Friday 18 April 2014

பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பச்சமுத்து, தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். துறையூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் உப்பிலியபுரம் சோபனபுரம் கொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். கட்சியின் நிர்வாகிகள் பூசணிக்காயை சுற்றி வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் பின்தங்கிய தொகுதி என்று அனைவரும் பேசி வருகின்றனர். இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை. தொகுதியில் குடிநீர், வேலை வாய்ப்பு என எதையும் செய்யவில்லை. பெரம்பலூர் மக்களின் 20 ஆண்டு கால கனவு திட்டமான அரியலூர் முதல் நாமக்கல் வரையிலான ரெயில் பாதையை இதுவரை நிவேற்றவில்லை என்றும் கூறினார்.
தற்போது ஊடகங்களின் வரும் கருத்துக்கணிப்புகளின் படி பாரதீய ஜனதா கட்சி 275 இடங்களை பெறும் என்றும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 350 இடங்களை பெறும் என்றும் கூறினார். இது வரை பாஜகவை பற்றி எதுவும் பேசாமல் இருந்த தமிழக முதல்வர் தற்போது மோடியையும் பா.ஜ.க.வையும் குறைகூறி பேசி வருகிறார். தங்களின் தொகுதி பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி நிதியை பெற்று தொகுதிக்கு வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.
ஐ.ஜே.கே. மாநிலப்பொதுச் செயலாளர் ஜெசீலன், மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேஸ், மாவட்ட தலைவர் பரந்தாமன், மாவட்ட செயலாளர் துரைபாரதி, பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் மாராடிநடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராஜு, துரை முருகன், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரஜோதி தே.மு.தி.க. பழனிவேல், நகர தலைவர் சுப்புகுரு, சபாபதி, மானோகர், ராஜன், பா.ம.க. மாவட்ட தலைவர் தங்கராசு உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி-மாலைமலர்.

0 comments:

Post a Comment