Friday 7 March 2014

இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், பழனிமலை இஸ்லாமிய மயமாக்கப்படுவதையும் கண்டித்தும் பழனி மலைக் கோவில் பாதுகாப்பு பேரவை(ப.ம.கோ.பா.பே) சார்பில் இன்று (04.03.2014) மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட இணையமைப்பாளர் திரு. மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். திரு.சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலை வகித்தார். பழனி மலைக் கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் திரு. காளிங்கராயன், திரு. செந்தில்குமார், திரு. கனகராஜ், திரு. தீனதயாளன், திரு. ஜெகன், திரு. திருமலைச்சாமி ஆகியோரும், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் திரு இராம நம்பிநாராயணன் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை அளித்தனர். திரு. .சூர்ய துரைராஜ் அவர்கள் வரவேற்புரையும், திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள். இந்த போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை குறித்த வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் அறிக்கை பின்வருமாறு:
palani protest gopalji
//ஆறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், ஊழல் மிகுந்த நிர்வாகத்தினாலும், இஸ்லாமிய மயமாக்கலினாலும், சீர்கெட்டு வருகிறது.

பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.

பழனியாண்டவர் கோயிலில் கோதானம் கொடுப்பவர்களிடமிருந்து, பசுக்களைப் பராமரிக்க பசுவுக்கு ரூ.1000 வாங்கப்படுகிறது. இந்தப் பசுக்கள் சரியான முறையில் பராமரிக்கப் படுவதில்லை. தானமாக வந்த பசுக்கள் இப்போது கோசாலையிலும் காணவில்லை. அவை எங்கு மாயமாயின என்று தெரியவில்லை. இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சாமிருதம் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன நிறுத்தக் கட்டணம், சிறப்பு தரிசனம் என்று கைவைக்குமிடத்திலெல்லாம் பணத்தைப் பிடுங்கி, அதில் ஊழல் செய்து வருகிறது அறநிலையத் துறை. பல நூறு கோடிகள் காணிக்கையாக வரும் இந்தத் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தணிக்கை நடத்தப்படவில்லை. எனவே, இந்துப் பிரதிநிதிகள், அரசு தணிக்கை அதிகாரிகள் (CAG) அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வெளியார் தணிக்கை (external audit) செய்யப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வீரத்துறவி இராம.கோபாலனுக்காக

பால.கௌதமன்
பழனி
04.03.2014//

நன்றி-http://www.vsrc.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/206-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/itemid-140

0 comments:

Post a Comment