வ.களத்தூரில் நேற்று மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வ.களத்தூர் RSS தொண்டர்களின் ஏற்பாட்டில் பெரம்பலூர் சேவா பாரதி மற்றும் வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்களிப்போடு நடைபெற்ற இத்திருவிளக்கு பூஜையில் திரளான அளவில் பெண்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வ.களத்தூரில் இதற்க்கு முன் திருவிளக்கு பூஜை நடைபெற்று இருந்தாலும் ஆகம விதிகளின்படி நடத்த, பெரம்பலூர் மாவட்ட சேவா பாரதி அமைப்பின் செயலாளர்திரு.சிவபாண்டியன்அவர்களின் ஏற்பாட்டில் பெரம்பலூரிலிருந்து வருகைபுரிந்த சேவாபாரதி குழுவினரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. வ.களத்தூர் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று அவகளின் பாதுகாப்போடு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பித்தக்கது.
| VHP செயலாளர் பாஸ்கர் ஜி யுடன் வ.களத்தூர் இளைஞர்கள் |
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை 6 மணி அளவில் வ.களத்தூர் மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது . அடுத்த கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நாள் என்பதால் மார்கழி மாத போவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.
RSS Feed
Twitter
Friday, November 21, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment