Wednesday 2 April 2014

பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து இன்று காலை 9.35 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி, செங்குணம், கவுல்பாளையம் வழியாக நெடுவாசல் என அடுத்தடுத்த கிராமங்களில் பிரசாரம் செய்தார். 


க.எறையூர் கிராம பிரசாரத்தில் பேசிய பாரிவேந்தர்," தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சக்களத்தி சண்டை போட்டு அனைத்தையும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்"  என குற்றஞ்சாட்டினார்.

அவர் பேசுகையில், ''பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரான நான் உங்கள் முன் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கான தேர்தல் இல்லை. டெல்லி நாடாளுமன்றத்திற்கான தேர்தல், சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஓட்டு போடுங்கள். இது  டெல்லிக்கான தேர்தல் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை மறந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் இங்கு சக்களத்தி சண்டைப்போட்டு தமிழகத்தை குட்டி சுவராக்கி விட்டார்கள்.

அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் அங்கும் சண்டைப்போட்டுக்கொண்டு தமிழகத்துக்கான திட்டங்களை தடுத்து விடுவார்கள். இப்போது உண்மையான போட்டி என்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான். காங்கிரசுக்கு கடந்த 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். ஆனால் காங்கிரஸ் நல்ல திட்டங்கள் ஏதும் கொண்டு வரவில்லை. ஆனால், அதில் ஐந்து வருடம் மட்டும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். தங்க நாற்கரச்சாலை கொண்டு வரப்பட்டது.

அப்படித்தான் பாலைவன மாநிலமான குஜராத்தை சோலைவனமாக மாற்றிய நரேந்திரமோடி, இப்போது பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு உதவியாக என்னையும் டெல்லிக்கு அனுப்பி வைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அப்படி செய்தால் இத்தனை ஆண்டு காலம் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு கல்வி உதவி செய்து வந்த நான், உங்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர உழைப்பேன்'' என்றார்.

நன்றி-https://www.facebook.com/syaanand

0 comments:

Post a Comment