Saturday 22 March 2014

மாதிரி விடைத்தாள்
26-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 26-ந் தேதி (புதன் கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள் 4 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 416 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான வினாத் தாட்கள் அனைத்தும் சிறப்பு அலுவலர்கள் மூலமாக அனைத்து தேர்வு மையங் களுக்கும் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் வாகனங்களில் எடுத்து சென்று வழங்கப்பட உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
மாவட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் இருப்பு மையங்களுக்கும் விடைத்தாள் இருப்பு மையங்களுக்கும், தலா 2 போலீசார் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை துணை- கலெக்டர் மதுசூ தனன் ரெட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்வார் கள்.
புகைப்படத்துடன் விடைத்தாள்
தேர்வு எழுதுவோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விடைத்தாள்கள் இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. மாணவ -மாணவிகளின் பெயர் பதிவு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.
தனித் தேர்வர்கள் தங்களது தேர்வு மைய நுழைவுச்சீட்டை வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகள் முறைகேடுகள் இன்றி நடக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளது. தேர்வு மையங் களின் அருகே ஒலிபெருக்கி தேவையற்ற சப்தம் போன்ற வற்றால் ஏற்படும் இடையூறு களை உடனுக்குடன் களையவும் போதிய பாதுகாப்பு வசதி செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள்
மேலும் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிமலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நேரடியாக விண்ணப்பித்த தனித்தேர்வர் களும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தட்கல் முறையில் விண்ணப் பித்த தனித் தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுத வுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment