Sunday 6 April 2014

பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் நாளை முதல் வாக்காளர்களுக்கு வாக்குசீட்டுகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
தேர்தல் பொது பார்வையாளர்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ் அஹமது முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர்சஞ்சய்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் தேர்தல் பொது பார்வையாளர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர்பாராளுமன்ற தொகுதியில் பொது மக்கள் அமைதியான வழியில், அனை வரும் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து எந்நேரமும் தொடர்பு கொண்டு என்னிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர்தரேஸ் அஹமது செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
இன்று முதல்
வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கட்கிழமை முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளது. இப்பணி தேர்தல் நடைபெறும் 5 நாட்களுக்கு முன்னதாக 19-ந் தேதி அன்று முடிவடையும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சீட்டு பெறாதவர் கள் மீதமுள்ள 5 நாட்களில் பெரம்பலு£ர் உதவி-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.13 லட்சம் பறிமுதல்
இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்து 840 மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
புகார் மையத்தில் வாக்கா ளர் அடையாள அட்டை தொடர்பாக 9 புகார்களும், பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக 3 புகார்களும், அரசியல் கட்சிகளின் விளம் பரங்கள் தொடர்பாக 114 புகார்களும், விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக 2 புகார்களும், இதர புகார்கள் 3ம் என மொத்தம் 131 புகார்கள் பதிவு செய்யப்பட்டு அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டி வரப் பெற்ற 16 ஆயிரத்து 202 விண்ணப்பங்களில் 1,497 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டு மீதமுள்ள 14 ஆயிரத்து 705 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்ப லு£ர் சட்டமன்ற தொகுதியில் 87 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குச்சாவடிகளும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 16 வாக்குச் சாவடிகளும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் 16 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லு£ர் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளும், முசிறி சட்டமன்ற தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் 7 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச் சாவடி களாக கண்டறியப்பட்டுள் ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டு கண்காணிக் கும்பணிகளும், துணை நிலை ராணுவ காவலர்களும் பணி யில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் குறித்த கூட்டம் ஏப்ரல் 13, 17, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) மலையாளம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) கார்குழலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (கணக்கு) கார்த்திகாயினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

நன்றி-தினத்தந்தி

0 comments:

Post a Comment