பெரம்பலூர்,: தேசியஅடையாள அட்டைக்கான (ஆதார்) பதிவு செய்யும் 2ம் கட்ட முகாம்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மே 3ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாளஅட்டை எனப்படும் தேசிய அடை யாள அட்டைக்கான பதிவுசெய்யும் 2 ம் கட்ட முகாம்கள் பெரம்பலூர், வேப்பந் தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூர் ஆகிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2010ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் தேசிய அடையாள அட்டையைப் பெற புகைப் படம், கை ரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் வட்ட அலுலவங்களில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பதிவினை பெரம்பலூர் வட்ட அலுவலத்தில் மேற்கொள்ளலாம். இந்த முகாமிற்கு பதிவுசெய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல்சான்று அல்லது விஏஓ சான்று, குடும்ப அட்டை, வாக்காளர்அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. புதியதாக தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் தாக்கல் செய்த நபர்களும் தற்போது தங்களது பதிவினை மேற்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் மேமாதம் 3ம் தேதியுடன் முடிவடைவதால் இந்த வாய்பினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்தி தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். v.kalathur seithi
நன்றி-தினகரன்.
0 comments:
Post a Comment