Monday 10 March 2014

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 6 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் அடங்கிய பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்கள் செல்வராஜ் (9786672151), மனோன்மணி (9843673556), ரெங்கராஜ் (9047196204) ஆகியோரகள் தலைமையிலான குழுக்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்கள் கஜேந்திரன் (9443954674), தமிழரசி (9176639932), மணிவேலன் (9443647692) ஆகியோர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment