Thursday 21 August 2014


இந்து என்பது மதம் அல்ல, அது கலாச்சார அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘இந்தியா என்பது இந்துக்கள் நாடு, இந்துத்வா என்பது அதன் அடையாளம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இன்று இந்து என்பது மதம் என்ற கருத்தல்ல, இது கலாச்சாரத்தின் அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்து என்ற வார்த்தை மதத்தை குறிக்கிறது என்றால் தி இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகைகள், இந்திய அக்பார் இந்துஸ்தான், இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் ஷிப்யார்ட் என ஏன் பெயர் வைக்கப்பட்டது?.

இதேபோல் என்னால் 125 உதாரணங்களை கொடுக்க முடியும். இந்த பெயர்கள் எல்லாம் மோடியோ நானோ அல்லது மற்ற தலைவர்களோ வைக்கவில்லை. இது நம்முடைய பாரம்பரியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திர தினத்தன்று நாம் ஜெய் ஹிந்த் என்றுதான் சொல்கிறோம். ஆனால், இந்து என்ற வார்த்தையை கூறும்போதெல்லாம் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.” என்றார்.

-மாலைமலர்.

0 comments:

Post a Comment