Thursday 31 July 2014


பெரம்பலூர் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்களை தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வந்த சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணான 100-ல் கடந்த 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, இளைஞர் ஒருவர் ஒரே செல்போனிலிருந்து, பல்வேறு எண்கள் மூலமாக அங்கு பணிபுரியும் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, காவலர்களை மிரட்டியும் வந்தார்.
ஏறத்தாழ ஒரே நேரத்தில் 25 அழைப்புகள் வந்துள்ளன. மகளிர் போலீசார் போனை எடுத்து பேசினாலும், அவர்களுக்கும் இதே நிலை நீட்டித்தது.


பொறி வைத்து பிடித்தனர்!
   
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அதிகாரி மரிய ஆரோக்கியம் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மகாவிஷ்ணு (17) என்பதும், இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்புகொண்டு காவலர்களை திட்டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மகாவிஷ்ணுவை கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

-தினகரன்.

0 comments:

Post a Comment