Friday 6 June 2014


பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற பொதுமக்கள் தனியார் நிறுவனங்களை நாட வேண்டாம் என வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து இப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பாஸ்போர்ட் தொர்பான அனைத்து சேவைகளும், www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தனியார் இணையதளங்கள் மற்றும் பயண முகவர்கள், தாங்கள் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்க அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறி வருவதாக தெரிகிறது.
 வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனியார் யாருக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் தொடர்பான பணிகளுக்கு தனியாரிடம் சென்று அதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட விóண்ணப்பதாரரே பொறுப்பாவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது v.kalathur seithi .

0 comments:

Post a Comment