Tuesday 14 June 2016



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரில் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் பகுதிக்கு மேற்காக வசிக்கும் இஸ்லாமிய மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரை,
எங்களது குடியிருப்பு பகுதி அருகே உள்ள கல்லாற்றில் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியில் கலப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கழிவுநீர் கல்லாற்றில் கலந்தால் குழந்தை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும். கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதை தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அரசு அலுவலர்களின் அலட்சியத்தால், தற்போது கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த முயற்சியை தடுத்து, எங்களது குடிநீர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
- தினகரன்.

0 comments:

Post a Comment