Sunday 19 January 2014


தேச நலனில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்(RSS) - இணைவோம் நம் குடும்பத்தினருடன் !!! ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் என்று ஊழையிடும் கூட்டம் ஒரு பக்கம். சங்கத்தின் செயல்பாடு அறிய ஒரு நாள் ஷாகா வந்து பாருங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தேசத்துக்காய் ஒரு மணி நேரம்- 

இது சங்கத்தின் வேண்டுகோள். அங்கே போனால் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக மூளை சலவை செய்வார்களோ, கிறிஸ்துவ இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பிட்ட ஜாதிக்கு எதிராக கொம்பு சீவி விடுவார்களோ என்றெல்லாம் கற்பனை செய்து சென்றேன்........ 

அங்கே போனால், வரிசையில் நிற்க சொன்னார்கள், கம்பீரம் கலந்த கர்ஜனையுடன் கட்டளைகள் பறந்தன, கொள்கைகள் பேசப்படவில்லை, சரீர பயிற்சிகள் ஆரம்பமாயின, சூரிய நமஸ்கார் செய்ய சொன்னார்கள், உடலெல்லாம் சிலிர்த்தது, பிரகார்மார் அடிக்க சொன்னார்கள், புஜங்கள் வலுவடைந்தது போல் உணர்ந்தேன். 

 தக்ஷ ஆரம சொன்னார்கள், ராணுவத்தின் மிடுக்கை கண்டேன், விளையாட்டு விளையாடினோம், குளம் கரை, டாக்டர்ஜி, காந்திஜி, நேதாஜி, உத்தம உத்தம உத்தம பாய், சுந்தர சுந்தர சுந்தர பாய் விளையாட்டு விளையாட சொன்னார்கள். விழிப்புணர்வு, சமயோஜித புத்தி, ஞாபக சக்தி தூண்டப்படுவதை கண்டேன். நியூத்த கற்றேன், பயம் கொள்ளும் சுபாவம் மாறக்கண்டேன், சிலம்பம் சுற்ற தன்னம்பிக்கை மிளிரக்கண்டேன், 

யோகாசனம் செய்ய சொன்னார்கள் உடலின் உள் உறுப்புகள் உறுதியாவதை உணர்ந்தேன். பதவின்யாஸ், வியாயாம்யோக் கற்றேன் உடல் உறுப்புக்களை எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்த கற்றுக்கொண்டேன். வட்டத்தில் உட்கார்ந்து சுபாஷிதம், அம்ருத வசனம், தேசநலம், தேச ஒற்றுமை, தேசப் போராளிகள் பெயர்களை ஞாபகமூட்டும் பாடல்கள் பாடினார்கள். தேசத்தின் வளத்தை சொல்லி தேசம் வெல்க! என்று பிரார்த்தனா பாடினார்கள். ஆனால் எங்கேயும் யுத்தம் செய்ய வேண்டும் என்றோ, எவரையும் மிதிக்க வேண்டும் என்றோ, எவரையும் தூஷிக்க வேண்டும் என்றோ சொல்லும் வார்த்தைகளை கேட்கவில்லை. எவர் மீதும் வெடிகுண்டு வீச சொல்லவில்லை. எவரையும் வெட்டி சாய்க்க வில்லை. இன்னொரு விஷயம் வந்தவர்கள் என்ன ஜாதி என்று எவரும் கேட்கவும் இல்லை, அவர்களுடன் கலந்ததாலோ என்னவோ அது பற்றி அறிய நானும் முஸ்தீப்பு காட்டவில்லை. ஆனால் ஓன்று, எனது உள்ளம், தேகம், சிந்தை தெளிவடைய, உறுதியடையக் கண்டேன், 

முக்கியமாக ஆளுமைத்திறன் என்னிலிருந்து வெளிப்படக்கண்டேன். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய விரும்புகிறீர்களா? வாருங்கள், ஒரே ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம் தோழமையாய் தோளுடன் தோள் சேர்ந்து நமது ஒற்றுமை காண்போம்! நமது பலத்தை காண்போம்! நமது சக்தி என்ன என்று ஒருதரம் நம்மை நாமே உரசிப் பார்ப்போம். 

நன்றி-நமோ உமாசங்கர் .

0 comments:

Post a Comment