Wednesday 30 July 2014


பெரம்பலூர், : பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது என சதுர்த்தி விழா ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பூசாரித் தெருவிலுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.
விழா கமிட்டியின் தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். பிரபு அய்யர் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட துணைத்தலைவர் வாசு தேவன், நகரத் தலைவர் குருராஜேஷ் ஆகியோர், சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில், கதிர்வேல், கஜேந்திரன், ராஜேஷ், சிவகுமார், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணன், ஞானப்பிரகாசம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் வருகிற ஆகஸ்டு 29ம்தேதி விநாயகர் சிலைகளை வைப்பது. 31ம்தேதி (ஞாயிறு) மாலை 3 மணியளவில் அனைத்து சிலைகளையும் பெரம்பலூர் பழைய பஸ்ஸ் டாண்டு அருகிலுள்ள செல்வவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பது என முடிவு செய்யப் பட்டது. கமிட்டியின் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

-தினகரன்.

0 comments:

Post a Comment