Sunday 8 June 2014

விதை நெல் சுத்திகரிப்பு எந்திரம்.

வேப்பந்தட்டை யூனியன் அலுவலக வளாகத்திற்குள், வேளாண் அலுவலர் அலுவலகத்தை யொட்டி விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்க ளிலுள்ள 121 ஊராட்சிகளில் இருந்தும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் ரகங்கள் விதை நெல்லாக தரம் பிரிப்பதற்காக கொண்டு வந்து சுத்திகரிக்கப்படும். அறுவடை செய்து மூட்டைகளில் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள நவீன எந்திரத்தில் கொட்டப்படும் நெல்லில் இருந்து பதர்கள், தூசுகள், கற்கள், உடைந்த நெல் ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, விதைச்சான்று ஆய்வுத் துறை பரிசோதனைக்குப் பிறகு அரசு முத்திரையிடப்பட்ட, சுத்தமான விதை நெல் சாக்குகளில் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட நெல்லிற்கு கிலோவுக்கு ரூ.5 மானிய விலை கொடுத்து விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் இவை, ஒவ்வொரு சாக்கிலும் 51 கிலோ எடையுடன் நிரப்பப்பட்டு அனைத்து வட்டாரங்களிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில் 20 டன்நெல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைக்க முடியும். ஆனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் சுமார் 200 டன் நெல் மூட்டைகளை இங்கு கொள்முதல் செய்ய முடியாது. இதனால் விதை சுத்திகரிப்பு நிலையம் இடப்பற்றாக்குறையால் திணறி வந்தது.
இந்நிலையில் விதை சுத்திகரிப்பு நிலையத்திற் கான சேமிப்புக் குடோன் களை அமைப்பதற்கு கலெக்டர் தரேஸ்அகமது நிதி வழங்குவதற்கென சிறப்பு ஏற்பாடு செய்து, வேப்பந்தட்டையில் புதிதாக 2 குடோன்களையும், பெரம்பலூர் தாலுகா, களரம்பட்டியில் ஒரு குடோ னும் என 3 குடோன்கள் அமைப்பதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுமென அறிவித்துள்ளார். இதனால் இடப்பற்றாக்குறை நீங்குவதோடு, விவசாயிகள் விதை நெல்லை சிரமமின்றி வாங்குவதற்கான கூடுதல் வசதியும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளும், வேளாண்மைத் துறையி னரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர் v.kalathur seithi .

-தினகரன்.

0 comments:

Post a Comment