Wednesday 12 March 2014

பெரம்பலூர், :  பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பெரம்பலூர் சங்குபேட்டையில் 3 நாட்களாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை அருகே உள்ள திருவாலந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வமிக்க இவர் கல்லூரியில் படித்த போது நண்பர்களின் ஊக்குவிப்பால் இதுவரை 400க்கும் மேற்பட்ட பாரம்பரிய ஓவியங்களை வரைந்துள்ளார்.
இந்நிலையில், கலை பண்பாட்டுத் துறை ஆலோசனையின் பேரில், தனது ஓவியங்களை முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் காட்சிக்கு வைத்தார். இதில் மருத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீர் தேவை, மின்சாரம், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களும், புகைப்படங்களும், மற்றும் பாரம்பரிய ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கண்டு வியந்தனர். இதைத் தொடர்ந்து, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஓவியக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.

0 comments:

Post a Comment