Thursday 6 March 2014

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 25}க்குள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச். 5) முதல் விநியோகிக்கப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 50 செலுத்தி விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 5 முதல் 25-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
தேர்வுக்கட்டணம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு ரூ. 250-ம், இதர பிரிவினருக்கு ரூ. 500-ம் தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கட்டணத்தை ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தி வங்கி வரைவோலை பெற வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி வரைவோலையை இணைத்து, வருகிற 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.
 28-ம் தேதி நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறக் கூடிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வுத்துறையால் பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி-தினமணி

0 comments:

Post a Comment