Sunday 9 March 2014

புதுடெல்லி: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், அது பறிமுதல் செய்யப்படாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடை செய்யும் நோக்கத்தில் தேர்தல் செலவு கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அமைத்துள் ளது. இந்தக் குழுவினர் நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ணீ50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணம் எடுத்துச் செல்லப்பட்டால், அதற்கு உரிய ஆவணங்கள் உள் ளதா என தேர்தல் ஆணை யம் நியமித்த பறக்கும் படையினர் ஆய்வு செய்வர். ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் மொத்தம் ணீ1.15 கோடி சிக்கியது. இப்படி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடிகள் சிக்கின.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘பணம் கொண்டு செல்வதில் கட்டுப்பாடு அரசியல் கட்சியினருக்கும், அவர்களிடம் பணி புரிபவர்களுக்கு மட்டுமே. வங்கியிலிருந்து பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது’’ என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனாலும் திருமண செலவு, மருத்துவ செலவு, வர்த்தகம், சொத்து வாங்க அல்லது விற்ற மற்றும் பிற தேவைகளுக்காக பணத்தை எடுத்துச் செல்ல நேர்ந்தால் எப்படி கொண்டு செல்வது என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பொது மக்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் அவற்றை இடைமறித்து, சந்தேகிக்கும் வகையில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினருக்கு உண்டு. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்பட்டால் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என  பறக்கும் படையினர் ஆய்வு செய்வர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்பட்டால், அது குறித்து வருமான வரித்துறையினரிடம் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்து அந்தப் பணத்தை ஒப்படைப்பர். வருமான வரித்துறையினரின் ஆய்வுக்குப் பின் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும். வெள்ளை பணமாக இருந்தால் எந்த கவலையும் இல்லாமல் எவ்வளவு பணத்தையும் பொதுமக்கள் கொண்டு செல்லலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment