தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்
தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம்
தொடங்கி நவம்பர் வரை சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கக் கோரி தமிழகம்
முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக பட்டியல் வெளி யிடுவது வரும் 10-ம்
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்
குமார் தெரிவித்தார்.
நன்றி-தி இந்து.
RSS Feed
Twitter
Monday, January 06, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment