பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமுத்து (42). அவரது உறவினர், கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் (55).
விவசாயிகளான இருவரும், வெள்ளிக்கிழமை மாலை வேப்பந்தட்டையிலிருந்து, நெய்க்குப்பை கிராமத்துக்கு தொண்டப்பாடி கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, வ. களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து
மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வேலாயுதம், பெரம்பலூர் அரசுருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வ. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி-தினமணி.

RSS Feed
Twitter
Friday, January 03, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment