பீஜிங்: சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மோடி தலைமையில் அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையேயான நட்பு, மேலும் பலமடையும். குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில், மோடியை மறைமுகமாக தொடர்புபடுத்தி, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், பொருளாதார தடையை திணித்ததால், தற்போது அவர் பிரதமர் ஆவதை அவர்களால் ஏற்க முடியவில்லை.இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து மோடி பேசியதாக வெளியான தகவல்கள், இரு நாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில், மேற்கத்திய ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டவை.இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது v .kalathur seithi .
நன்றி-தினமலர்
RSS Feed
Twitter
Tuesday, May 06, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment