பெரம்பலூர் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் மற்றக்கட்சி வேட்பாளர்களை பின்தள்ளி பெரம்பலூர் தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பம்சமாக இன்றுவரை OC எனப்படும் முன்னேறிய வகுப்பினர் என்ற பட்டியலில் உள்ள ரெட்டியார் சமூகத்தை OBC எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க தேர்தல் அறிக்கையில் உறுதிகூறியுள்ளார். கடந்தமுறை பெரம்பலூர் தொகுதி MP யாக இருந்த நெப்போலியன் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் தற்போது தி.மு.க வேட்பாளரான சீமானுர் பிரபு நேருவின் பினாமி என்பதோடு இந்த நேருவும் ரெட்டி சமூகத்தைச்சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேரு ரெட்டி சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ரெட்டி சமூகத்தின் OBC அந்தஸ்து பற்றி இந்த தேர்தலில் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed
Twitter
Wednesday, April 09, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment