Monday 24 February 2014

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்தார். இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில்,
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2014 போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் :
திருவள்ளூர் (தனி) (1) : டாக்டர் ஞ. வேணுகோபால், மருத்துவ அணிச் செயலாளர், மக்களவை குழுச் செயலாளர்
சென்னை வடக்கு (2) :  வெங்கடேஷ் பாபு, வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
சென்னை தெற்கு (3) : டாக்டர்  ஜெயவர்தன், தெற்கு லீத் கேஸ்டில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்
மத் ய சென்னை (4) : விஜயகுமார்,  மாணவர் அணிச் செயலாளர் தலைவர், சிந்தாமணி கூட்டுறவு  மொத்த விற்பனை பண்டகசாலை
ஸ்ரீபெரும்புதூர் (5) : இராமச்சந்திரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவர்
காஞ்சிபுரம் (தனி) (6) :  மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
அரக்கோணம் (7) : திருத்தணி கோ. அரி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
வேலூர் (8) : பா. செங்குட்டுவன், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட     வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
கிருஷ்ணகிரி (9) : மு. அசோக்குமார் கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
தருமபுரி (10) : மோகன், தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
திருவண்ணாமலை (11) : சு. வனரோஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
ஆரணி (12) : செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் (தனி) (13) : எஸ். இராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்
கள்ளக்குறிச்சி (14) : டாக்டர்  காமராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்,
சேலம் (15) :  ஏ. பன்னீர்செல்வம், சேலம் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
நாமக்கல் (16) : சுந்தரம், நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஈரோடு (17) : செல்வக்குமார சின்னையன், ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
திருப்பூர் (18) : சத்தியபாமா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
நீலகிரி (தனி) (19) : கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர மன்றத் தலைவர்
கோயம்புத்தூர் (20) :  நாகராஜன், கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகு க் கழகச் செயலாளர்
பொள்ளாச்சி (21) :  மகேந்திரன், திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்
திண்டுக்கல் (22) : உதயகுமார், நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்
கரூர் (23) : டாக்டர் மு. தம்பிதுரை, கழக கொள்கை பரப்புச் செயலாளர், கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் கழக மக்களவை குழுத் தலைவர்
திருச்சிராப்பள்ளி (24) : ப. குமார், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
பெரம்பலூர் (25) : மருதைராஜ் (எ) மருதராஜா, பெரம்பலூர் ஒன்றியக் கழகச் செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
கடலூர் (26) : ஆ. அருண்மொழிதேவன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சிதம்பரம் (தனி) (27) : மா. சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை (28) : பாரதிமோகன், திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
நாகப்பட்டினம் (தனி) (29) : டாக்டர் மு. கோபால்,திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தஞ்சாவூர் (30) : பரசுராமன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற  இணைச் செயலாளர் நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்
சிவகங்கை (31) :  செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
மதுரை (32) : கோபாலகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி துணை மேயர்
தேனி (33) :  பார்த்திபன், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
விருதுநகர் (34)  : ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
ராமநாதபுரம் (35) :  அன்வர்ராஜா, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
தூத்துக்குடி (36) : ஜெயசிங்  யாகராஜ் நட்டர்ஜி, தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
தென்காசி (தனி) (37) :  வசந்தி முருகேசன், திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்
திருநெல்வேலி (38) : பிரபாகரன், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளர்
கன்னியாகுமரி (39): ஜாண்தங்கம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம்
புதுச்சேரி (40) : ஓமலிங்கம், காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி  உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொகுதி  உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இவ்விரு கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள்  திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

0 comments:

Post a Comment