Friday 13 June 2014

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாட்டிய குன்னம் SSI ராஜேந்திரன்.

லஞ்சம் வாங்கிய குன்னம் சிறப்பு SI....... மாட்டிவிட்ட கணவன் மனைவி.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச்சென்றால் பிரியாணி முதல் ஆயிரக்கணக்கான பணம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் நடவடிக்கையே எடுக்கப்படும் நிலைமை என்பதை ஒருமுறை புகார் கொடுக்கச்சென்றவரிடம் கேட்டால் கூட காவல்துறைமீது கழுவி.. கழுவி.. ஊற்றுவார்கள்.

பணம் கொடுத்தால்தான் FIR பதிவு செய்யப்படும் நிலை. அதற்க்கு மேல் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம்..... கைது செய்ய லஞ்சம்.... கைதுசெய்யாமல் இருக்க லஞ்சம்... என்று லஞ்சத்திலேயே படுத்து உருளும் காவல்துறை மீது புகார் கொடுக்க எல்லோரும் அச்சப்படுவதற்கு காரணம் லஞ்ச ஒழிப்புதுறை யிலும் லஞ்சம் இருப்பதுதான் காரணம்.

கரணம் தப்பினால் மரணம்....... காவல்துறை அதிகாரிகள் மீதே புகார் கொடுப்பவர்கள் மாட்டினால் பொய் வழக்கு போட்டு சிறையிலேயே தூக்கில் போடும் காட்சிகள் கூட இன்று காவல் நிலையங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறும் நிலைமைதான் இங்கு நிதர்சனமான உண்மை.

காவல்துறை யால் பாதிக்கப்பட்டவர்கள் , காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க சரியான ஆயுதம் லஞ்ச வழக்கில் சிக்கவைப்பது அருமையான  வழி. ஏனெனில் இங்கு லஞ்சம் வாங்காத அதிகாரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

குன்னத்தில் ஜோஸ்வா என்பவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அவரின் மனைவி கொடுத்த புகார் மீது ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3000/- லஞ்சமாக குன்னம் காவல்நிலையத்தில் சிறப்பு S I  யாக பணி புரிந்துவரும் ராஜேந்திரன் கேட்க , அவரை லஞ்ச ஒழிப்புத்துறையில் மாட்டிவிட்டார் ஜோஸ்வா.

காவல்துறையால் பாதிக்கப்படுவோம் எனத்தெரிந்தும் லஞ்ச வழக்கில் மாட்டிவிட்ட ஜோஸ்வாவை வாழ்த்துவோம்.....

0 comments:

Post a Comment