Monday 30 June 2014



களவு போகும் தண்ணிர்
( முருகன்குடி - பெரம்பலூர் மாவட்டம்)

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சி மிகுந்த
மாவட்டம் என அனைவருக்கும் தெரிந்ததே. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு குடி நீர் திட்டம் எனும் பெயரில் மக்களை
ிசை திருப்புகின்றனர். இது வறட்சிக்கு நிரந்தர தீர்வாகாது. கூட்டு குடி நீர் திட்டம் மூலம்
பல மயில்களுக்கு அப்பால் பல கோடி செலவில் சிலருக்கு மட்டுமே தேவையான தண்ணீரை வாரி வழங்கி
மாவட்ட நிர்வாகம், எப்பொழுதும்  மக்கள் தேவயை பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் பெரம்பலூரிலிருந்து சில கிலோ மீட்டரில் உள்ள முருகன் குடி எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னால்
குவாரிக்கு விடபட்ட மலை, அளவுக்கு அதிகமாக தோண்டியாதாக கூறப்படுகிறது. அப்படி தோண்டியதால்
வற்றாத ஜீவன் போல ஊற்று எடுத்து கடல் போல காட்சி அளிக்கிறது.
சில ஆண்டுகளாக மக்களுக்காக குறைந்த அளவிலும், பணம் கொழிக்கும் கல்வி நிறுவனுங்களுக்கு மறை முகமாக குடிநீரை
வாரி வழங்கியுள்ளது. ஆனால் தற்பொழுது மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை என முழுவதும் தனியார் கல்வி
நிறுவனங்களுக்கே தாரை வார்த்துள்ளது. அந்த பகுதி மக்கள் கூட அந்த தண்ணீரை பருக முடியாத நிலை உருவாகியுள்ளது.
என் நண்பர்களுடன் அங்கு சென்ற நான் அந்த தண்ணீரை பருகிய போது சுத்திகரிகபட்ட தண்ணீரை விட
சுவையாக உள்ளது. தினமும் பல லட்சம் தண்ணீர் எடுத்தாலும் இரவுக்குள் ஊறி விடும் என அங்கு உள்ள காவலாளி
மகிழ்ச்சியுடன் கூறினார். தண்ணீர் இல்லாத காவிரியில் தண்ணீர் எடுக்க பல கோடி செலவு செய்யும் அரசும் மாவட்ட
நிர்வாகமும், சில லட்சம் செலவில் வற்றாத இந்த அமிர்தத்தை தனியாருக்கு ஏன் தாரை வார்த்தது.
சாதாரன மக்களின் சிறு பிரச்சனைகளில் கூட கடும் நடவடுக்கை எடுக்கும் அரசு துறைகள் நடவடிக்கை மகிழ்ச்சியே.
ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசும், அரசு அரசு துறை அதிகாரிகளும் என்ன செய்ய போகிறது.
இந்த செய்தியை ஊடகங்களும், நாளிதழ்களும் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் என
கேட்டு கொள்ளபடுகிறது. சமூக ஆர்வலர்கள் இதை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
 
 

0 comments:

Post a Comment