Saturday 14 June 2014

rss1 small

இன்றும் (14.06.2014) நாளையும் RSSன் மாநில பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதன் பகுதியாக வழக்கமாக நடைபெறும் மாலை நேர விளையாட்டு மற்றும் உடற்பயற்சி வகுப்பு (ஷாகா) அக்கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுமார் 350 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடம் முழுவதையும் ஏதோ தீவிரவாதிகளை முற்றுகையிடுவது போல் அனைவரையும் சுற்றி வளைத்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் DSP அண்ணாமலை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. DSP அண்ணாமலை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது உபயோக்கிக்க ஆர்.எஸ்.எஸ், அமைப்பினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். உடனடியாக அங்கு குழுமியிருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போரட்டங்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நடத்தினர். நிலமை விபரீதமாக போவதை உணர்ந்த காவல்துறையினர் பிடித்தவர்களை அந்த மண்டபத்திலேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர்.
 rss 2 small

banner small

dindigul protest small

இந்த பிரச்சினை அதிகாரிகள் மட்டத்திலும் பூதாகாரமாக உருவெடுப்பதை உணர்ந்த காவல்துறையினர், முஸ்லீம் தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் முகாமின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த தயாரனாதால் ஆர்.எஸ்.எஸ்.னிரை காப்பற்றவே இந்த நடவடிக்கை என்று ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர்.
  • குண்டு வீசி முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கும் அளவிற்கு இராமநாதபுரத்தில் வலுபெற்றுவிட்டனர் என்றால் இந்த சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்வாரா?
  • குண்டுவீசி தாக்கவரும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு காவல்துறையா? அல்லது தீவரவாதிக்கு பயந்து அப்பாவி மக்களை கைது செய்வதற்கு காவல்துறையா? தீவரவாதிகள் குண்டுவீச போகிறார்கள் என்றால் விவரம் தெரிந்து அரசு பயங்கரவாதிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
  • வலுவான அரசு தமிழக அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களே இதுதான் உங்கள் போலீஸ் நிர்வாகத்தின் இலட்சணமா?

இதற்கு முன் இந்த மாவட்டத்தில் சாமி ஊர்வலம் செல்ல அரசு அனுமதி மறுத்தது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் நுழைய அனுமதியில்லை என்ற பெயர் பலகையை அனுமதித்தது. கோயில் அருகில் பசுவதை செய்ததை கண்டித்து புகார் கொடுத்த இந்துக்களை காவல் துறை கைது செய்தது. கலவரம் செய்யும் முஸ்லீம்கள் கேணிக்கரை காவல் நிலையத்தை தாக்கிய போது மாவட்ட கலெக்டர் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது.

இராமநாதபுரம் என்ற பெயரை RAMNOT என்று முஸ்லீம்கள் அழைப்பதை அரசு ஆதரித்து மகிழ்ந்தது. உலகத்திற்கே பாரதத்தின் உயர்வை நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தரின் நினைவு சின்னத்தை முஸ்லீம்களை ஆதரித்து பயங்கரவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் ஈடுபடுபவர்களை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், காங்கிரஸ்ம் எம்.எல்.எகளாகவும் எம்.பிகளாகவும் பஞ்சாயத்து தலைவர்களாகவும் வைத்து அரியனைவைத்து அழகுபார்த்தனர். இதன் விளைவு இந்த மாவட்டத்தின் தாலிபான் தலைவர் (மாவட்ட கலெக்டர்), பள்ளிகூடங்களுக்கு இந்து மாணவர்கள் இரட்சையோ,திலகமோ அணிந்து வந்தால் பாதுகாப்பு கொடுக்கமுடியாது ஆகையால் இவைகளை தடைசெய்கிறேன் என்று ”பட்வா” பிறப்பித்தார். இந்தத் தொடர் அவலங்களின் அடுத்தப்படி கடற்கரையில் கூட இந்துக்கள் கூட அனுமதியில்லை என்ற இழிநிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முல்லா, பேகம் ஆட்சிமாற்றம் இன்னும் எந்த நிலைக்கு நம் தமிழர்களை தள்ளுமோ?

ஆனால், பாரதியின் வாக்கு பாரதத்தில் பொய்த்ததில்லை. தர்மத்தின் வாழ்வுதனை ஜிகாத் (சூது) கவ்வும். மறுபடியும் தர்மமே வெல்லும். ஓட்டுக்காக பணத்திற்காக பதவிக்காக சிறுபான்மையினரை தாஜா செய்ய இந்துக்களின் அடிப்படை உரிமையை கைவைக்கும் சட்ட விரோத, தர்ம விரோத சக்திகளை வேரும் வேரடி மண்ணோடும் களையெடுக்க உறுதி பூணுவோம்.

நன்றி- vsrc

0 comments:

Post a Comment