Wednesday 16 April 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி 61 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் எனப்படும் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு, கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,29,580 ஆண் வாக்காளர்களும், 1,34,384 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 10 பேர் என மொத்தம் 2,63,974 வாக்காளர்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 1,21,623 ஆண் வாக்காளர்களும், 1,23,319 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 17 பேர் என மொத்தம் 2,43,959 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,51,203 ஆண் வாக்காளர்களும், 2,56,703 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 27 பேர் என, மொத்தம் 5,07,933 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு கடந்த 9ம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் வழங்கப்பட்டு வருகிறது. 14ம் தேதி வரை 3 லட்சத்து 11 ஆயிரம் நபர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளர் சீட்டு வழங்கும் பணிகள் 61 சதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு 19-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment