Saturday 20 September 2014


பெரம்பலூர்,:   குன் னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்த தங் கராசு மனைவி நல்லம் மாள்(63) என்ற மூதாட்டி  முதல்வரின் தனிப்பிரிவில் தான் வசிக்கும் கிராமத்தில் நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தனது கிராமத்தின் நீர் ஆதா ரத்தை பாதுகாத்திட வேண் டும் என மனு அளித்துள் ளார். முதல்வருக்கு மூதா ட்டி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஊராட்சி நன்னை கிராமத்தில்  மூன்று நீர் நிலைகள் இருந்து வந்தது. இந்நிலையில் நன்னை கிராமத்தை சேர்ந்த இரண்டு வீஏஓக்கள், 2 ஆசிரியர்கள் என 5 அரசு ஊழியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மூன்று நீர்நிலைகளை சுற்றி கடந்த 10 ஆண்டுகளாக சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் வீடு கட்டி பயன்படுத்தி வருகின்றனர். எனவே நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பெரம்பலூர் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம்புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் 2013 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,  6 வார காலத்திற்குள் நன்னை கிராமத்திலுள்ள நீர் நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட பெரம்பலூர் கலெக்டர், குன்னம் தாசல்தார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை குறிப்பிட்டு மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்தேன். இதனிடையே ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என நீதிமன்றத்தில் தடை கோரினர். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டபடி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டார்.
அப்போதும் ஆக்கிரமிப்பை அகற்றிட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. . இந்த பிரச்சினையில் நான் தலையிட்டு போராடி வருவதால் எனக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே முதல்வர்  எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு,  நன்னை கிராமத்தில் நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் கிராமத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்திட வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

-தினகரன்.

0 comments:

Post a Comment