பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும்
ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது
என்றார் ஆட்சியர் தரேஸ்அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நல திட்டங்களின் விவரத்தை மகளிரிடையே தெரிவிக்க வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வெண்டும். கூட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பற்றாளர்களாகவும், வட்டாரம் வாரியாக, மண்டல அலுவலர்கள் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மகளிர் கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து மகளிரும் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நன்றி-தினமணி.

RSS Feed
Twitter
Friday, January 10, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment