அன்புடைய வ.களத்தூர் சொந்தங்களே,
நமது விவேகானதர் இளைஞர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர டியுசன் செண்டர், உங்களைபோன்ற நல உள்ளங்களின் நிதியுதவியால் நடத்தப்பட்டு வருகிறது தாங்கள் அறிந்ததே...
தற்போது அறுபது மாணவ மாணவிகளுக்கு தொண்டு மனப்பான்மை உள்ளம் கொண்ட மூன்று ஆசிரியைகளைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் மாலை நடைபெறும் இந்த டியுசன் சென்டரில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது .
நமது குழந்தைகளுக்கு இந்து தர்மத்தின் சிறப்பு மற்றும் பெருமைகளை புகட்ட" இந்து சமய பண்பாட்டு வகுப்பு" நேற்று துவக்கி வைக்கப்பட்டது . நமது இந்து தர்ம பெருமைகளை சிறு வயது முதலே அறிந்தால்தான் பிற்காலத்தில் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக , நமது சனாதன தர்மம் காப்பவர்களாக இருப்பார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.
தனியார் பள்ளிகளில் படித்தாலும் நமது குழந்தைகள் எதிர்காலத்தில் "லவ் ஜிஹாத்" போன்றவற்றில் சிக்கி சீரழியாமல் இருக்க இந்த பண்பாட்டு வகுப்பு உதவும் என்பது உறுதி...
சனிக்கிழமை தோறும் நமது விவேகானந்தர் மன்றம் சார்பில் நடத்தப்படும் இந்து சமய பண்பாட்டு வகுப்பில் கற்க நமது குழந்தைகளை அனுப்பி பயன்பெறுவோம்...
RSS Feed
Twitter
Saturday, August 23, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment