Tuesday 28 January 2014

திருச்சி: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என  போஸ்டர்கள்  ஒட்டப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி  இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்திவரும் தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினரை கைது செய்வதுடன் அவர்களை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என திருச்சி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு நிலவுகிறது அங்கு.

முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு அறிவித்தபடி இன்று  சென்னை, கோவை, நெல்லை, திருச்சி   இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இதில்  லட்சகணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டு  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள்  எழுப்பினர். 








இதனிடையே முஸ்லீகளின் சிறைநிரப்பும் போராட்டத்தினை கண்டித்து  அகில பாரத இந்து மகா சபா, அகிலபாரத அனுமன்சேனா என்ற இந்து அமைப்புகள் திருச்சி பகுதிகளில் போஸ்டர்களை  ஒட்டியிருந்தன.  ”தமிழக  அரசே! தமிழக அரசே! கைது செய் கைது செய்! இந்து விவசாயிகள் வாங்கிய கடனை  அடைக்க  கட்ட  இயலவில்லை என அரசுக்கு விளக்க அமைதியான முறையில் போராடியதை    ஒடுக்கும் விதமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையே.. தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு கெட வேண்டும் என  எண்ணி இன்று  போராட்டம் அறிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள் மீதும் கலந்துகொள்ளும் முஸ்லீகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதன் எதிரொலியாக அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர் திருச்சி மாநகர காவல்துறையினர்.  

நன்றி-விகடன்.com

0 comments:

Post a Comment