Monday 22 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் சென்ற ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதியில் டிராக்டரை ஓடிவந்த இந்து இலைஞர்களை வழி மறித்து "இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் தெருவில் எப்படி நீங்கள் வரலாம் " எனக்கூறி  தாக்க முயன்றவர்கள் மீது வ.களத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து 8 நபர்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் (pfi) என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் ஊர் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அம்மைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த அழைப்பு பதிவில் உள்ள பின்னூட்டங்களை கவனித்தால் வ.களத்தூரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது இஸ்லாமிய இயக்கங்கள் இருந்து வருவது விளங்கும்.

அதில் எங்கள் ஊர் பிரச்சினையை நங்கள் கவனித்துக்கொள்கிறோம் நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் 2013 ல் வ.களத்தூரில் நடைபெற்ற பிரச்சினையின் போது நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கில் சிக்கவும், அவர்கள் இன்றளவும் பாஸ்போர்ட் பெற முடியாத காரணத்தால் பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடுவதாகவும் இனி எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் கூறுவதாக இருக்கிறது.

வ.களத்தூரில் இந்து -இஸ்லாமியர்களுக்கு அவ்வப்போது மோதல் இருந்தாலும் சென்ற தலைமுறை வரை இணைக்கமாகவே இருந்து வந்துள்ளனர். தேரோடும் ராஜவீதியில் சுவாமி ஊர்வலம் , செல்லியம்மன் தேர் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்து சுவாமிக்கு மரியாதை சென்ற நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு.

இதற்கு முதல் தடையாக பழனிபாபாவின் வ.களத்தூர் வருகை 1993-4 ல் இருந்தது. அதன் பிறகு வ.களத்தூரில் வேரூண்றிய இஸ்லாமிய இயக்கங்களின் தூண்டுதல் மற்றும் தங்களுக்குள் யார் அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதை காட்டிட மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் இந்து ஊர்வலம் வரக்கூடாது என தடுக்க முயன்றனர்.

அரசின் சார்பாக நடத்தப்படும் ஒவ்வொரு அமைதி பேச்சு வார்த்தையின் போதும் எங்கள் தெரு வழியாக (அரசுக்கு சொந்தமான போது வழி ராஜவீதி ) சுவாமி ஊர்வலமோ, கல்யாண மற்றும் பிற சுப நிகழ்வு ஊர்வலம் வரக்கூடாது என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 2013ல் ராஜவீதி வழியாக நடைபெற்ற ஊர்வலத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கினர். இதில் கல்யாண ஊரவலத்தில் வந்த பலர் காயம் அடைந்தனர். காவல் துறை தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த  100க்கும் மேற்பட்ட  இளைஞர் மீது வழக்கு பதிசெய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

இந்த தாக்குதலுக்கும் இன்று வ.களத்தூரில் நடைபெற்று வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள்தான் காரணம் என காவல்துறை உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும்.

வ.களத்தூரில் இந்துக்கள் சார்பாக நடத்தப்படும் சுவாமி ஊர்வலத்தை தடுக்க முயலும் செயலை கண்ட வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பொருளாதார புறக்கணிப்பில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் நெருக்கடியில் உள்ள மாற்று மத வியாபாரிகள் அரசினை அணுகி சுமுக தீர்வு பேச்சு வார்த்தை நடத்தி எட்டிக்கொள்ளலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் ஊரில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என அரசிடம் தனியாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வ.களத்தூரில் அமைதி நிலவினால் தங்களுக்கு ஆதாயம் இல்லை எனக்கருதும் சில இஸ்லாமிய அடப்படைவாத இயக்கங்கள் அந்த சமூகத்தை சேர்ந்த இலைஞர்களை மூளை சலவை செய்து பிரச்சினையை உருவாக்கி வருவதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

வ.களத்தூரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படை வாத இஸ்லாமிய இயக்கங்களை நுழைய விடாமல் தடுப்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதே வ.களத்தூர் ஒட்டுமொத்த மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

V.kalathur vkalathur kalathur

0 comments:

Post a Comment