Saturday 8 February 2014



பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், சேலைகளில் வேலைப்பாடு செய்ய பெண்களுக்கான இலவசப் பயிற்சி பெறலாம். இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 12 முதல் சேலைகளில் வேலைப்பாடு பயிற்சி பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி.  கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி. சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்)
ஆத்தூர் சாலையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment