Wednesday 5 November 2014



''எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்!''

ஈரானின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் ரெய்ஹானே

''அந்த நேரத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்தேன். என்னைக் கற்பழிக்கத் துடித்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க, அதன் முதுகில் கத்தியால் குத்தினேன். பிறகு, அங்கிருந்து தப்பினேன். என்னைக் காத்துக்கொள்ளவே அந்தக் காரியத்தைச் செய்தேன்'' என்றார் ரெய்ஹானே. ஆனால் நீதிபதிகளோ, அவரது வாதத்தை ஏற்கத் தயாராக இல்லை. ''இது திட்டமிட்ட கொலை. சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ரெய்ஹானே கத்தியை வாங்கியுள்ளார்'' என்று கூறி, அந்தப் பெண்மணிக்குத் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 25-ம் தேதி ரெய்ஹானே தூக்கிலிடப்பட்டார். சர்வதேச அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி, அந்தச் செயலை ஈரான் நாட்டின் அரசு நிகழ்த்தியுள்ளது!

ஈரானைச் சேர்ந்த ரெய்ஹானே ஜபாரி ஒரு இன்டீரியர் டிசைனர். அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா அப்தோலாலி சர்பந்தி என்பவர், தனது அலுவலகத்தைச் சீரமைத்துத் தரும்படி ரெய்ஹானேவிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். மருத்துவரின் அலுவலகத்துக்கு ரெய்ஹானே சென்றார். ரெய்ஹானேவிடம் மதுக் கோப்பையைக் கொடுத்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார் அந்த மருத்துவர். அந்த இளம்பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்பது அந்த மருத்துவரின் நோக்கமாக இருந்தது. நிலைமை விபரீதமாகி இருக்கிறது. அந்த இளம்பெண் கத்தி எடுத்து மோர்டெஸாவின் முதுகில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மோர்டெஸா இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ரெய்ஹானே இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

2009-ல் ரெய்ஹானேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ரெய்ஹானேவின் வழக்கறிஞர் முகமது அலி ஜெடாரி, ''வழக்கு விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் ஆறு மாதங்களில், வெறும் இரண்டு முறைதான் என்னை ரெய்ஹானேவைப் பார்க்க அனுமதித்திருந்தனர். நேர்மையான வழியில் இந்த விசாரணை நடைபெறவில்லை. ரெய்ஹானேவின் நியாயமான கோரிக்கைகள் ஒன்றைக்கூட நீதிமன்றம் நிறைவேற்றவில்லை'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தீர்ப்புக்கு உலகம் முழுதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஈரானுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனாலும், ரெய்ஹானேவைத் தூக்கிலிட்டுவிட்டது ஈரான் அரசு.

ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன், தன் மகளைச் சந்தித்துவிட்டு திரும்பிய மறுநாள் காலையில், ஈரான் அரசு அந்த தண்டனையை நிறைவேற்றியது. ''என் மகளைப் பார்க்க சிறைக்குச் சென்றபோது, தனது முடிவை அவள் அறிந்திருந்தாள். 'எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்’ என்றாள். சிறை அதிகாரிகள் அவளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். என் மகளைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைக்கூட எனக்கு முன்னரே தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், என் மகளைக் கொன்றுவிட்டார்கள். என் மகளின் இறந்த உடலைக்கூட தொட மறுத்ததுடன், இறுதிக்காரியங்களையும் செய்யவிடவில்லை. மனித உரிமை அத்துமீறல் மற்றும் ஈரானில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராட, என் மகள் குற்றமற்றவர் என்று உலகுக்கு நான் தெரியப்படுத்த ரெய்ஹானேவின் ஆதரவாளர்களே எனக்குக் கை கொடுங்கள். ஈரானில் உள்ள ஊடகங்கள் என் மகளை குற்றவாளியாக சித்திரிக்கின்றன. இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வில் அதீத நம்பிக்கை கொண்டவள் ரெய்ஹானே. அங்குதான் நிரபராதி என்பதை நிரூபிப்பாள். இந்தப் பிறவியில் தன்னைத் துன்புறுத்திய அனைவரையும் மன்னித்து விட்டாள். அவர்களைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'' என்று தன் மகளின் இழப்பு குறித்து பதிவு செய்துள்ளார் ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன்.
ஐக்கிய நாடுகள் சபை, ''மனித உரிமைகளை நிலைநாட்டுவேன் என்று தேர்தல் காலத்தில் ஹசான் ருஹானி கொடுத்த வாக்குறுதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டார். கடந்த ஓராண்டுகளில் மட்டுமே 852 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கற்பழிப்பு நடந்து விட்டால், இஸ்லாமியர்கள், உடனே, சவுதியை பார், ஈரானைப் பார், இஸ்லாமிய நாட்டை பார், உடனே தூக்கு தண்டனை கொடுத்து தண்டிப்பார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு கருத்து தெரிவிப்பார்கள். ஆனால், இங்க ரெய்ஹானே செருப்படி கொடுத்து இஸ்லாமியர்களுக்கு திருந்த அறிவுரை கூறியுள்ளார்,

அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா மதுவை கொடுத்தது இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானது . அவருக்கு என்ன தண்டனை?
பணம் படைத்தவுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை
ஏழைகளுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை..?

ஈரான் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மனித உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று ஈரானை எச்சரித்துள்ளது.
ரெய்ஹானே ஜபாரியின் மரணம், மாற்றத்துக்கான விதையாக அமையட்டும்!
 
 

0 comments:

Post a Comment