Saturday 17 May 2014


தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது.
ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டாவாகும். புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர். மாற்று கட்சி என்று கூறி கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிய கட்சிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, பல வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர் v.kalathur seithi .

-தி இந்து.

தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன.
காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது.
இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.
இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம்.
இதில் வாக்காளர்களைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம் பெறுவதுதான்அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி (கா.ம.க.) கருதுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு காட்ட வேண்டும்". இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார் v.kalathur seithi .

-தி இந்து.
v.kalathur வ.களத்தூரில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின்  வெற்றியை கழக கிளை பொறுப்பாளர் காவ்யா ரவி தலைமையில் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்..

Friday 16 May 2014


பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 2,13,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,

ஆர்.பி. மருதராஜா (அதிமுக) - 4,62,693, 

 சீமானர் ச. பிரபு (தி.மு.க) - 2,49,645,

பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே) - 2,38,887, 

மா. ராஜசேகரன்- (காங்கிரஸ்) - 31,998,

வி.எம். செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) - 2,924,

கி. ராமர்யாதவ் (தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) -6,324,

பெ. தமிழ்செல்வன் (யுனைடெட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா) - 1,509,
ரா. அப்துல்ரகுமான் (சுயேச்சை) -1,018, கி. சிவபெருமாள் (சுயேச்சை) -986
சின்ன. ராஜேந்திரன் (சுயேச்சை) -877, த. சுப்பிரமணி (சுயேச்சை) -1,201, க அன்பில் தங்கமணி (சுயேச்சை) -1,636, என். பச்சமுத்து (சுயேச்சை) -2,762, ச. பிரபு (சுயேச்சை) -2,211, பி. மணி (சுயேச்சை) -1,302, பி. மருதராஜ் (சுயேச்சை) -3,940 த. ராஜசேகர் (சுயேச்சை) -1,490, மு. ரெங்கராஜ் (சுயேச்சை) -633, பெ. வடிவேலு (சுயேச்சை) -1,821, விஸ்வநாதன் (சுயேச்சை) -2,369, அ. வேலாயுதம் (சுயேச்சை) -2,995 வாக்குகள் பெற்றனர். நோட்டாவை - 11,605 பேர் பயன்படுத்தினர். 840 வாக்குகள் தள்ளுபடியானது.
இறுதியாக, தபால் வாக்குகள் உள்பட 10,31,666 வாக்குகள் பதிவானதில், அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 4,62,693 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம், திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபுவை விட 2,13,048 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபு 2,49,645 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், ஐஜேகே வேட்பாளரான பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து 2,38,887 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றார் v.kalathur  seithi .

-தினமணி.


பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 1,518 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தபால் வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து 1,596 வாக்குகள் பெற்றார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
பெரம்பலூர் பாராளு மன்ற தேர்தலில் பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பெரம்பலூர் பாராளு மன்றதொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 14 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தபால் வாக்குகள்
6 சட்டமன்ற தொகுதி களையும்சேர்த்துபெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் விபரம்:
மொத்தம் பதிவானது: 4,044
தள்ளுபடி : 775
ஏற்கப்பட்டது : 3,269
செல்லாதவை : 13
பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்து (பா.ஜ.க.)- 1,596
சீமானூர் பிரபு (தி.மு.க.)- 984
ஆர்.பி.மருதராஜா ( அ.தி.மு.க.)- 616
எம்.ராஜசேகரன் (காங்) - 27
நோட்டா - 25
வி.எம்.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)- 2
பெ.தமிழ்ச்செல்வன் (ஐக்கிய கம்யூ)-3
சின்னராஜேந்திரன் (சுயே)-1
பெ.வடிவேலு (சுயே)- 1
கி.சிவபெருமாள் (சுயே)-1

-தினத்தந்தி.

பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றிபெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மகிழ்ச்சியை தெரி வித்தும், வரவேற்றும் பெரம்பலூரில் பா.ஜ.க. வினர் வெடிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னர் v.kalathur  seithi .
பாரதீய ஜனதா வெற்றி
நடந்து முடிந்துள்ள பாராளு மன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள் ளது.
பாரதீய ஜனதா கட்சியின் அமோக வெற்றியை வரவேற்று மாவட்ட பா.ஜ.க. தலைவர் சி.சி.ஆர்.சந்திரசேகர் தலைமையில் பெரம்பலூரில் கடை வீதியில் வெடிவைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
ஊர்வலமாக
பிறகு அங்கிருந்து கட்சித் தொண்டர்கள் கொடிஏந்தி ஊர்வலமாக வந்து டவுன் பஸ்நிலையத்தில் வெடிவைத்து பொதுமக்கள், ஆட்டோ வாகனங்களில் பயணம் செய் வோருக்கு லட்டுகள் வழங்கினர்.
மேலும் பா.ஜ.க.வெற்றியை கொண்டாடும் வகையில் டவுன்பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர்வளைவு, சங்குப் பேட்டை, புறநகர் பஸ்நிலையம் உள்பட 5 இடங்களில் வெடி வைத்து ம்,நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த மாபெரும் வெற்றியை தந்துள்ள நாடு முழுவதும் உள்ள வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களுக்கு பா.ஜ.க. வினர் இனிப்புகள் வழங்கி னர்.
இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் குரு.ராஜேஷ், மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கர், பொருளாளர் சிவ சங்கர், பெரம்பலூர் ஒன்றியத்¢ தலைவர் தனபால், வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவர் பாலவெங்கடேஷ், வேப்பூர் ஒன்றியத்தலைவர் சீனிவாசன், மாவட்ட வரவேற்புக்குழுத்தலைவர் முத்துக்கமல், மாவட்ட துணை தலைவர்கள் வாசு தேவன், கண்ணன், நகர இளை ஞர் அணித்தலைவர் ராஜா ராம், மாவட்ட சிறுபான்மை யினர் மாவட்ட நிர்வாகிகள் சித்திரவேல், ஜார்ஜ்புஷ் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் ஜீவா சிவக்குமார், மாவட்ட பாஜ.க. பொதுச்செயலாளர் டி.பாஸ்கர், அமைப்புச் செயலா ளர் எம்.ராமசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஈஸ்வர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர் - தினத்தந்தி.

1984க்குப் பிறகு, முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னால், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 16ஆவது மக்களவை மேலும் பல புதிய சரித்திரங்களைப் படைக்க இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த தலைமுறையின் தலைமையில் அமைய இருக்கும் முதல் மத்திய அரசு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்கள் அனைவருமே அடிமை இந்தியாவில் பிரிவினைக்கு முன்பு பிறந்தவர்கள். 1950இல் பிறந்த நரேந்திர மோடி பிரதமராவதன் மூலம், தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதேபோல, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கப் போவதும்கூட ஒருவிதத்தில் சரித்திர நிகழ்வுதான். 1977இல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அது கட்சிகளின் கூட்டணியாகக் காட்சி அளித்ததே தவிர, ஒரு கட்சியாக இயங்கவில்லை. கேரள மாநிலத்தையும், ஒரு சில வடகிழக்கு மாநிலங்களையும் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது என்பதும் முதல் முறை நிகழ்வு.

இந்தியாவின் பல பகுதிகளில் மோடி அலை அடித்தது என்றால், கேரளம், தமிழகம், ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நரேந்திர மோடியின் தாக்கம் காணப்பட்டது என்பதுதான் உண்மை. 50 நிமிடமே பிரசாரம் செய்த வதோதராவில், இந்தியத் தேர்தல் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 5,70,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட வாராணசியில் மெளனப் புரட்சியாக வெற்றி. நரேந்திர மோடி மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இவை வெளிச்சம் போடுகின்றன.

நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, என்னென்ன விமர்சனங்கள், எத்தனை எத்தனை எதிர்ப்புகள். அவை அனைத்தையும் பொய்யாக்கி, இந்தியா முழுவதும் புயல்போலச் சுற்றி அலைந்து, பா.ஜ.கவுக்கு சாதகமான பேரலையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கும் நரேந்திர மோடியைப் பாராட்டியே தீரவேண்டும். சுதந்திர இந்திய சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு மாநில முதல்வரால் தேசியத் தலைவராக, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் மோடி.

2002 குஜராத் கலவரத்தை நரேந்திர மோடியுடன் இணைத்து, அவர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டார் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியவர்கள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்கள் வாக்காளர்கள். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்தியும்கூட, அவரை "மரண வியாபாரி' என்று வர்ணித்து, சிறுபான்மை இனத்தவர் மத்தியில் பீதியை எழுப்பிய போலி மதச்சார்பின்மைவாதிகளின் பிரசாரத்தை மக்கள் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்பது போன்ற தவறான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 17% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் நம்பிக்கையால் இஸ்லாம் மதத்தினரே தவிர, பிறப்பாலும் உணர்வாலும் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்பது அரசியல் ஆதாயம் தேட சிலர் எழுப்பும் அனாவசிய பீதியல்லாமல் வேறொன்றுமில்லை.

அரசமைப்புச் சட்டம்தான் எனது புனித நூல் என்று நரேந்திர மோடி நமக்களித்த சிறப்புப் பேட்டியில் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையிலும், அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான பிரதமராக தான் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது போலி மதச்சார்பின்மை வாதிகளின் பொய்ப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வலிமையான, ஊழலில்லாத இந்தியா உருவாகட்டும். இளைஞர்களின் இந்தியா வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடட்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக தான் இருப்பதை உணர்ந்து, "சப்கா சாத், சப்கா விகாஸ்!'(அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக!) என்கிற கோஷத்துடன் ஆட்சியில் அமர இருக்கும் நரேந்திர மோடிக்கு நமது வாழ்த்துகள்!

புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த, 1984ல், இரண்டு எம்.பி.,க் களுடன் இருந்த, பா.ஜ.,வுக்கு இப்போது, தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் மோடி. வரலாற்றுச் சாதனையாக, இப்போது, 283 இடங்களில், பா.ஜ., மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி வியூகம்
இந்த வெற்றியால், மத்தியில் நிலையான ஆட்சி அமைய உள்ளதால், பா.ஜ.,வினர் மட்டுமின்றி, தொழில் துறையினர் உட்பட அனைத்து துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மோடி தலைமையிலான, இந்த வெற்றிக்கு, ராஜஸ்தான் (25), குஜராத் (26), டில்லி (7), இமாச்சல பிரதேசம் (4), கோவா (2) ஆகிய மாநிலங்களில், அனைத்து தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றியதும் காரணம். அதுபோல், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் கூட் டணி பலத்தால், ஆந்திராவிலும், கர்நாடகாவில், கட்சியிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கிய எடியூரப்பாவை மீண்டும், பா.ஜ.,வுக்கு கொண்டு வந்த அரசியல் வியூகத்தாலும், பா.ஜ., வின் வெற்றி, இந்த முறை கணிசமாக இருந்தது.முக்கியமாக, வட கிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமில், யாருமே எதிர்பாராத வகையில், அங்குள்ள, 14 தொகுதிகளில், 7ல், பா.ஜ., வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது; ஆளும் காங்கிரசால், மூன்று இடங்களைத் தான் பிடிக்க முடிந்தது.அதேபோல், நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகளை கொண்ட, உ.பி.,யில், 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வின் இந்த சாதனைக்கு, மோடியின் வலதுகரமாக வர்ணிக்கப்படும், மாநில, பா.ஜ., பொறுப்பாளர் அமித் ஷாவின் தேர்தல் அணுகுமுறை மற்றும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.மேலும், இறுமாப்புடன் இருந்த பீகார், முதல்வர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாருக்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில், அந்த மாநிலத்தின் மொத்தமுள்ள, 40 இடங்களில், பெரும்பான்மையான இடங்களை (22) பா.ஜ., கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது.ஆளும் ஐக்கிய ஜனதா தளம், எதிர் அணியில் இருந்த காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளால், ஒன்றிரண்டு இடங்களில் தான் வெற்றி பெற முடிந்துள்ளது.மாநில ஆளும் கட்சிகளான, தமிழகத்தின், அ.தி.மு.க., மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற, அந்தக் கட்சிகளின் கனவு தகர்ந்துள்ளது.'மோடி பிரதமராகி விடக் கூடாது' என, திட்டமிட்டு அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்ட காங்கிரஸ், இரட்டை இலக்கங்களுடன் முடங்கி விட்டது. இன்று வரை ஆளும் கட்சியாக இருக்கும் அக்கட்சியால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கதி?
லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டுமானால், மொத்த இடங்களில், 10 சதவீத வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேற்று இரவு வரை வந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தால்,
காங்கிரஸ் கட்சிக்கு, 44 இடங்கள் தான் கிடைத்துள்ளன. 54 இடங்களில் வெற்றி பெற்றால் தான், 10 சதவீத இடங்கள் என்ற கணக்கு வரும். போகிற போக்கைப் பார்த்தால், காங்., 54யைத் தொடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியே இல்லாத லோக்சபா அமையும் என, இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற சூழ்நிலை, பிரதமராக இருந்த இந்திரா கொலை செய்யப்பட்ட பிறகு, 1984 பொதுத் தேர்தலில் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அனுதாப அலையால், ராஜீவ் தலைமையில் காங்கிரஸ், 415 இடங்களைக் கைப்பற்றியது. 10 சதவீத இடங்களை எந்த கட்சியும் பெறாததால், எந்தக் கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை.

திராவிட கட்சிகள் இன்றி 18 ஆண்டுக்கு பின் மத்தியில் ஆட்சி
கடந்த 1996ல், இருந்து, திராவிட கட்சிகளின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைந்ததில்லை. இதில் தி.மு.க.,விற்கே பெரும் பங்கு இருந்து உள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த நிலை, தற்போது, பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளதால், மாறிஉள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில், 37 எம்.பி.,க்களை பெற்ற போதிலும், அ.தி.மு.க.,வுக்கு மத்திய அரசில் இடம் பெறும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி யொரு தெளிவான தீர்ப்பை, தேசிய அளவில், மக்கள் எழுதி விட்டனர். எனவே, அ.தி.மு.க., பெற்றுள்ள வெற்றி, அக்கட்சியின் பலத்தை நிரூபிக்க மட்டுமே உதவியிருக்கிறது. கூடுதலாக, தேசிய அளவில், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் தேடித் தந்திருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பது எப்போது?
பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்து, பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங், இன்று மதியம், 12:45 மணியுடன் அந்த பெருமைமிகு பதவியில்இருந்து வெளியேறுகிறார்.மோடி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக, மன்மோகன் சிங், இன்று மதியம்,ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜினாமா கடிதம் அளிக்கிறார். அதன் பிறகு, சம்பிரதாய முறையில், செய்தியாளர்களை சந்தித்து, பேசுகிறார். அதன் பிறகு, இப்போதைய பிரதமர் இல்லமான, 7, ரேஸ்கோர்ஸ் வீட்டில் இருந்து, 3, மோதிலால் நேரு சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்கிறார்.மோடி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார் என்பது உட்பட, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், டில்லியில் பரபரப்பாக துவங்கியுள்ளன.

ஆறு மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை அள்ளிய பா.ஜ.,:குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், கோவா மற்றும் டில்லி என, ஆறு மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ என, நான்கு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி முதல்வராக உள்ள, குஜராத் - 26, பா.ஜ., ஆளும் ராஜஸ்தான் - 25 மற்றும் கோவா - 2, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சல பிரதேசம் - 4 மற்றும் உத்தரகண்ட் - 5, மாநிலங்களில், மொத்தமுள்ள, 69 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் உட்பட, சில தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
*ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள, 25 தொகுதி களிலும், பா.ஜ., வெற்றி பெற்றதால், அந்த மாநிலத்தில் போட்டியிட்ட, ஐந்து மத்திய அமைச்சர்களான, சச்சின் பைலட், ஜிதேந்திர சிங், சந்திரேஷ் குமாரி, நமோ நாராயணன் மீனா மற்று கிரிஜா வியாஸ் ஆகியோரும், தற்போதைய காங்கிரஸ், எம்.பி.,க்கள் ஆறு பேரும் தோல்வி தழுவினர்.
*ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில், சுயேச்சையாகப் போட்டியிட்ட, பா.ஜ., அதிருப்தி வேட்பாளர், ஜஸ்வந்த் சிங்கும் தோல்வியை தழுவினார்.
*தலைநகர் டில்லியில், ஏழு தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
 *சாந்தினி சவுக் தொகுதி யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், ஹர்ஷ்வர்த்தன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, ஆஷுதோஸ், மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
*இதுபோல், புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் மீனாட்சி லேகியும், மேற்கு டில்லியில், பர்வேஷ் வர்மாவும், வடகிழக்கு டில்லி யில், மனோஜ் திவாரியும், வடமேற்கு டில்லியில், உதித் ராயும் என, ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.*அதேபோல், யூனியன் பிரதேசங்களான, அந்தமான் நிகோபார், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
*அந்தமானில், பா.ஜ., வேட்பாளர் பிஷ்ணுபாடா ராய் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர், குல்தீப் ராய் சர்மாவை தோற்கடித்துள்ளார். சண்டிகரில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான,பவன்குமார் பன்சாலை விட, பா.ஜ., வேட்பாளர் கிரண் கெர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
*தாத்ரா நகர் ஹவேலியில், பா.ஜ., வேட்பாளர், படேல் நடுபாய் கோமன்பாய், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தெல்கர் மோகன்பாய் சஞ்சிபாயை தோற்கடித்து, சாதனை படைத்துள்ளார்.
*டாமன் டையூவில், காங்கிரஸ் வேட்பாளர், கேதன் தயாபாய் படேலை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., வேட்பாளர், படேல் லாலுபாய் பாபுபாய் வெற்றி பெற்றுள்ளார்.

காங்., கூட்டணி அரசு தோல்விக்கு காரணங்கள்
*முந்தைய வாஜ்பாய் அரசின் சாதனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை.
*அமைச்சர்கள் மீதும் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், 1 லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து, 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அடுக்கான ஊழல் புகார்கள்.
*வாஜ்பாய் அரசு அறிவித்த நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமில்லாதது என ராகுல் அறிவித்தது.
*இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு, மத்திய, காங்., கூட்டணி அரசு முழு அளவு துணை நின்றதால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி.
*தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியுள்ள தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
*சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள், நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், நம் ராணுவ வீரர்களை கொடூரமான முறையில் கொல்வதும் கடும் அதிருப்தியை, மத்திய அரசு மீது ஏற்படுத்தியது.
*அன்றாட வீட்டு உபயோக பொருட்களான சமையல் எண்ணெய், சர்க்கரை, பெட்ரோல், டீசல் போன்றவை, 350 சதவீதம் வரை விலையை உயர்த்தியது.
*பயங்கரவாதிகளை ஒடுக்க, பா.ஜ., கொண்டு வந்த, 'பொடா' சட்டத்தை, காங்., அரசு ரத்து செய்ததால், குண்டு வெடிப்பு சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியது.
*காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு இடதுகரை சானல்களில் இருந்து முறைப்படி தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தண்ணீரை பெற்றுதர மறுத்தது.இன்னும் பல.

நன்றி-தினமலர்.

Thursday 15 May 2014

சிறுவாச்சூர் மதுரகாளியம்மனின் தேர்த்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது...

பட உதவி- vasantha jeeva.


Wednesday 14 May 2014


பெரம்பலூர்தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்படும் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் முதுகலை மாலைநேர பட்டயப்படிப்பான பி.ஜி. எல்.ஏ. மற்றும் தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் இணைந்த டி.எல்.எல்.ஏ.எல் ஆகிய கல்வித்தகுதிகள் தேவைப்படுகிறது.
மேலும் மனிதவள அலுவலர் பணிஇடங்களுக்கும் இத்தகைய கல்வித்தகுதி தேவைப்படுகிறது. ஆகவே பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிளஸ்–2 முடித்தவர்களும், முதுகலை பாடப்பிரிவிற்கும், பட்டயப் படிப்புகளும் இளங்கலை பட்டம் முடித்தவர்களும் இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம், சென்னை–5 என்ற முகவரியில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று இம்மாதம் 30–ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி-தினத்தந்தி.

பெரம்பலூர் மாவட்டத்தில் மே 17, 18 ஆகிய தேதிகளில் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று ஆகியவை வருவாய்த் துறை மூலம் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
இச்சான்றுகளை பெரம்பலூர், குரும்பலூர், குன்னம், லப்பைக்குடிக்காடு, கீழப்புலியூர், வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், செட்டிகுளம், கூத்தூர் ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 2013-14-ம் கல்வியாண்டில் 80,325 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் சான்றுகளை உடனடியாக வழங்கும் வகையில், மே 17, 18 தேதிகளில் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
முகாம் நாள்களில் 10, 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதி, உயர்கல்வி பயிலச் செல்லவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி-தினமணி.

பெரம்பலூர் அருகே உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.
விழாவையொட்டி, கடந்த 29-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மே 6-ம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலும், தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் புதன்கிழமை (மே 14) இரவு வரை திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல், வியாழக்கிழமை (மே 15) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும். தொடர்ந்து, 16-ம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், 17-ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 19-ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

நன்றி-தினமணி.

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை கலெக்டர் தரேஸ் அஹமது தொடங்கிவைத்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க 26ம் தேதி கடைசி நாளாகும்.
 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழக அரசு உத்தரவின்படி  நடப்பாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 2014-2015ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஸ்அஹமது கலந்துகொண்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கும்பணியை தொடங்கி வைத்தார்.
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (இருபாலர்) சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், பி.எஸ்சி கம்ப்யூட்டர்சயின்ஸ்,
 பி.காம்ஆகியப் பாடப் பிரிவுகள் உள்ளன. தற்சமயம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு  கலைமற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
விண்ணப் படிவங்கள் வருகிற 26ம்தேதிவரை வழங்கப்படும்.
பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்திசெய்து 26ம் தேதிக்குள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இக்கல்லூரிக்கென செயல்படுத்தப்படும் தனிப்பிரிவில் சமர்பிக்க வேண்டும் என கல்லூரியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் பாரதிதாசன், தமிழரசி, உள்ளிட்ட அலுவலர்கள்  கலந்துகொண்டனர

நன்றி-தினகரன்.

Tuesday 13 May 2014


பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் இளநிலைப்பாட பிரிவான பி.லிட் (தமிழ்), பி.ஏ ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.பி.ஏ, பி.எஸ்.டபிள்யூ (சமூகப்பணி), பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயர் தொழில் நுட்பவியல், பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல், முதுநிலை பாட பிரிவான எஸ்.சி.ஏ முதுநிலை கணினிப் பயன்பாடு, எம்.எஸ்.டபிள்யூ (முதுநிலை சமூகப்பணி) ஆகிய பாடபிரிவுகள் கற்பிக்கப்படுகிறது. 
இதில், 2014-2015ம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புக்களுக்குரிய சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100ம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக, ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இலவச விண்ணப்பம் பெற சாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றார் கல்லூரி முதல்வர் (பொ) காசிநாதன்.   

நன்றி-தினமணி.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள எசனை காட்டுமாரியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

 அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னம், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதியுலா நடந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று அக்னிசட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று தேரோட்டம் நடைபெற்றது.


நன்றி - வசந்த ஜீவா 

Monday 12 May 2014

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்று அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடனான சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் மேலும் பேசியது:
மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே கல்வியின் எல்லை என்று நினைத்து விடக்கூடாது. நாம் என்ன படித்தாலும் அந்தப் படிப்பு நமது சமுதாயத்திற்கு பயன்படக்சுடிய வகையில் இருக்க வேண்டும்.
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிகரான மதிப்பெண்களை பெற முடியும் என்று தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 
இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்ற 30 மாணவ, மாணவிகளும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள்.
அவர்கள் குடும்பத்தில், இந்த மாணவர்களே முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்கு செல்ல உள்ளனர்.
 எனவே, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மாவட்டத் தலைநகரமான பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான அடிப்படை வசதி செய்து தரப்பட்டது.
அரசுப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள வசதியாக அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய முழுமையான தேர்வு நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தருவது மற்றுமன்றி, மன அழுத்தம் நீங்கி மகிழ்வுடன் கல்வியில் ஈடுபாடு செலுத்த கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம் மற்றும் திற்பரப்பு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் உயர, சமுதாயத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள் மூலம் சிறப்பு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மருத்துவ ரீதியாக மாணவர்களின் உடல்நிலையைப் பாதுகாக்க மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பாதையில் உள்ள முட்களையும், கற்களையும் வாழ்நிலை சிரமங்களையும் எதிர்கொண்டு சாதித்துள்ளனர்.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சூப்பர் 30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர்.

நன்றி- தினமணி, jeeva.vasanth

புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாத தேர்தல் பணிகள் மற்றும் ஓட்டுப்பதிவு இன்று மாலையுடன் முடிந்தது. இதனையடுத்து டைம்ஸ்நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐ.பி.என்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர் தங்களின் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டனர். இதில் மத்தியில் பா.ஜ., தலைமையில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது. இதன்படி 272 க்கும் மேல் 11 தொகுதிகள் கூடுதல் பெறும் என்றும் கூறியுள்ளது.சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. டைம்ஸ்நவ் தொலைக்காட்சி, பா.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்., கூட்டணிக்கு 148 தொகுதிகளும், என்.டி,வி., தொலைக்காட்சியில் தே.ஜ.,வுக்கு 283 தொகுதிகளும், காங்., கூட்டணிக்கு 99 சீட்களும் கிடைக்கும் என கூறியுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடும் உரிமை இன்று மாலை 6 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதனை தொடர்ந்து 5 மணி முதலே டைம்ஸ்நவ் மற்றும் ஐ.பி.என்.லைவ் தொலைக்காட்சிகள் 2014 ல் நடந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தது ? இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், யார் ஆட்சி அமைப்பார்கள்? மாநில வாரியாக பதிவான ஓட்டுக்கள் சதவீதம் ஆகியன குறித்து அலசி விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாநிலம் வாரியாக கட்சிகளுக்கு கிடைக்கும் வெற்றி வாய்ப்பு தொகுதிகள் எவை ? எவை என மக்களிடம் திரட்டிய கருத்துக்கணிப்பின் படி கண்டறியப்பட்டது. இதன் படி பா.ஜ.,வுக்கு பல்வேறு மாநிலங்களில் அமோக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலை விட பா.ஜ.,வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி 1 முதல் 3 தொகுதிககள் கிடைக்கும் என தெரிகிறது.

பஞ்சாப் அரியானாவில் காங்கிரஸ் ஓட்டுக்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு 51 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்து. அரியானாவில் பா.ஜ.,வுக்கு 38 சதவீதமும், காங்கிரசுக்கு 24 சதவீதமும் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. டில்லியில் பா.ஜ.,வுக்கு 5 முதல் 7 தொகுதிகளும், ஆம்ஆத்மிக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் . டைம்ஸ் நவ் டி.வி.,யில் பீகாரில் பா.ஜ.,வுக்கு 15 தொகுதிகள் கிடைக்கும்.

சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பில்; மணிப்பூர் பஞ்சாப், அரியானா, இமாச்சல்பிரதேசம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., செல்வாக்கு உயர்ந்துள்ளது.டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம்ஆத்மி;2 கிடைக்கும் என கூறியுள்ளது.

என்டபிள்யுஎஸ்-சி வோட்டர்: என்டபிள்யுஎஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க., 27 தொகுதிகளிலும், தி.மு.க., 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் - மேற்குவங்கம்: சி.என்.என். ஐ.பி.என்.லைவ் தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 சீட்களில் 25 முதல் 31 தொகுதிகள் வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகள் கட்சிக்கு 7 முதல் 11 சீட்டுகளும் , கிடைக்கும் . அ.தி.மு.க., 22 முதல் 28, தொகுதிகளும், தி.மு.க,7 முதல் 7 முதல் -11 தொகுதிகளும் , காங்கிரசுக்கு- 0 கிடைக்கும் என கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே: அ,தி.மு.க., -24 , தி.மு.க,. 14 கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு -5 முதல் 6 காங்.,-1

டைம்ஸ் நவ் டி.வி.,: டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம்ஆத்மி;2 கிடைக்கும். அ.தி.மு.க., 31, தி.மு.க.,- 7 காங்.,1, பா.ஜ.,0


உத்திரபிரதேசம்: ஐ.பி.என்.,லைவ் கருத்துக்கணிப்பில், உ. பி.,மாநிலத்தில் பா.ஜ., கூட்டணிக்கு 45 முதல் 53 தொகுதிகளும், சமாஜ்வாடி கட்சிக்கு 13 முதல் 17 தொகுதிகளும், பகுஜன்சமாஜ்கட்சிக்கு 10 முதல் 14 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு, 3 முதல் 5 தொகுதிகளும் கிடைக்கும்.

டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில், உ பி. ,மாநிலத்தில் பா.ஜ., வுக்கு 52 தொகுதிகளும் , காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் கிடைக்கும். மகாராஷ்ட்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகளும் , டைம்ஸ்நவ் தொலைக்காட்சி நாடு முழுவதும் பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 148 தொகுதிகளும் ஏனைய கட்சிக்கு 146 தொகுதிகளும் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா, சீமந்திரா பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக் கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்த தெலுங்கானா, பகுதியில் ,தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி ( சந்திரசேகர ராவ் ) கட்சிக்கு 8 முதல் 12 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 2 முதல் 4 தொகுதிகளும் கிடைக்கும்.

சீமந்திரா பகுதியில், பா.ஜ.,வுக்கு 11 முதல் 15 தொகுதிகளும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு 11 முதல 15 தொகுதிகளும் கிடைக்கும்.

ஆஜ்தத் தொலைக்காட்சி கணிப்பில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 261 முதல் 283 தொகுதிகளும், காங்கிரசுக்கு 110 முதல் 120 தொகுதிகளும் ஏனைய கட்சிகளுக்கு 150 முதல் 162 தொகுதிகளும் கிடைக்கும்.

சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பா.ஜ, தனிப்பட்ட முறையில், 230 முதல் 242 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 102 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 72 முதல் 82 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

மிஷன் 272 இலக்கு என மோடி நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக தீவிர பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்டங்களில் மக்கள் வெள்ளமென கூடுவதை காண முடிந்தது. இந்த பிரசாரம் அவருக்கு பெரும் ஆதரவாக அமைந்தது.

நன்றி-தினமலர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும், காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும்.
அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்
கியதாகும்.
பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி. 3-ஆவது நூற்றாண்டில் இந்த விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி பிற நாட்டவர்களை ஈர்க்கும் பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டாகும்.

 15-ஆம் நூற்றாண்டில் எருது சண்டை எனப்படும் போட்டி ஸ்பெயின் நாட்டில் உருவாகி மெக்சிகோ, பெரு, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளுக்குப் பரவியது. அந்தப் போட்டியில் மாடோ, மனிதனோ மரணம் அடைவது இயல்பானாது எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உருவான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஸ்பெயின் நாட்டில் உருவான எருதுச் சண்டை போன்றது அல்ல. இங்கு வீர விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
கலாசாரம் மற்றும் சமூக உரிமைகளைத் தொடர்ந்து பராமரிப்பதன் அவசியத்தை 1948-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனச் சட்டம் வலியுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிப்பதால் சுமார் 60,000 காளைகள் அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைக் காப்பாற்றவும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
அதற்காக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

நன்றி-தினமணி.

நாகை மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து ஹிந்துக் கோயில்களின் சொத்துகளை மீட்காவிட்டால், தொடர்புடைய இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
இதுகுறித்து நாகையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
நாகை மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயில்கள் ஏராளம் உள்ளன. இந்தக் கோயில் சொத்துகள் தனியார் மற்றும் பிற மதத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்தச் சொத்துகளை மீட்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும், அறநிலையத் துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருப்பது வேதனையளிக்கிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளை தனியார் மற்றும் பிற மதத்தவர்களிடமிருந்து மீட்க அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தனியார்
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி கட்டப்பட்டு, கோயில் சொத்து என பிரகடனப்படுத்தப்படும்.
தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, தீவிரவாதிகளை ஒடுக்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இலவச கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், ஏராளமான தனியார் பள்ளிகள் இதை அமல்படுத்த மறுக்கின்றன. எனவே, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், 25 சதவீத ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவித்துள்ளது ஏற்புடையதல்ல. ஜல்லிக்கட்டை, உரிய நெறிமுறைகளுடன் நடத்த அனுமதியளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் உருவான பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தக் கூட்டணி நீடிக்க வேண்டியது அவசியம் என்றார் அர்ஜுன் சம்பத்.

நன்றி-தினமணி.

Sunday 11 May 2014

v.kalathur வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி..

 v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு ஆறு மற்றும் ஏழாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதற்க்கான அறிவிப்பை தலையாசிரியர் பள்ளியின் நோடீஸ் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆங்கில வழிகல்வி சேர்க்கைக்கான அறிவிப்பு.

 வ.களத்தூர் பகுதி பெற்றோர்கள் தம் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க விரும்பினால், தமிழ் வழியிலும், ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியிலும் படிக்க வைக்கலாம. முந்திக்கொள்பவர்களுக்கே  முன்னுரிமை... வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மக்களே.
வண்ணாரம்பூண்டியில் மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் 3ஆம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இனிதே நடைபெற்றது ..

நன்றி- suresh.ayyasamy .