Sunday 1 June 2014


       பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைமனுவில் பாண்டகாபாடி வரை தடுப்பணை கட்ட கொரிகைவிடுக்கப்பட்டுள்ளது. நம் வ.களத்தூர் கல்லாற்று பகுதிக்கு, நம் ஊரைச்சேர்ந்த மக்கள் மனு கொடுத்தால் மட்டுமே கல்லாற்றில் மீதம் மிஞ்சியிருக்கும் மணலை காக்க முடியும் என்பதோடு, கல்லாற்றை நம்பி போர்வெல் அமைத்திருக்கும் விவசாயிகள்  மற்றும் கல்லாறை நம்பி குடிநீர் போர்வெல் அமைத்திருக்கும் வ.களத்தூர் பஞ்சாயத்து நிர்வாகமும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால்  மட்டுமே இனி வரும் காலங்களில் நம் கிராமத்தின் குடிநீர் தேவையைநிறைவேற்றமுடியும் v.kalathur seithi .

கோரிக்கை மனுவின் விபரம்...

இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிடம் அளித்த மனு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டமாந்துறை, வெங்கலம், அன்னமங்கலம், எசனை, வெங்கனூர், பில்லாங்குளம் ஆகிய ஏரிகளில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் அருகிலுள்ள குளம், குட்டைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மலையாளப்பட்டி சின்னமுட்டுலு பகுதியில், பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்றின் குறுக்கே வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய கிராமங்களில் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், கிணறுகளில் நீரூற்று பெருகி விவசாயத்துக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment