பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ, மாணவியர், ஆவலுடன் உள்ளனர்.
தேர்வுத் துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in' ஆகிய, நான்கு இணையதளங்களில், சரியாக, காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத் துறைதயாராகியுள்ளது.
இதில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்:
பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HSC<space>"Registration Number" என்ற அடிப்படையில் அடித்து எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். TNBOA RD<SPACE><REGISTERNO><DOB in DD/MM/yyyy> என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
RSS Feed
Twitter
Thursday, May 08, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment