மதுரை: எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச்
சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனந்த
முருகன் தாக்கல் செய்த மனுவில், ஆதார் அட்டை கேட்கும் எரிவாயு நிறுவனத்தின்
உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை
கேட்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
மத்திய அமைச்சரவை செயலாளர் உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை
பிறப்பித்தனர்.
நன்றி-தினகரன்.
நன்றி-தினகரன்.
RSS Feed
Twitter
Thursday, January 02, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment