Tuesday 4 March 2014

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமணம் மண்டபத்தில் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருமண வீட்டாரின் உறவினர் ஒருவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்தாராம்.
அதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்குச்சென்ற பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதையில் ஈடுபட்டனர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லையெனத் எனத் தெரியவந்தது. தொடர்ந்து திருமணமும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசார் உறவினர் செல்போனுக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து யார் என்று கண்டுபிடித்தனர். அதில் மருவத்தூர் போலீஸ் பகுதி கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பரது மகன் அலெக்சாண்டர் (வயது29) பெண் கேட்டு தாரததால் அதன் முன் விரோதம் காரணமாக திருமணத்தை தடுத்து நிறுத்தவே செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் அலெக்சாண்டர் (வயது29) ஓட்டல் மாஸ்டர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி-மாலைமலர்.

0 comments:

Post a Comment