vkalathur வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில்மாரியம்மன் கோவிலில்முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பொங்கல் விளையாட்டு விழா வ.களத்தூரில் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்காக நிதி வசூலித்ததில் மீதமிருந்த பணத்தைக்கொண்டு மாரியம்மன் கோவிலில் உள்ள மரம் செடிகொடிகளை காக்கும்பொருட்டு முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்றவருடம் மாரியம்மன் கோவில் திடலில் தேக்கு, தென்னை, வேம்பு மற்றும் பூச்செடிகள் விவேகானந்தர் மன்றம் சார்பில் நடப்பட்டு தற்போது நன்கு தழைத்து வளர்ந்துள்ளன. அதனை காக்கும் பொருட்டு தற்போது முள்வேலி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
RSS Feed
Twitter
Saturday, March 08, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment