Monday 6 January 2014



பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதை 13ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் (பொ) சுப்பிரமணியன் தெரிவித்தார்.
   தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக் கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம், விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் 42 ஆயிரத்து 535 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 272 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 70 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் அட்டைதாரர்களுக்கும், 42 ஆயிரத்து 877 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகாவில் 43 ஆயிரத்து 364 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 36 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 43 ஆயிரத்து 400 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குன்னம் தாலுகாவில் 44 ஆயிரத்து 333 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர் களுக்கும், 16 காவலர் குடும்ப அட்டைதாரரர்களுக்கும், 44 ஆயிரத்து 349 கிலோ பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலத்தூர் தாலுக்காவில் 30 ஆயி ரத்து 172 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 20 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக் கும், 30 ஆயிரத்து 192 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இம் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், தலா ரூ.100 வீதம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 800 மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 987 ஆண்களுக்கு வேஷ் டியும், 1 லட்சத்து59 ஆயி ரத்து 2 பெண்களுக்கு  சேலையும் ரேஷன் கடை கள் மூலமாக விநியோகம் செய்யப்பட உள்ளன.இந்த பரிசுத் தொகுப்பை இம் மாதம் 13ம் தேதி வரை வார்டு வாரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என் றார்.


நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment