்வரை கொன்றது. [21]. தமிழ்நாட்டில் ஜிகாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பாக இதை சொல்லலாம். ஒருவேளை இதை மட்டுமே சொல்லலாம்.  ஆனால் ஜிகாத் இப்போது கர்நாடகத்தில் கால்பதித்துவிட்டது.
அல்-உம்மா விடுதலை பெருவிழா – வழங்குவது அதிமுக:  2002 இல் மதுரை கல்லூரி பேராசிரியர் கொலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏக இறைவனின் ஜிகாத்துக்காக வெற்றிக்குரல் எழுப்பியபடி வெளியே வந்த அவர்களில் ஒருவன் பெயர் போலீஸ் பக்ரூதின்.[22]  2013 இல் இவன் மீண்டும் கைது செய்யப்பட்டான்- ஆடிட்டர் ரமேஷ் படுக்கொலைக்காக. விடுதலைகள் தொடர்ந்தன. 2003 இல் கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 அல் உம்மாவினரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.[23] அதே ஆண்டு மீண்டும் 16 அல் உம்மாவினர் விடுதலை செய்யப்பட்டனர். காவல்துறை தங்கள் குற்றச்சாட்டுக்களை தகுந்த முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால்.[24]  அதிமுகவுடனான இஸ்லாமிய அமைப்புகளின் அணி மாற்றத்துக்கும் அல் உம்மாவுக்கு கிடைத்த இந்த விடுதலை பெருவிழாவுக்கும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி தீர்ப்புகளுக்கு மேல் தீர்ப்புகளில் அல் உம்மாவினர் விடுதலையாகிக் கொண்டிருந்த போது அந்த பயங்கரவாத செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தோ அல்லது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி குறித்தோ இந்து சமுதாயமும் ஊடகங்களும் மறந்துவிட்டன. செல்வராஜ் அவர்களின் மனைவியும் மகளும் வாடிப்பட்டியில் வறுமையில் வாழ்ந்து வந்தனர். ஒரு உயர் காவலதிகாரி தனது சொந்த முயற்சியில் அவர்களுக்கு உதவி செய்தார்.
மதானி மசாஜும் மாராடு படுகொலைகளும்: 
அந்த மனிதரின் கண்களில் நிரந்தர சோகம் உள்ளது. நடுத்தர வர்க்கத்துக்கும் வறுமை கோட்டுக்கும் சரியாக இடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம். அவர் வயதுக்கு அவர் தோற்றம் அதிக முதுமையை காட்டும். காரணம் இருக்கிறது. அவரது ஒரே மகன் – நன்றாக ஹாக்கி விளையாடக்கூடிய சூட்டிகையான சிறுவன்- கோவை குண்டு வெடிப்பில் பலியாகி போனான்.  இதைத்
தொடர்ந்து நஷ்ட ஈடாக அவனது தந்தை  கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணி அளிக்கப்பட்டார். அவர் ஒரு நபருடைய அனைத்து தேவைகளையும் பார்த்து கொள்ள வேண்டும். யார் அந்த நபர்? அந்த தந்தையின் ஒரே சிறுவன் இறக்க காரணமான கோவை வெடிகுண்டு நிகழ்வின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவன் – அப்துல் நாசர் மதானி என்கிற தென்னிந்திய ஜிகாதின் அருட்தந்தை. ஜிகாத் எனும் பயங்கரவாத மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்ட ஏழை இந்துக்களுக்கு எவ்வித கருணையையும் அரசிடமிருந்து எதிர்பார்க்கமுடியாதென்றால் நீதி என்பதும் இந்துக்களுக்கு எட்டாகனிதான். அரசு எதுவானாலும்.
marad1

மாராடு மீனவர் படுகொலை: பயங்கரவாதத்துக்கு பாதுகை தாங்கும் அரசியல் லாப போக்கு அதிமுக அரசும் விதிவிலக்கில்லை என்பது 2002 இல் தெரியவந்தது. தமுமுக ஆதரவு கொண்ட அதிம்முக அரசு சையது முனீர் கோதா எனும் ஐ ஏ எஸ் அதிகாரியை உட்துறை செயலராக்கியது. [25]  பின்னர் இந்த ஐஏஎஸ் அதிகாரி அப்துல் நாசர் மதானிக்கு உதவியதாக அதே ஜெயலலிதாவால் தமுமுகவுடனான உறவு முறிந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டார்.[26] மதானி சிகிச்சைக்காக இப்படி சிறையிலிருந்து வெளியே வர ஆரம்பித்ததும் அவனது தகவல் தொடர்புகளின் எல்லை விரிவடைய ஆரம்பித்தது. மே- 2- 2003 இல் கேரளாவின் மாராடு எனும் கடற்கரை கிராமத்தில் எட்டு இந்து மீனவர்கள் ஜிகாதிகளால் கொல்லப்பட்டனர். ஆயுதம் ஏதுமின்றி கடற்கரையில் குடும்பத்தினர் முன்னால் வெட்டப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தாமஸ் கமிஷன் கேரள அரசால் நியமிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது இந்த படுகொலைகளை செய்ய திட்டமிட்ட முக்கிய பேர்வழியான முகமது நஃபி என்பவன், மாராடு மீனவர் படுகொலைக்கு முன்னால் அப்துல் நாசர் மதானியை கோவை மத்திய சிறையில் வந்து எட்டுமுறை சந்தித்தது தெரியவந்தது.  [27] அது மட்டுமல்ல மற்றொரு ஐ ஏ எஸ் அதிகாரியான சூரஜ் என்பவரே உள்ளூர் நிர்வாகம் இந்த படுகொலையை தடுக்க முடியாமல் போனதற்கு காரணம். [28] ஆக சூரஜ் என்கிற இஸ்லாமிய ஐ ஏ எஸ் அதிகாரி கேரளத்திலும், முனீர் கோதா என்கிற ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாட்டிலும் செய்கின்ற செயல்கள் இறுதியில் மாராடு படுகொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியளிக்கின்றன. இது இருவருக்கும் தெரியாமல் தற்செயலாக நடந்திருக்குமா என்பதை படிப்பவர்களின் ஊகத்துக்கு விட்டுவிடலாம். அவை தற்செயல் இல்லை என்றால் ஜிகாதிகளின் கரங்கள் அரசதிகாரத்தின் உயர் பீடங்கள் வரை நீண்டுவிட்டன என்பதுதான் பொருள்.
2004 இல் அதிமுக மீண்டும் பாஜகவுக்கு அரசியல் ரீதியில் அருகாமையில் வர தொடங்கியது. இஸ்லாமிய அமைப்பான தமுமுக உடனே உறவை முறித்துக் கொண்டது. அப்போதுதான் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு முனீர் கோதாவின் வரம்பு மீறி மதானிக்கு உதவிய செயல்பாடுகள் உறைக்க ஆரம்பித்தன. கோதா நீக்கப்பட்டார். இஸ்லாமியவாதிகள் பெரும் கூச்சலை எழுப்பினர். 2004 இல் பாஜக – அதிமுக கூட்டணி முழுமையாக தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டது. 2004 இல் காவல்துறை மனிதநீதி பாசறையின் ஒரு முகாமை வெளிக்கொண்டு வந்தது.  காவல்துறையினரின் தகவல்களின் படி MNP   இந்தியா முழுக்க வலைப்பின்னல்களை உருவாக்கி விட்டிருந்த ஒரு இயக்கமாகியிருந்தது. அதற்கு யாசின் மாலிக்கின் JKLF உடன் தொடர்பு இருந்தது. காஷ்மிர் பயங்கரவாத இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை அணி திரட்டுவது அதன் வேலைகளில் ஒன்றாக இருந்தது என காவல்துறை கருதுகிறது. [29] மனிதநீதி பாசறை பின்னாட்களில் உருவான பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியாவின் முன்னோடி. இந்த அமைப்பின் முதல் கொடி பிரிவினைவாத அமைப்பான  JKLF கொடியாகவே இருந்தது. பின்னர் ஒரு சிறிய நட்சத்திரம் மட்டும் சேர்த்து மாற்றியமைக்கப்பட்டது.
2005 இல் ஒரு தமிநாட்டு பேரூந்து கேரளத்தில் எரியூட்டப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவன்  தடியந்தவிடே நாஸீர்.  கோவை பிரஸ் கிளப்பிலும் குண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடையவன் இவன். கேரளத்தை பூர்விகமாக கொண்ட இவனே தென்னிந்திய ஜிகாத்துக்கான  லஸ்கர் இ தொய்பா  பொறுப்பதிகாரி. 2009 இல் பெங்களூரில் இவன் கைது செய்யப்பட்ட போது மத்திய உட்துறை அமைச்சரகம் (MHA) இந்த விவரங்களை தயங்கியே வெளியிட்டது.[30]  குறிப்பாக பயங்கரவாதி இஷ்ரத் ஜெகான் விவகாரத்துக்கு பிறகு பயங்கரவாத எதிர்ப்பு என்பது மிகவும் அரசியலாக்கப்பட்டதன் விளைவு இது.
madhani1

madhani1

ஆடம்பர மசாஜ்: மதானி சிறையில் இருந்த போதும் அவனுக்கு கிடைத்த அரசியல் ஆதரவினால் ஜிகாதி வலைப்பின்னலை தென்னிந்தியாவில் மேலும் மேலும் பலமடைய செய்ய முடிந்தது.  அவனது ஆதரவாளர்கள் - தீவிர அடிப்படைவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள், இலக்கியவாதிகள் இடதுசாரிகள் – என  அவனுடைய விடுதலைக்காக  பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தினர். மார்ச் 2006 இல் கேரள சட்டசபையில் மார்க்ஸிஸ்ட்களும் காங்கிரஸும் இணைந்து அவனை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். [31] திமுக தன் பங்குக்கு சிறை வாசத்தையே ஆயுர்வேத ஆரோக்கிய மையத்துக்கான வாசமாக மாற்றியது. ஆயுர்வேத மசாஜ் முதல் அத்தனை வசதிகளும் மதானிக்கு சிறைவாசத்தின் போது மக்கள் வரிப்பணத்தில் கிட்டியது.  2006 இல் மாநிலத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டு திமுக அரசு வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் திமுகவுடன் கைகோர்த்து கொண்டன.  திமுக மீண்டும் தன் கோவை குண்டு வெடிப்புக்கு முந்தைய ஜிகாத் ஆதரவு நிலைபாட்டுக்கு சென்றது.  முனீர் ஹோதா உள்துறை செயலர் ஆக்கப்பட்டார். அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மதானியின் PDP அமைப்புடன் கூட்டணி வைத்தது. ஜூலை 2006 இல் திமுக அரசு ஜிகாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டியது. மதானிக்கு ஆடம்பர ஆயுர்வேத சிகிட்சை 10 மசாஜ் செய்வோரைக் கொண்டு நான்கு ஆயுர்வேத வைத்தியர்களை கொண்டு செய்வித்தது. 35 நாட்கள் சிகிச்சை அரசு செலவில் அளிக்கப்பட்டது.[32]
தாலிபான் காட்சிகள்-வழங்குவது திமுக
mnp1

ஜூலை 22 2006 அதிகாலையில் கோவை மாநகர காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.இவர்கள் மனிதநீதி பாசறை எனும் ஜிகாத் அமைப்பைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் டிடோனேட்டர்கள், மேப்கள், IED ஆகியவை இருந்தன. கோவை மாநகர மருத்துவமனையை, ரயில்நிலையம், காவல்நிலையம் ஆகியவற்றை சிதறடிப்பது இவர்களின் திட்டமாக இருக்கலாம் என காவல்துறை கருதியது. ஆகஸ்ட் 2006 இல் கோவை மாநகராட்சி துணை கமிஷனர் V.ரத்னசபாபதி கோயம்புத்தூரை மீண்டும் தாக்க ஒரு திட்டத்தை ஜிகாதிகள் வகுத்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக கூறினார். மனிதநீதி பாசறைக்கு ஆதரவாக இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் திமுக அரசுக்கு அழுத்தம் அளித்தன. திமுகவும் வளைந்து கொடுக்க தயாராகவே இருந்தது. ரத்னசபாபதி இடமாற்றம் செய்யப்பட்டார். வழக்குகள் பலவீனப்படுத்தப்பட்டன. பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். [33]
திமுகவின் இந்த செயல் ஜிகாதிகளுக்கு பச்சை சமிக்ஞை காட்டியதாயிற்று. கூடவே காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்தது. காவல்துறையினர் தங்கள் பெயர்களை தெரிவிக்காமல் எப்படி திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களிலேயே 12 இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை பின்வலிக்கக் கூறிவிட்டார்கள் என்பதை விளக்கினர். இவர்கள் கிச்சான் புகாரியின் ஆட்கள். சையது முகமது புகாரி என்கிற கிச்சான் புகாரி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன். அல் உம்மா.  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் அடைக்கப்பட்டவர்களுக்கு கூட பிணை கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம் ஜிகாதி செயல்களின் முக்கிய மையமானது. திமுக அரசு ஜிகாதிகளுக்கு காட்டும் ’வெளிப்படையான ஆதரவு’ குறித்து காவல்துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை சொல்லாமல் கவலை தெரிவிக்க ஆரம்பித்தனர். [34]
kpandiyan

அவர்களின் கவலைகள் நியாயமானவையே. ஏனெனில் தொடர்ந்து இந்து தலைவர்கள் மட்டுமல்லாது சமரசவாத இஸ்லாமியர்களும் தாக்கப்பட்டனர். தலிபான் ஆட்சியை ஒத்த சூழல்கள் உருவாகலாயின.  ஜூலை 2006 இல் மேலப்பாளையத்துக்குள் ஒரு அல் உம்மா பயங்கரவாதியை கைது செய்ய சென்ற தலைமை கான்ஸ்டபிள் அடித்து துரத்தப்பட்டார். [35] காவல்துறை போக இயலாத குட்டி தலிபானிய பிரதேசங்கள் ஆங்காங்கே உருவாகலாயின.  நவம்பர் 2006 இல் இந்து சிறைகைதிகளை அல் உம்மா கைதிகள் கடுமையாகத் தாக்கி மதுரை சிறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு செல்ல வேண்டிய சூழலை ஜிகாதிகள் உருவாக்கினர். [36] டிசம்பர் 17 2006 அன்று திரு.எம்.ஆர்.காந்தி குமரி மாவட்ட பாஜகவின்மூத்த தலைவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார். அவரை உயிருடன் எரிக்கப்போவதாக அவர்கள் மிரட்டினர். [37]அதே இரவு தென்காசியில் ஜிகாதி பயங்கரவாதிகள் தென்காசி இந்து முன்னணி தலைவரான குமார பாண்டியனை வெட்டிக் கொன்றனர். [38] புகழ் பெற்ற தென்காசி சிவன் கோவில் எதிரில் ஒரு மசூதியை கட்டும் இஸ்லாமிய ஆதிக்க திட்டத்தை அவர் எதிர்த்ததே இதற்கு காரணமாக இருக்க வேண்டும்.  இதே எம்.ஆர்.காந்தி அவர்கள்தான் 2013 இல் மீண்டும் ஜிகாதிகளால் தாக்கப்பட்டார். தங்கள் காஃபிர் இலக்குகளை ஜிகாதி வல்லூறுகள் அத்தனை எளிதில் மறந்துவிடுவதில்லை.
உள்துறை அமைச்சகத்தால் வெளிநாட்டு பணம் பெறுவதிலிருந்து கூட தடை படுத்தப்பட்ட தமுமுக திமுகவின் அன்பிற்குரிய அமைப்பாக வலம் வந்தது.ஷரியத் சட்டம் தாலிபான் அமுல்படுத்துதல் என தென் மாவட்டங்களில் தாலிபானிய ஆட்சியை இந்த அமைப்பு அரங்கேற்றியது.
taliban1

பெண்கள் கொலைகள்: மார்ச் 2007 இல் திருநெல்வேலி மாவட்டத்தில் 35 வயது இஸ்லாமிய பெண் கல்லால் அடித்து பின்னர் கத்தியால் குத்தி சடங்குத்தன்மையுடன் கொலை செய்யப்பட்டார்.   மே 2007 இல் தேநீர் விற்கும் மற்றொரு இஸ்லாமிய பெண் அனைவர் முன்னிலையிலும் வெட்டி கொல்லப்பட்டார்.  [39] காஃபிர் தொழிலாளிகள் வரும் வழியில் அந்த டீக்கடை இருப்பதால் அவர் ஜிகாதிகளால் எச்சரிக்கப்பட்டிருந்தார். அதை அவர் புறக்கணித்ததால் அதற்கு அவர் உயிரையே விலையாக கொடுக்க நேர்ந்தது.மாவட்ட தமுமுக அதிகாரி ‘ஒழுக்கமற்ற’ பெண்களை கல்லால் அடித்து கொல்லுவது சட்டமாக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக கூறினார். [40]  அண்டைய கேரளத்திலும் நிலை மோசமாகத்தான் இருந்தது. ஒழுக்க காவல்துறையாக மதானியின் PDP அமைப்பினரும் மார்க்ஸிஸ்ட்களின் DYFI அமைப்பினரும் செயல்பட்டனர். [41]
திமுக ஆட்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜிகாதி அமைப்புகள் தமிழ்நாட்டில் தம் உள் கட்டமைப்பை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டன.  மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைகளை அது உருவாக்கியது.  இது குறித்து செப்டம்பர் 2007  விழா ஒன்றில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ்களை தமுமுக ஆம்புலன்ஸ் அமைப்புக்கு வழங்கினார். [42] ஆகஸ்ட் 2007 இல் தென்காசியில் தமுமுக இந்துக்களுடனான கொலை வெறி மோதலில் தங்கள் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தியிருந்தது.
murder1

வன்முறை ஆம்புலன்ஸ்கள்: ஏற்கனவே ஜிகாதிகளால் கொல்லப்பட்ட குமார பாண்டியனின் சகோதரர்களையும் கொல்ல ஜிகாதிகள் திட்டமிட்டனர். இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 14 – பாகிஸ்தான் சுதந்திர தினம். இந்த தாக்குதல் குறித்து நெல்லை மாலைமலர் (14-8-2007) செய்தி தெளிவாக சொல்கிறது: திட்டமிட்டு வன்முறையைத் தொடங்கியவர்கள் ஜிகாதிகள்தான் என்று. [43]வழக்குக்காக சென்று கொண்டிருந்த குமார பாண்டியன் குடும்பத்தினரை ஜிகாதிகள் இரண்டு மோட்டார்பைக்குகளில் வந்து தடுத்தனர் அத்துடன் ஆம்புலன்களை இந்த தாக்குதலின் போது இயக்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஆகஸ்ட் 2007 இல் மதானிக்கு எதிரான தமிழக காவல்துறை வழக்கு திமுக அரசினால் முடிந்த அளவு பலவீனப்படுத்தப்பட்டது என்றே கருத வேண்டியுள்ளது. அவன் விடுவிக்கப்பட்டுவிடுவான் என்பது ஏறத்தாழ முடிந்த முடிவாகிவிட்டது. ஆனால் இறுதி தீர்ப்பு விநோதமாக அமைந்தது. வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதி “சட்ட காரணிகளைக் காட்டிலும் வேறுபல காரணிகளை கணக்கில் எடுத்து மரண தண்டனை அளிப்பதை தவிர்த்தது.[44]  மதானி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டான் மதானி 2007 இல் வெளியே வந்தான். பாஷா தூக்கு கயிறிலிருந்து தப்பவைக்கப்பட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் படோடபமில்லாமல் கமுக்கமாக அல் உம்மா இயக்கத்தினர் ஒன்பது பேரை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்தது கருணாநிதி அரசு. [45]
ali1

2008 இல் புழல் சிறையில் இருந்தபடியே தமிழ்நாடு முழுக்க குண்டு வெடிப்புகளை நடத்த ஜிகாதிகள் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூளையாக இருந்தவன் அலி அப்துல்லா. அப்துல் காபர் என்கிற பழைய அல் உம்மா உறுப்பினரின் வீடுதிருநெல்வேலியில் (பேட்டை) சோதனையிடப்பட்ட போது அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் பாகங்கள் கிட்டின. இதைத் தொடர்ந்து மதுரையில் ஒரு வீடு சோதனை செய்யப்பட்ட போது ஒரு கிலோ வெடிமருந்து சிக்கியது. அப்துல் காபர் தமிழ்நாடு முஸ்லீம் லீகில் இணைந்து 2004 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறான். பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலும் இணைந்து விலகியிருக்கிறான். அலி அப்துல்லா ‘இஸ்லாமிக் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்’ (Islamic Defense Force, IDF) என்கிற அமைப்பை உருவாக்கியவன். அண்ணா சாலை மேம்பால குண்டு வெடிப்பை இந்த அமைப்புதான் பொறுப்பேற்றிருந்தது. 2008 இல் அவன் புழல் சிறையில் ஈரோடு-திருச்சி ரயில் குண்டு வெடிப்பு குற்றச்சாட்டில் கைதியாக இருந்தான்.[46] ஆனால் 2010 இல் ஈரோடு-திருச்சி ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் 13அல் உம்மா இயக்கத்தினர் விடுவிக்கப்பட்டபோது அதில் அலி அப்துல்லாவும் ஒருவன்.[47]
அல் உம்மாவினரை கைது செய்யும் காவல்துறை சில ஐந்தாண்டுகள் அவர்களை சிறையில் வைத்திருக்கிறது. அப்போது அவர்கள் சர்வ தகவல் தொடர்பு வசதிகளுடன் இருக்கிறார்கள். வெளியே இயக்கக் கட்டமைப்புகளை பலப்படுத்துகிறார்கள். பின்னர் வழக்குகள் பலவீனப்பட்டு அவர்கள் விடுபட்டு வெளியே வருகிறார்கள். மக்களோ பயங்கரவாதிகள் கைதான செய்திகளை படித்துவிட்டு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். அந்த கைதுகளுக்கு பிறகு இந்த பயங்கரவாதிகளுக்கு சிறைக்குள் வசதிகளும், சிறையிலிருந்து நினைக்கும் காலகட்டத்தில் வெளியே கொண்டு வர செய்யப்படும் அரசியல் ரீதியான முயற்சிகளும் கவனிக்கப்படுவதே இல்லை.  ஆனால் இப்படி வெளியே வரும் அல் உம்மாவினரை ‘பொய் வழக்குகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள்’ என்று அடுத்த கட்ட பொய் பிரச்சாரமும் அல்தக்கியாவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும்.
மீண்டும் மதானி: பெங்களூரில் 2008  இல் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.  ஆகஸ்ட் 17, 2010 இல் இவை தொடர்பாக மதானி மீண்டும் கைது செய்யப்பட்டான். [48]  ஜிகாதி கரங்கள் கர்நாடகத்தில் இப்போது கேரள வலைப்பின்னலுடன் இணைந்து வலிமையாக்கப்பட்டிருந்தது. பாஜக அரசு நிச்சயமான தோல்வியை கர்நாடகத்தில் சந்திக்கும் என்கிற விஷயம் மதானிக்கு நற்செய்தியாக அமைந்தது. சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ‘அராப் நியூஸ்’ பத்திரிகை மதானிக்கு இது நல்லது என்றும் காங்கிரஸ் அரசு மதானியின் பிணையை எதிர்க்காது என்றும் செய்தி வெளியிட்டது. [49]  மீண்டும் கர்நாடகத்தின் காங்கிரஸ் அரசாங்கம் ஆனால் அதற்கு முன்னர் பாஜக ஆட்சியிலேயே கூட மதானியின் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஐந்து-எட்டு லட்சம் செலவளித்தது. ஜிகாதிகளுக்கான அரசாங்க செலவிலும் பணவீக்கத்தின் கொடுமை.[50]  அதிர்ஷ்டவசமாக  உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் மதானியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார். [51]
 மீண்டும் அஇஅதிமுக
cbi1

2011 இல் அ இ அதிமுக ஆட்சிக்கு வந்தது. தமுமுக இம்முறை தனது விசுவாசத்தை அதிமுகவுக்கு மாற்றியிருந்தது.  இம்முறை மனிதநேய மக்கள் கட்சி என்கிற பெயரில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இந்த ஜிகாதி வேர்கள் கொண்ட அமைப்பு வெற்றியும் பெற்றிருந்தது. இத்தனைக்கும் 28-11-2011 தேதியிட்டு MHA வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு நிதி உதவி பெறுவதிலிருந்து தடுக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தமுமுக. [52])  தமுமுக தலைவரான ஜவஹருல்லாவும் நான்கு அடிப்படைவாதிகளும் வெளிநாட்டு பணம் பெறுவதற்காக ஒரு அமைப்பை சட்ட நியதிகளுக்கு புறம்பாக அமைத்து செயல்பட்டமைக்காக சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.  15.12.1997 முதல் 20.06.2000 வரையான காலகட்டத்தில் இவர்கள் ரூபாய் 1,54,88,000/- வெளிநாட்டு பணத்தை சேகரித்துள்ளனர். இந்த பணத்தின் சேகரிப்பு எதற்காக ஏன் என்பதை எவரும் ஊகிக்கலாம். [53] ஆனால் இதெல்லாம் அதிமுக அரசுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.
vbm

பொதுவாக ஒரு எண்ணம் உள்ளது அதிமுக என்பது திராவிட கட்சிகளில் இந்துக்களுக்கு அந்த அளவு எதிர்ப்பு இல்லாதது என்பதே அது. எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் இது ஓரளவு உண்மைதான். மதமாற்றம் முதல் பல விஷயங்களில் எம்.ஜி.ஆர் இந்துபார்வையுடன் பரிவுடையவர். ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே தொடர்ந்து நிலைபாடுகளை எடுத்துள்ளார். அவரைப் பொறுத்தவரையில் வாக்குவங்கியும் தனிப்பட்ட ஆத்திரங்களும் முதன்மை காரணங்களாக உள்ளன. அதிமுக அரசு வந்த பிறகு தொடர்ந்து இஸ்லாமிய ஜிகாதி அடிப்படைவாத அமைப்புகள் வலு பெற்றவாறு உள்ளன. ‘துப்பாக்கி’ படத்துக்கான எதிர்ப்பும் ’விஸ்வரூபம்’ படத்துக்கான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவர்கள் நபி என்று நம்புகிற முகமது  குறித்து சில மாறுபட்ட விஷயங்களை காட்டியது என ஒரு யூட்யூப் வீடியோவுக்கு எதிராக  செப்டம்பர் 2012 இல் அமெரிக்க கான்ஸுலேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்முறையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் குறித்து அடிப்படைவாதியும் தமுமுக பாசிச இயக்கத்தின் தலைவருமான ஜாவருல்லா  ’அந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது ஆனால் நாங்கள் அதற்காக வருந்தவில்லை’ என தெரிவித்தார். [54]  இந்த சென்னை வன்முறைக்காக 12 தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்து ரத்தத்தின் மீது அல்-தக்கியா
murugan

2012-3 இல் இந்து இயக்கத்தலைவர்கள் படுகொலை ஆரம்பமானது. இம்முறை படுகொலையுடன் இணைந்து அவர்கள் கொல்லப்பட்டது தனிப்பட்ட காரணங்களுக்காக எனும் அல்-தக்கியாவும் இணைந்து நடத்தப்பட்டது.  23-10-2012 அன்று அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். 19-3-2013 அன்று பரமக்குடியில் பாஜக தலைவர் முருகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்ட  கட்டுரையில் முஸ்லீம்கள் இந்து இயக்கத் தலைவர்கள் கொலையில் பலிகடா ஆக்கப்படுவதாக எழுதி அது அனேக இஸ்லாமிய மற்றும் இடதுசாரி தளங்களில் வெளியாகியது.  அது குறித்து இப்படி எழுதப்படுகிறது:”பரமக்குடி பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன். இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ” [55]
அதே போல மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை விஷயத்திலும் ’மதச்சார்பற்ற தீவிர இடதுசாரியான’ வினவு தளத்துக்கும்  இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரச்சாரத்துக்கும் அதிசயிக்கத்தக்க ஒற்றுமை உள்ளது. வினவு தளம் சொல்கிறது: “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.”  [58]   ஆனால் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து கைதான போலீஸ் பக்ருதீன் கொடுத்த வாக்குமூலத்தில் அவன் தானே அரவிந்த் ரெட்டியை கொன்றதை ஒத்துக் கொண்டிருக்கிறான். [59]
மேலப்பாளையம்: திரும்பும் வரலாறு
padusha1

bukari

பெங்களூரு குண்டு வெடிப்பு, மதுரையில் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயற்சி ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் வரும் பெயர்கள் கிச்சான் புகாரி பறவை பாதுஷா. 2013 ஜூலை 27 இல் தேதி சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் சாகுல் ஹமீதையும்  அவனது கூட்டாளி முகமது தாசிமையும் கைது செய்தனர். மேலும் சோதனையில் மேலப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வெடிமருந்து பொருள்களையும் டிடெனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டன.  மேலப் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி, நூருல் அகமது, முகமது சம்சுதீன் ஆகியோருக்கு இதில் தொடர்பிருந்தது.  மேலும் மேலப்பாளையத்தில்  145 எலக்ட்ரிக் டெட்டனேட் டர்கள், 17.50 கிலோ வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின்னணியில் மூளையாக செயல்படுகிறவர்கள் கிச்சான் புகாரியும் பறவை பாதுஷாவும் ஆவர்.  [60] பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பில் புலனாய்வு செய்த காவல்துறை கிச்சான் புகாரியை  ஏப்ரல் 2013 இல் கைது செய்தது. பிப்ரவரி 2014 இல் பறவை பாதுஷா கைது செய்யப்பட்டான். கிச்சான் புகாரி எப்படி தொண்டு நிறுவனம் ஒன்றை போர்வையாக கொண்டு பயங்கரவாத செயல்களை புரிந்தான் என்பதை காவல்துறை கண்டுபிடித்தது.  அல்-உம்மாவுக்கு தடை விதிக்கப்பட்ட போது உருவானதே இந்த அமைப்பு – சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Charitable Trust for Minorities - CTM ) . இந்த அமைப்பின் மூலம் புகாரி செயல்பட்டான். இந்த அமைப்பின் மூலம் இஸ்லாமிய அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு இவர்களில் எவரேனும் கைது செய்யப்படும் போது அரசியல் அழுத்தங்களும் சட்டரீதியிலான தடங்கல்களையும் காவல்துறைக்கு உருவாக்குவது ஜிகாதிகளின் செயல்முறை.  [61]
tmmk_suppor

இப்போது இது மீண்டும் முழுமையாக ஆரம்பித்துவிட்டது. கிச்சான் புகாரியை விடுவிக்க வேண்டுமென்று தமுமுக ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகிறது.  அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய வாக்கு வங்கி புரோக்கர்கள் திராவிட அரசியல் கட்சிகளுடனும் இடதுசாரிகளுடனும் இந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் விடுதலைக்காக வாக்குவங்கி பேரம் நடத்துவார்கள். மனவக்கிரம் பிடித்த மார்க்ஸிய இடதுசாரிகளுக்கு மக்களின் மரணங்களில் என்ன ஆனந்தம் இருக்குமோ! இந்த பயங்கரவாதிகளுக்காக மனித உரிமை போராளிகளாகவே இவர்கள் மாறிவிடுவார்கள். தெருக்களிலும் ரயில்களிலும் உடல் சிதறி மாண்டவர்களும் தந்தையை தனயனை கணவனை இழந்து நிற்பவர்களும் மனித உரிமை அற்ற அஃறிணைகள் என்பது இந்த மனித உரிமை வியாபாரிகளின் எண்ணம். 2016 க்கு பிறகு நம் நினைவுகளில் நம் பலிதானிகள் மங்கிவிடும் நிலையில் நம் உயிரிழப்புகளின் வேதனை நீர்த்துவிடும் தருணத்தில் போலீஸ் பக்ருதீனும் கிச்சான் புகாரியும் மீண்டும் வெளியே வருவார்கள். அதன் பிறகு சில ஆண்டுகளில் மீண்டும் தொடரும் இந்துக்களின் கொலைகள். தவிர்க்கமுடியாத நிலையில் மட்டுமே நிகழும் சில ஜிகாதிகளின் கைதுகள்… ஆனால் அவர்கள் பெற வேண்டிய தண்டனை… அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி! அதை பெற்றுத் தருவதில்தான் உள்ளது இந்துக்களின் மானமும் நீதி உணர்வும்.
மற்றொரு அபாயம்: இந்த கட்டுரையாளனுடன் 2013 இல் தொடர்பு கொண்ட ஒரு ஈழத்தமிழ் பத்திரிகையாளர் (பெயரை வெளியிட இயலாது) இப்படி கூறினார்: “இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தீர்வு காண்பதே அவசியம் என்பதை உங்களில் தொடர்புகள் மூலம் வலியுறுத்தவேண்டும்.வடக்கு கிழக்கு பிரிக்கப்படுவது இந்தியாவின் தென்பிராந்திய நலனுக்கு ஆபத்தானது.சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று முஸ்லிம்களின் கையில் சென்றுவிட்டது.இந்த ஆதிக்கம் நீடிக்குமாயின் தற்போது அம்மாகாணத்தில் 35% – 40% இருக்கும் தமிழர்கள் மதமாற்றங்களின் மூலம் இல்லதொழிக்கப்படுவார்கள்.விடுதலைப்புலிகள் இருந்தவரை இந்த மதமாற்றக்கும்பலால் ஒருவரைக் கூட மதம் மாற்றமுடியாத நிலமை இருந்தது.தற்போது நிலமை தலைகீழாகி விட்டது.கிழக்கில் முஸ்லிம்கள் பலம் பெருவது இந்தியாவின் கால்களுக்கு இடையில் நெருப்பை வைப்பது போன்று ஆகிவிடும்.” இதை அவர் கூறியது 15 மே 2013 இல். மே 1 2014 அன்று சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் விரக்தியை பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றும் முயற்சிகளில் சவூதி முதல் பாகிஸ்தான் வரை உள்ளூர் தூய இஸ்லாமிய வஹாபிகள் ஊடாக ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக உருவாகிவரும் இந்த வலைப்பின்னல் மற்றொரு பெரும் அபாயம். இலங்கைத் தமிழர் விஷயத்தில் முந்தைய இந்திய அரசு நடந்து கொண்ட கேவலமான போக்குக்கு நாம் கொடுக்கப் போகும் பெரும் அபாய விலை  இது. பாகிஸ்தான் இலங்கை மலேசியா என விரியும் மற்றொரு வலைப்பின்னல் இது. அண்மைக்காலமாக மலேசியாவில் தமிழ் இந்துக்கள் தாக்கப்படுவதுடன் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் வர்த்தக-பிரச்சார கேந்திரமாகவும் அது மாறியிருக்கிறதோ என்கிற ஒரு ஐயமும் எழுகிறது. அண்மையில் செய்யப்பட்ட சில பிரபல மதமாற்றங்கள் மலேசியாவை மையப்படுத்தி நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைப் போலவே  சென்னை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ அமைப்பின் இலங்கை சார்ந்த உளவாளி மலேசியாவில் இருந்து இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[62] அது போலவே சென்னையில் குண்டு வெடிப்பதற்கு இரு நாட்கள் முன்னர் ஐ எஸ் ஐ உளவாளி எனும் ஐயத்தில் ஸாகிர் ஹுசைன் என்பவனை காவல்துறை கைது செய்தது. ஸாகிர் ஹுசைன் இலங்கையைச் சார்ந்தவன்.[63]
ஸ்லீப்பர் கொலையாளிகள்: இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ் கொலைக்கு பிறகு மற்றொரு புதிய சவால் நீதி துறைக்கும் காவல்துறைக்கும் விடப்பட்டுள்ளது. இந்து தலைவர்களை கொலை செய்ய ஒரு முழு நேர புதிய இயக்கம் ஸ்லீப்பர் செல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு பெரிய அளவில் தொகையும் நெருங்க முடியாத அளவு அதிகாரம் படைத்தவர்களின் மூளையும் பின்னணியில் உள்ளதாக அதில் கைது செய்யப்பட்டுள்ளன. இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த நசீர் (28), கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த குத்புதீன் ஆகியோரில் குத்புதீன் இந்த உண்மைகளை சொல்லியுள்ளான். நசீரும் குத்புதீனும் கொலை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நபரை கண்காணித்து அவரது அன்றாட நடவடிக்கைகளை கொல்ல சரியான நேரத்தை கூறுகிறவர்கள் என்பது தெரிகிறது. மற்றொரு அணி கொலையை நேரடியாக செய்வது. இதில் அலாவுதீன் என்பவன் கைதாகியுள்ளான்.[64]
killers

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், கிச்சான் புகாரி , அலி அப்துல்லா என இப்போது ஜிகாதி பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அணிகளின் முதன்மை கொலையாளிகள் ஏற்கனவே கொலை செய்தவர்கள். பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அரசியல் நிர்ப்பந்தங்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள். நம் கண் முன்னரே வழக்குகள் பலவீனப்படுத்தப்பட்டு தொடக்க கைதுகளுக்கு பிறகு மிகவும் திட்டமிட்ட ரீதியில் விடுதலை செய்யப்பட்டவர்கள்.  இங்கு நடக்கும் விளையாட்டை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையால் கைது செய்ய மட்டுமே முடியும். சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் மட்டும் இவர்களை அடைத்து வைப்பதும் பின்னர் அரசியல் நிலைகளுக்கு தகுந்து விடுதலை செய்வதும் தொடர்கின்றன. இவர்கள் வெளியே வந்து இந்துக்களை கொலை செய்கின்றனர். அரசியல் ரீதியாகவோ ஜிகாதி வலைப்பிணைப்புகள் மரணக்கயிறாக இந்து சமுதாயத்தை அமுக்குகின்றன.
sob_story

ஏற்கனவே ஊடகங்களில் ஒரு கும்பல் இந்த வேலையை தொடங்கிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெகல்கா பிலால் மாலிக்கின் மனைவி குழந்தைகள் குறித்து படம் வெளியிடுவதும், போலீஸ் பக்ருதீனின் காதல் கதையை மவுண்ட்ரோட் மாவோ எனப்படும் தி இண்டு பத்திரிகை வெளியிடுவதும் எதற்காக?பயங்கரவாதிகளின் குடும்ப நபர்கள் -குறிப்பாக பெண்கள் குழந்தைகள் படங்களை போட்டு அவர்களுக்காக ஒரு பரிவை உருவாக்கும் வேலை தொடங்குகிறது.நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சார ஓலம் அதிகமாகும். ஆனால் கடைசியாக என்றைக்கு நீங்கள் ஜிகாதி வெறியர்களின் தாக்குதலால் தந்தையை இழந்த குழந்தையின் சோகத்தை தி இண்டுவோ அல்லது பிற போலி-மதச்சார்பற்ற ஊடகங்களோ வெளியிட்டதை பார்த்தீர்கள்? இந்த ஊடக விலைபோகுதலும் பரிதாபம் உருவாக்கும் அவல உக்தியும் ஜிகாதின் ஒரு பகுதி. எப்படி கொலை செய்வதற்கு முன்னர் ஜிகாதி உளவு அமைப்புகள் வேவு பார்க்கின்றனவோ அப்படித்தான் கொலை செய்த பிறகு ஜிகாதி ஊடக அமைப்புகள் பரிவு உருவாக்கும் வேலையை பார்க்கின்றன. ஜிகாதியின் கொலை ஆயுதமும் போலி-மதச்சார்பற்ற ஊடகவாதியின் பேனாவும் காமிராவும் கொலைக்கருவிகளின் இருபக்கங்கள்.  இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும்.
இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்தால் நிச்சயமாக இந்து இயக்கங்கள் அந்த வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க அழுத்தங்கள் அளிக்க வேண்டும். மரண தண்டனை என்பது ஒரு பண்பட்ட சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஜிகாதி பயங்கரவாதம் போன்ற அபாயத்தை எதிர்நோக்கும் போது அதை வேரும் வேரடி மண்ணுமற களைய அந்த மரண தண்டனை இப்போது அவசியமே. எனவே ஜிகாதி பயங்கரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு ஜிகாதியும் சரியான விதத்தில் தண்டிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களால் உயிரிழந்த நம் சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும் வரை நாம் விழிப்புடன் இருந்தாக வேண்டும். மோதி அரசே வந்துவிட்டதென்றாலும் அயர்ந்திருக்க நாம் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா ஒட்டுக்கும் இது பொருந்தும்.
 ***ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பலிதான தினத்தை முன்னிட்டு-அவர் நினைவுக்கு **
ஆதாரங்கள்:
[1] ஜூனியர் விகடன் 28-ஜூலை-2013
[2] தினகரன், 2-ஜூலை-2013
[3] தினகரன் (குமரி பதிப்பு), 26-ஏப்ரல்-2013
[4]‘One held in the recent assault on senior RSS cadre‘, Times of India, 16-Nov-2012
[5]‘Vellore doctor done to death’, The Hindu, 25-Oct-2012
[6] Report on Islamic Terrorism in India, A study conducted by Akhil Bharathiya Vidhyarthi Parishad, Tamil Nadu, 1999
[7]‘41 years of imprisonment for four Al-Umma activists‘, The Hindu, 10-Apr-2008
[8]‘Al-Umma enjoyed AIADMK support, alleges BJP report’, The Indian Express, 26-Apr-1998
[9]`NDF received aid from foreign countries‘, The Hindu, 30-Oct-2005
[10]‘ISI, Iran funded NDF: Rawat‘, The Hindu, 14-May-2005
[11]Sunday 5-11-May-1995 referred in Srikanta Gosh, ‘Pakistan’s ISI: Network of Terror in India‘, APH Publishing, 2000, p.59
[12]’கோவை வன்முறை சம்பவம் மூன்று பேர் கைது’, தினமணி, 18-செப்டம்பர்-1997
[13]’வன்முறையைத் தூண்டும் சுவரொட்டி இருவர் கைது’, தினமணி 15-டிசம்பர்-1997
[14]’போலீஸ் நிலையம் தாக்கியதாக ஒருவர் கைது’, தினமணி, 2-ஜனவரி-1998
[15] மாலை முரசு, கோவை பதிப்பு, 28-ஜனவரி-1997
[16] A Ganesh Nadar,‘The Al-Umma has finally united the Hindus’, Rediff Special, Accessed: 23-Jul-2013).
[17] ’10 killed, 64 hurt in 3 train blasts’,UNI, 6-Dec-1997
[18] History of Coimbatore City Police:90s,http://www.coimbatorecitypolice.com/ccp-history-90s : accessed on 23-Jul-2013
[19]‘3 held for ABVP worker’s murder’, UNI, 13-Apr-1998
[20]‘Chargesheet filed in Sridhar murder case’, The Hindu, 2-Mar-2000
[21]‘The end of a chase’, Frontline, Vol.19 – Issue 21, Oct 12 – 25, 2002
[22]‘ All accused in Paramasivam murder case acquitted‘, The Hindu, 11-Jul-2002
[23]‘All 8 Al-Umma men acquitted in Selvaraj murder case’, The Hindu, 27-Feb-2003
[24]‘5 Al-Umma activists acquitted‘, The Hindu, 05-Apr-2003 and ‘ 11 Al-Umma men acquitted in bus burning case‘, The Hindu, 27-May-2003
[25]‘Syed Munir Hoda new Home Secretary‘, The Hindu, 13-Aug-2002
[26]‘Jayalalithaa angers Tamil Nadu’s Muslims with remarks on Syed Munir Hoda‘, 23-Sep-2006, webIndia.com, accessed on 24-07-2013
[27] Thomas P Joseph Commission of Inquiry-Marad Communal Distrabances, Chapter IV, p.55
[28]‘Marad: tribunal examines NIA SP‘, The Hindu, 23-Mar-2011
[29]‘Fundamentalist outfit busted at Nellikuppam‘, The Hindu, 29-Oct-2004
[30]‘MHA confirms arrest of LeT’s southern commander Nazeer‘, India Today, 3-Dec-2009
[31]‘Kerala polls: UDF, LDF woo rabble-rousing Abdul Nasser Madani’, India Today,17-Apr-2006
[32]‘DMK turns jail into spa for Coimbatore terror accused‘, The Indian Express, 23-Jul-2006
[33]‘DMK bends for MNP, Intelligence officer transferred’, The Indian Express,8-Aug-2006
[34]‘DMK govt ordered six cases dropped against Muslim hardliners in TN’, The Indian Express, 8-Aug-2006
[35] ‘மேலப்பாளையத்தில் ஏட்டு மீது தாக்குதல்’,தினகரன், நெல்லை பதிப்பு, 20-ஜூலை-2006.
[36]’6 Imam Ali aides shifted out of Madurai prison‘, The New Indian Express, 26-Nov-2006
[37] ’குமரி மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி. ‘தீ வைத்து எரிப்போம்’ என மிரட்டல்’, மாலைமலர், நாகர்கோவில் பதிப்பு, 18-Dec-2006
[38]’TN: Hindu Munnani leader hacked to death’, Rediff News, 18-Dec-2006
[39]‘அழகிய பெண்களை குறிவைக்கும் அல் உம்மா’, தமிழன் எக்ஸ்பிரஸ், 14-May-2007
[40]‘In Tamil Nadu town, fundamentalists play moral cops, even kill to have way‘, The Indian Express, 26-Mar-2007
[41]’Inaugurated: The Malabar Moral Police!‘, 13-Jan-2010, www.kafila.org : accessed on 24-Jul-2013
[42]’I shall continue to serve minority communities”‘, The Hindu, 25-Sep-2007
[43]’தென்காசியில் கலவரம் : ஆறுபேர் கொலை’, மாலை மலர் (நெல்லை பதிப்பு),
[44]‘No ‘direct’ evidence in Coimbatore blasts: Judge’, IANS, 30-Oct-2007
[45]‘Men guilty of Coimbatore blasts released early from jail‘, NDTV.com, 17-Sep-2009: Accessed on 24-Jul-2013
[46]’Plot Unveiled’, Frontline, Volume 25 – Issue 17 :: Aug. 16-29, 2008
[47]’Eight acquitted in bomb blast case’, The New Indian Express, 22-May-2010
[48]‘PDP chief Madani arrested in Bangalore blast case’, PTI, 17-Aug-2010
[49]‘Congress win bades well for Madani’, Arab News, 11-May-2013
[50]‘Spa treatment for Madani costs govt Rs 8 lakh‘, Times of India, 8-Jun-2011
[51]‘Supreme Court denies bail to Bangalore blast accused Madani’, India Today, 3-Jan-2012
[52] http://mha1.nic.in/fcra/NGOS_ProhibitedCategory.pdf
[53] http://cbi.nic.in/pressreleases/pr_2011-10-05-1.php
[54]US consulate attack was unfortunate, but don’t regret that incident: TMMK chief Dr. Jawahirullah, Mohd. Ismail Khan, TwoCircles.net,20-Sep-2012
[55]பீர் ஷாகுல் ஹமீது, ”இதுவரை நடந்த 8 கொலைகளுக்கும் முஸ்லிம்தான் பலிகடாவா ? – ஓர் அலசல்”, www.appadiaa.com
[56]வசந்தன், ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள்!, ஜூலை-23-2013, வினவுதளம்
[57] பாஜ பிரமுகர் கொலை 4 பேர் பிடிபட்டனர், தினகரன், 7-ஏப்ரல்-2013
[58](வசந்தன், ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !, ஜூலை 23 2013, வினவுதளம்
[59]Al-Umma operatives say they killed two more BJP leaders in Tamil Nadu, Times of India, 10-10-2013
[60]வெடி பொருள்கள் பறிமுதல் வழக்கு: கிச்சான் புகாரி கூட்டாளி கைது, தி இந்து, பிப்ரவரி 24 2014
[61]Charitable trust served as terror front, say police, 24-Oct-2013, Deccan Herald
[62]Cops want ISI man held in Malaysia, Times of India, 29-May-2014
[63]Suspected ISI agent arrested in Chennai, The Hindu, 30-Apr-2014
[64]திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை: இரண்டு தீவிரவாதிகள் கைது, தினகரன், 19-07-2014

நன்றி- http://www.tamilhindu.com/2014/07/southindianjihad/

 அந்த மாணவி காவல்துறை குடும்பத்தை சேர்ந்தவர். பெரம்பலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் BA பயின்றுவந்தவர். அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அரும்பாவூர் காவல்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்தஊர் மங்களமேடு அருகிலுள்ள ஒரு கிராமம். அவரின் குடும்பத்தில் பலர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்.

கல்வி கற்க பெரம்பலூருக்கு சென்றவர் மங்களமேடு காவல்நிலைய கட்டுப்பாட்டில் வரும் வாலிகண்டபுரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த இளைஞர் காதலிப்பதாக கூறி, திருமண ஆசை காட்டி மதம் மாற்றியதோடு அல்லாமல், திருப்பூர் பகுதிக்கு கடத்திசென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரியான கிருஷ்ண மூர்த்தி மங்களமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் எந்த தகவலும் இல்லை. தனது பெண்ணை கடத்திச்சென்ற இஸ்லாமிய இளைஞர் தன்மைகளை என்ன செய்தாரோ என்று கலங்கும் அவர், தன்மகள்  மதம்மாறி திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை , எங்காவது விபச்சாரத்திற்கு விற்காமல் போதும் என்று கூறும் மனநிலைக்கு வந்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் S I  ஒருவரின் மகள் இஸ்லாமிய இளைஞரை மதம்மாறி மணந்துகொண்டு, தன் காவல்துறை தந்தையால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறி காவல்துறை உயரதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது நமக்கு நினைவிருக்கும்.

'லவ் ஜிகாத்' என்பது பல பரிமானங்களைக்கொண்டது , இது சாதாரண காதல் விஷயம் மட்டும் அல்ல , நம் இந்து பண்பாடு மற்றும்  கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். நம் குடும்ப அமைப்பை சிதைக்ககூடிய ஒரு விஷ விருட்சமாகும்.வளரும் இளம் பருவத்தினரிடையே பண்பாட்டு கல்வியை போதிப்பதோடு மட்டுமலாமல், இந்து மதத்தை பற்றிய சரியான புரிதல்களை
ஏற்படுத்துவது மட்டுமே இதனை தடுக்க வழி.


Monday, 21 July 2014


இந்து பெண்களை காதலிப்பதாக நடித்து , அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளுதல் , விபச்சாரத்தில் தள்ளுதல் , பலதார மனைவிகளில் ஒருவராக வைத்துகொள்ளல் போன்ற செயல்களை இஸ்லாமிய இளைஞர்களைக்கொண்டு செய்வதன் மூலம் இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் வேலைகள் கேரளத்தில் அதிகம் நடகிறது என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிகளில் ஒன்றான அரும்பாவூரில் இந்து இளைஞர்களுக்கு திருமண ஆசை காட்டி இஸ்லாமிய பெண்களை மணம் முடித்து வைப்பதன்மூலம் அவர்களை மதம் மாற்றும் வேலைகள் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சிலவருடங்களாக இந்த  லவ் ஜிகாத் வேலைகள் தீவிரமாக நடந்ததன் காரணமாக சில இளைஞர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். சமீபத்தில் கோனார் சமூகத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் மதம் மாற்றப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் - காசாவுக்கும் இடையில் நடந்துவரும் போரினால் இஸ்லாமியர் கொல்லப்படுவதாக கூறி அரும்பாவூரில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மதம் மாற்றப்பட்ட அந்த இளைஞர்தான் தலைவராக இருந்து நடத்தியதோடு மட்டுமலாமல் இந்திய தேசியத்திற்கும், இந்து சமயத்திற்கும் எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனைக்கண்டு  கண்டு இந்து சமுதாய மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரு மதமாற்றம் எப்படி ஒருவனை பயங்கர வாதியாக மாற்றும் என்பது  கண்முன்னால் நிறைவேறுவதை கண்டு அச்சமடைந்து உள்ளனர்.

இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை குறிவைத்து இந்த மதமாற்ற கும்பல் வேலைசெய்து வருகிறது. அரும்பாவூர் இந்து இளைஞர்களிடம் வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம் என்றுகூறியும் , பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஆசை காட்டியும் மதமாற்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை நம் சகோதர சகோதரியாக கூட இருக்கலாம் சொந்தங்களே... விழிப்புடன் இருங்கள்..
Sunday, 20 July 2014


வ.களத்தூர்அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2.,700 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியானது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை -வ.களத்தூர் சாலையில் உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(35). இவர் தொண்டப்பாடி& அனுக் கூர் சாலையிலுள்ள அவரது வயலில் கோழிப்பண்ணை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான கறிக்கோழிகளை யும், முட்டைக்கோழிகளை யும் வளர்த்து வந்தார்.இந்நிலையில் கோழி பண்ணை யை சுற்றி முட்புதர் மண்டி கிடந்ததால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் இவரது கோழி பண்ணைக்கு அருகில் உள்ள முட்புதர்களை அகற்றிட அவற்றிற்கு தீ வைத்தனர்.
இந்த தீயில் இருந்து எதிர்பாராத விதமாக வந்த தீப்பொறி கோழிப்பண்ணைக்குள் விழுந்தது. இதில் கோழிப்பண்ணையில் தீ பற்றி மள மள வென பண்ணை முழுவதும் பரவி எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர் , பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதற்குள் தீ வேகமாக பரவி கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியானது.
இதனி டையே தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மே லும் இந்த விபத்து குறித்து வ.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


-தினமணி.