Saturday 21 June 2014


  • 18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்?
  • அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன? உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா? அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா?
  • கொலை செய்யப்பட்ட பாடி சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்?
  • பாடி சுரேஷ் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்த (மெயின் ரோடுகளில் மசூதி இருப்பதை காரணம் காட்டி) வழியை திடீர் திடீரென்று மாற்றி மாற்றி, வன்முறையை தூண்டியது அதிகாரிகளா? பொதுமக்களா?
  • மசூதி இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி வண்டியில் சென்ற சவ ஊர்வலத்தைக்கூட விடமாட்டேன் என்று மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது ஜனநாயக செயலா? வருங்காலத்தில் இந்துக்களும் இதுபோல் எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறை என்ன செய்யும்?
  • பல இடங்களில் இந்து முன்னணி தொண்டர்கள் மீது காவல்துறை அத்துமீறி தடியடி நடத்தியதும், கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்தியதும் யாரை திருப்திப்படுத்த?
  • கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தராதது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமில்லையா? காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தகவல் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்பது காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தானே?!
  • தடியடியின் போது காவல்துறையினர் உடன் வந்த இயக்க வண்டிகளை அடித்து நொறுக்கியதும், எந்தவித அசம்பாவிதத்தில் ஈடுபடாத மக்கள் மீது பலம் கொண்ட மட்டும் பலப்பிரயோகம் செய்தது. (இது குறித்த விடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தகுந்த நபர்களிடம் அவை சமர்ப்பிக்கப்படும்.)
  • இந்து முன்னணியின் பல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்களை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டும், அதனை அலட்சியம் செய்து, அவை போலி மிரட்டல்கள் என்ற சொன்ன அதிகாரிகள், பாடி சுரேஷ் கொலைக்கு பொறுப்பு தானே!
  • இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை எடுத்து விட்டோம் என்று பத்திரிகைகளில் பகிரங்கமா அறிவிப்பு கொடுத்த அதிகாரி செயல், கொலைகாரர்களுக்கு உடந்தை இல்லையா?
  • பாடி சுரேஷ் கொலையை பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்வதாக பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பது, மக்களை திசைத்திருப்பவோ என சந்தேகம் கொள்கிறோம். முன்னர் பக்கம் பக்கமாக பொய் அறிக்களை வெளியிட்ட உயர் காவல் அதிகாரியின் அதே கோணத்தில் காவல்துறை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
  • 21 ஆண்டுகளாக தேடப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதி ஹைதர் அலி, கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வந்த சில நாட்களில் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா? அல்லது பேரம் படிந்துவிட்டதா?
  • சிறுபான்மையினர் ஓட்டுக்காக, இந்துக்களைக் கேவலப்படுத்திய, அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள் என்னவானார்கள் என்பது சென்ற தேர்தலில் பார்த்தோம், இனி வருகின்ற தேர்தலிலும் பார்ப்போம்..
  • பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சட்டத்தின் படி செயலாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
  • சாலை விபத்தில் பலியானவர்களுக்கும், அந்நிய நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கும் துடிக்கும் அரசியல்வாதிகள், தமிழக முதல்வர் முதலானோர் இதயங்கள் - சமுதாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பாடி சுரேஷ் படுகொலைக்கு துடிக்கவில்லையே ஏன்? அவர் செய்த குற்றம் தான் என்ன?
  • மனிதாபிமானம், ஜனநாயக சிந்தனை, மனசாட்சி உள்ள அரசியல், சமுதாய தலைவர்கள் இந்தப் படுகொலையை கண்டிக்க முன் வரவேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
  • பாடி சுரேஷ் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் 10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு பணி அளிக்க மனமுவந்து முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இதற்கு முன் நடந்த இந்து முன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் படுகொலைகளில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளும், இந்தக் கொலையை செய்த கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் தமிழக அரசு தனி கவனம் கொடுத்து உடன் புலானாய்வு செய்து கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை நுண்ணறிவு பிரிவு முடுக்கிவிடப்பட்டு, செயலாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

0 comments:

Post a Comment