Saturday 26 July 2014

பட உதவி- மார்டின்.
சின்னாறு பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்ட மான் பலியானது.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பெரியவட கரை, பாண்டகப்பாடி, வெள்ளுவாடி, காரியானூர், கை.களத்தூர், அய்யனார் பாளையம், அரசலூர், மேட்டுப்பாளையம், பேரையூர் ,வி.களத்தூர் மற்றும் குன்னம் தாலுகா, சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர், நக்கசேலம் ஆகியபகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான சமூக வனக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்தக்காடுகளில் அரியவ கை புள்ளிமான்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன.
மழையின்றி வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனத்திற்குள் தங்கியுள்ள மான்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகிலுள்ள வயல் பகுதிகளுக்கு வரு வதுண்டு. வயல்களும் வறண்டு விட்டதால் ஊருக்குள் மான்கள் புகுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நுழைகின்ற மான்களை தெருநாய்கள் துரத்துவதும், கடித்து கொல்வதும் தொடரும் சம்பவங்களாகி விட்டன. இந்நிலையில் நேற்று காலை வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு பகுதிக்கு வந்த ஒரு புள்ளிமானை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன.
இதனால் படுகாயமடைந்த மான் தாவிச்செல்லும்போது தவறி விழுந்து கால்கள் முறிந்ததால் எழுந்து ஓடமுடியாமல் தவித்தது. இதனைப் பார்த்த சிலர் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட வனஅலுவலர் ஏழுமலை, வனச்சரகர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி, வனவர் வீராசாமி, வனகாப்பாளர்கள் கருப்பையா, திருநாவுக்கரசு, திருஞானம்ஆகியோர் சின்னாறு பகுதிக்குச் சென்று படுத்து கிடந்த மான்குட்டியை மீட்டு, வாலிகண்டபுரம் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவர் அஞ்சலி மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க வண்டியில் எடுத்து வந்தனர். அது 2 வயது கொண்ட ஆண் மான் ஆகும். மிகவும் மிரண்டு போயிருந்த மான்குட்டி வழியிலேயே பரிதாபமாக இறந்தது. பிறகு அந்த மான்குட்டி பேரையூர் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்டது.


 -தினகரன்.

0 comments:

Post a Comment