Saturday, 3 May 2014


யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றது. அசம்பாவிதம் என்று சொல்வதை விட, அது ஒரு சதி. நரேந்திர மோடி முதலமைச்சராக பதவியேற்று ஏறக்குறைய 150 நாட்கள் ஆகியிருக்கும். மோடி ராஜ்கோட் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மூன்று நாட்கள் கழித்து, அவர் சட்டசபையில் எம்.எல்.ஏ வாக பதவியேற்ற அன்று, அதாவது 2002 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள், அந்த சம்பவம் நடைபெற்றது.

கோதரா, குஜராத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு 65% இந்துக்களும் (ஜெயினர்களையும் சேர்த்து), 35% முஸ்லீம்களும் உள்ளனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையானோர் கான்ஜிபிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பரம்பரையாக எண்ணெய் உற்பத்தி செய்பவர்கள். ஆப்கானிய சிப்பாய்களுக்கும், பில் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்கும் தோன்றிய வம்சாவளியினர்தான் இந்த கான்ஜி முஸ்லீம்கள். மூர்க்க குணம் உடையவர்கள். எதிலும் மிகத் தீவரம் காட்டுபவர்கள். இவர்கள் சமுதாயத்தில், படிக்காதவர்கள் அதிகம். ஏழைகளும் அதிகம். இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் நிறைய வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுவரை கோதராவில் நடந்தேறியுள்ள வன்முறைகள்:
1927 ஆம் ஆண்டு, பி.எம்.ஷா என்ற வழக்கறிஞரும், இந்து மஹா சபா உறுப்பினரும் கொல்லப்பட்டனர்.
1946 ஆம் ஆண்டு, இந்தப் பகுதியை சேர்ந்த சர்தார் அலி ஹாதி என்பவர் "பாகிஸ்தான் சிந்தாபாத்" என்று எழுதப்பட்ட பட்டத்தை வானில் பறக்கவிட்டார். பின்னர் பாகிஸ்தான் உருவான பிறகு, அங்கு ஒரு மாநிலத்தின் ஆளுரராக நியமிக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு, பிம்பிள்கர் என்ற ஒரு காவல்காரரும், ஒரு பால்காரரும் கொல்லப்பட்டனர். மேலும் பல ஹிந்துக் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
பிறகு 1980 ஆம் ஆண்டு, ஐந்து ஹிந்துக்களும், இரண்டு குழந்தைகளும், கோதரா ரயில் நிலைய யார்டில் கொல்லப்பட்டனர்.
பின்னர் 1990 ஆம் ஆண்டு, மதராஸாவில் (இஸ்லாமிய மதத்தை போதிக்கும் பள்ளிக்கூடம்) பாடம் எடுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஹிந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தன்று -அயோத்தியில் இறைத்தொண்டு செய்துவிட்டு சுமார் 2000 கர சேவகர்கள், சபர்மதி எக்ஸ்பிரஸில் அயோத்தியாவிலிருந்து அஹமதாபாத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த ரயில், கோதராவில் நின்றது. கோதரா ரயில் நிலையம், முக்கியமான மும்பை - டில்லி வழித் தடத்தில் அமைந்துள்ளது. விடியற்காலை 3:45 மணிக்கு வரவேண்டிய சபர்மதி எக்ஸ்பிரஸ், சம்பவத்தன்று நான்கு மணி நேரம் காலதாமதமாக சுமார் 7:43 மணிக்கு கோதரா வந்தது. இரயிலில் இருந்த கர சேவகர்கள், காலையில் தேநீர் பருக இரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கினர். பின்னர் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இரயில் கோதரா ரயில் நிலையத்திலிருந்து வதோதராவிற்கு புறப்பட்டது. அப்பொழுது ஒரே சமயத்தில் ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளிலிருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு, இரயில் நிறுத்தப்பட்டது (அபாய சங்கிலியின் சமிங்ஞையை வைத்து, என் ஜின் டிரைவர் இரயிலை நிறுத்த வேண்டியதில்லை. அபாய சங்கிலியை இழுத்தால் இரயில் தானாகவே நின்றுவிடும். அபாய சங்கிலி இரயிலின் பிரேக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், ரயில் தானாகவே நின்றுவிடும்). இரயில்வே ஊழியர்கள், சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிகளை பார்வையிட்டனர். அந்த சமயத்தில் ரயில் பெட்டிகளின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. 7:55 மணிக்கு மறுபடியும் இரயில் கோதரா ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டது. அப்பொழுது மறுபடியும் இரயிலின் பல பெட்டிகளிலிருந்து ஒரே சமயத்தில் அபாய சங்கலிகள் இழுக்கப்பட்டன. புறப்பட்ட இரயில் மறுபடியும் நின்றது. இரயில்வே நடைமேடையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் சிக்னல்ஃபாலியா என்ற இடத்தில் இரயில் நின்றது. அந்த சமயத்தில், எங்கிருந்தோ திபு திபுவென சுமார் 900 முதல் 1000 பேர் கொண்ட முஸ்லீம் கூட்டத்தினர் ரயிலை நோக்கி விரைந்தனர். ஒலிப்பெருக்கியால் ஒருவர், 'அந்த காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்' என்று அறிவித்தவண்ணம் இருந்தார்.

இரயிலின் 5 மற்றும் 6 ஆம் நம்பர் பெட்டியை அபாயகரமான ஆயதங்கள் கொண்டு தாக்கினர். கையெறி குண்டுகள் மற்றும் திராவகத்தாலும் பயணிகள் தாக்கப்பட்டனர். தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பயணிகள் இரயிலின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடினர். தரையிலிருந்து இரயில் பெட்டி உயரமாக இருந்ததால், தாக்குதல் செய்ய வந்த கும்பலின் ஒரு பிரிவு 6 வது மற்றும் 5 வது பெட்டிகளுக்கு இடையேயான இடைகழியில் (Vestibule) உள்ள துணி மறைப்பைக் கிழித்து, அதன் வழியாக அவர்கள் கொண்டுவந்திருந்த 140 லிட்டர் எரிபொருளை இரயிலின் ஆறாவது பெட்டியின் மீது ஊற்றினர். தீ வைத்தனர்.
திகுதிகுவென நெருப்பு எங்கும் பரவியது. இரயில் பெட்டியின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டு அதன் வழியாகவும் எரிபொருள் ஊற்றப்பட்டது. 6 வது பெட்டியின் உள்ளே இருந்தவர்களிடையே மூச்சுத் திணறல். எங்கும் அலறல் சத்தம். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எரிந்து கொண்டிருக்கும் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க, பயணிகள் இரயில் பெட்டியின் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கலவரக்காரர்கள் இரயில் பெட்டியின் கதவுகளை திறக்கமுடியாமல் செய்துவிட்டனர். எந்த வகையிலும் தப்பிக்க முடியாமல் தவித்த 40 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பயணிகள், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயில் கருகி இறந்தனர். காரணமே இல்லாமல் அந்த 58 பேரும் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 48 பயணிகள், ஒருவழியாக மீட்கப்பட்டனர். இரயிலின் 6 ஆம் நம்பர் பெட்டி முழுவதுமாக எரிந்து போனது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சுலபமாக வரமுடியாதவாறு, கலகக் கும்பல் பல தடைகளை ஏற்படுத்தியது. கலகக் கும்பலின் நோக்கமே சபர்மதி இரயிலை முற்றிலுமாக தீக்கிரையாக்குவதுதான். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் இரயில்வே பணியாளர்களுடன் சேர்ந்து முழுதும் எரிந்து போன 6 ஆம் நம்பர் பெட்டியையும், அரைகுறையாக எரிந்து போன 7 ஆம் நம்பர் பெட்டியையும் இரயிலிருந்து நீக்கி, அவைகளைத் தனியே கோதரா இரயில்வே யார்டுக்கு எடுத்துச்சென்றனர். சுமார் 11 மணியளவில், தாக்குதல் கும்பல் இரயில்வே யார்டுக்கும் சென்றது. அங்கிருந்த சபர்மதி இரயிலின் 7வது பெட்டியை சேர்ந்தப் பயணிகளைத் தாக்க தொடங்கியது. தாக்குதலில் பலர் பலத்த காயம் அடைந்தனர். கலகக்காரர்களை விரட்ட காவல்துறை, துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இருவர் பலியானார்கள். காவல்துறையைச் சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

குஜராத் அரசு, குஜராத் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் கோதரா இரயில் எரிப்பு மற்று அதன் பின்னர் நடைபெற்ற மத கலவரத்தைப் பற்றி விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்கட்சியினரும் ,சமூக ஆர்வலர்களும், நீதிபதி ஷாவை விசாரணை கமிஷனின் தலைவராக செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியே விசாரணைக்கு தலைமை தாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளுக்கு இணங்கி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு நானாவதியை விசாரணை கமிஷன் தலைவராக குஜராத் அரசாங்கம் நியமித்தது. மேலும் விசாரணை கமிஷன், இருவர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது.விசாரணை நிலுவையில் இருக்கும்போது ஷா மரணமடைந்தார். எனவே அரசாங்கம் ஷாவிற்கு பதிலாக, அக்ஷய் குமார் மேத்தா என்ற ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தது.

நானாவதி - மேத்தா விசாரணை கமிஷன் தன்னுடைய விசாரணையை 6 ஆண்டுகள் காலம் நடத்தியது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 40,000 விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது. 1000 க்கும் மேலான சாட்சியங்களை விசாரித்தது. நானாவதி - மேத்தா கமிஷன் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டது.
அந்த விசாரணையின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு,

1. கோதரா ரயில் எரிப்பின் பின்னணியில், மவுல்வி ஹுசைன் ஹாஜி இப்ராஹிம் உமர்ஜி என்ற செல்வாக்குள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு செயல்பட்டிருக்கிறார்.
2. அவருக்குத் துணையாக இந்த இரயில் எரிப்பில் ஈடுபட்டவர், மத்திய ரிசர்வ் காவல்படையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி நானுமியான். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
3. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த குலாம் நபியும், அலி முகமதுவும் இரயில் எரிப்பு சதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
4. கலவர கும்பலை தூண்டிவிட்டு வழிநடத்தி சென்றவன் நானுமியான்.
5. சபர்மதி இரயிலை எரிப்பதற்கான எரிபொருட்களை பதுக்கி வைத்த இடம் ரசாக் குர்குர் என்பவரது அமான் என்ற விருந்தினர் மாளிகையில். 140 லிட்டர் பெட்ரோலை சேமித்து வைக்க, சுமார் 7 முதல் 8 பெட்ரோல் கேன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
6. இவர்களைத் தவிர, கோதரா நகராட்சியின் தலைவர் முகமது கலோட்டாவும், நகராட்சியின் கவுன்சிலர்கள் ஹாஜி பிலால் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) மற்றும் அப்துல் ரஹ்மான் தாண்டியா என்பவர்களும் இரயில் எரிப்பிலும், வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
7. ஹாஜி பிலாலும், ஃபாருக் பானாவும் கலவர கும்பலுடன் சேர்ந்து கொண்டு தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி, தீயை அணைக்கவிடாமல் சண்டையிட்டார்கள் என்றும், தீயணைப்பு துறையினரின் மீது தாக்குதல் தொடுத்ததாகவும், தீயணைப்பு வீரர் சுரேஷ் கோசாய், நானாவதி கமிஷனிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
8. அப்துல் ரஹ்மான் தாண்டியா என்ற கவுன்சிலர், கலவரக்காரர்களுடன் சேர்ந்து சபர்மதி இரயிலின் மீது கற்கள் வீசியிருக்கிறார்.
9. தடயவியல் துறையின் ஆய்வின் படி, சபர்மதி ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்கு முன்னர் பெட்டிகளில் பெட்ரோல் ஊற்றப்பட்டது என்று நிரூபனம் செய்யப்பட்டுள்ளது.
10. கோதரா ரயில் நிலையத்தின் அருகாமையில் வசித்து வந்த இஸ்லாமியர்கள்தான், இரயிலைக் கொளுத்தியதாக நானாவதி கமிஷன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது.
மேற்சொன்ன குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து குற்றவியல் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22 ஆம் தேதி தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் படி, கோதரா இரயில் எரிப்பு, ஒரு திட்டமிட்ட சதி என்ற முடிவு வெளியிடப்பட்டது. மேலும் இந்த சதியில் ஈடுபட்டு கொலை செய்த குற்றத்திற்காக, 11 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது; 20 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது; 61 குற்றவாளிகள் நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில், தங்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அதேபோல் குஜராத் அரசாங்கமும், 20 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்தும், மேலும் 61 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்த இரண்டு மேல் முறையீடுகளும் விசாரணையில் உள்ளன. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

நானாவதி கமிஷன் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில், டில்லியில் இயங்கிவரும் சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை (CIAHR), ஓய்வு பெற்ற கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான திவத்தியா தலைமையில் ஒரு தனிபட்ட குழுவை அமைத்து, கோதரா ரயில் விபத்தைக் குறித்தும், அதன் பின்னர் தொடர்ந்த வன்முறைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி திவத்தியா தலைமையிலான விசாரணைக் குழுவில் இடம்பெற்ற மற்ற நபர்களின் பெயர்களும்,விவரங்களும் பின்வருமாறு,
1) டாக்டர் ஜே.சி.பாத்ரா - உச்ச நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர்
2) டாக்டர் கிருஷ்ணன் சிங் - சண்டிகரைச் சேர்ந்த பேராசிரியர்
3) ஜவஹர்லால் கவுல் - ஜனசட்டா பத்திரிக்கையின் துணை ஆசிரியர்
4) பேராசிரியர் பி.கே.குதியாலா - ஜீ.ஜே.பல்கலைக்கழத்தின் மீடியாத் துறை தலைவர்
நீதிபதி திவத்தியா தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, நான்கு நாட்கள் விசாரணை நடத்தி, ஏராளமான நபர்களை பேட்டியெடுத்து, தனது அறிக்கையை வெளியிட்டது.
நடந்த சம்பவங்களை சார்பு நிலையற்று அலசி ஆராய்ந்த நீதிபதி திவத்தியா குழு, தன்னுடைய விசாரணையின் முடிவுகளை நான்கு பிரிவுகளாக பிரித்தது.
அவை
1) ஆதாரப்பூர்வமானவை,
2) உறுதி செய்யப்படவேண்டியவை,
3) உண்மையற்றவை
4) மர்மமானவை.
நீதிபதி திவத்தியா குழு தங்கள் விசாரணையின் முடிவில் ஆதாரப்பூர்வமானவை என்று குறிபிட்ட விவரங்கள் பின்வருமாறு,
1) 2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி, சபர்மதி எக்ஸ்பிர ஸ் கோதரா ரயில் நிலையத்தை சுமார் நான்கு மணி நேரம் கால தாமதமாக அடைந்தது.
2) சபர்மதி இரயிலில் இரண்டாயிரம் ஹிந்து யாத்திரிகர்கள் இருந்தனர்.
3) கோதரா ரயில் நடைமேடையில், பயணிகளுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் / கடை வைத்திருப்பவர்களுக்கும் இடையே சண்டை, வாய்த் தகராறு, கைகலப்பு எதுவும் ஏற்படவில்லை.
4) கோதராவை விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பும் சமயத்தில் அதன் மீது கற்கள் வீசப்பட்டன. சிக்னல்ஃபாலியாவில் இரயில் நின்ற பிற்பாடு, மறுபடியும் இரயிலின் மீது கற்கள் வீசப்பட்டன.
5) கையெறி குண்டுகள், திராவகம், எரியூட்டக்கூடிய பொருட்கள் வைத்து இரயில் கொழுத்தப்பட்டது.
6) மேற்கூறியப் பொருட்கள் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
7) தாக்குதல் நடத்தியவர்கள், தீயணைப்புத் துறையினரை தீயை அணைக்கவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர்.
8) கலகக்காரர்களால் ஒரு இரயில் பெட்டிக்கு மட்டும்தான் தீ வைக்கமுடிந்தது.
9) 6ம் நம்பர் இரயில் பெட்டியின் ஜன்னல் கதவுகள் வெளியிலிருந்து உடைக்கப்பட்டன.
10) இந்த சதிவேலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாஜி பிலால் என்ற கவுன்சிலர் ஈடுபட்டிருக்கிறார்.
11) அபாய சங்கிலியை இழுத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரயிலின் வெற்றிடக் குழாய் (Vaccuum Pipe) துண்டிக்கப்பட்டிருக்கிறது.
12) ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி, "காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்" என்ற அறிவிப்பு விடப்பட்டு, கலகக்காரர்கள் ஆவேசப்படுத்தப்பட்டார்கள்.
13) சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி வேலை. இந்த சதிக்குப் பின்னால் அந்நிய சக்திகளும், உள்ளூர் ஜிஹாதிகளும் ஈடுபட்டுள்ளனர்.
உறுதி செய்யப்பட வேண்டிய விவரங்கள்:
1) கோதரா நகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்புத் துறையின் செயல்பாடுகளை முடக்கிவிட சதி நடந்தது.
2) இரயில் எரிப்பில் பங்குகொண்டவர்கள் கோதரா முஸ்லீம்கள் மட்டுமல்ல, வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களும்தான்
3) கலகக்காரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
4) காவல்துறையினர் கலகக்காரர்களில் சிலரை சம்பவ இடத்திலேயே பிடித்திருக்கக்கூடும் அல்லது கொன்றிருக்கக்கூடும்
5) உள்ளூர் அரசியல்வாதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலகக்காரர்களை தூண்டிவிடும் முக்கியப் பணியில் ஈடுபட்டனர்.
6) கோதராவிற்கு முந்தைய இரயில் நிலையமான தாகோத்தில் இயங்கிய இரயில்வே காவல்படை, சபர்மதி எக்ஸிபிரஸில் பயணம் செய்து வரும் சில முஸ்லீம் இளைஞர்கள் கோதராவில் ஏதோ விஷமத்தில் ஈடுபடப்போவதாக கோதரா காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
7) எரிந்துகொண்டிருந்த 6 வது நம்பர் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது. பின்னர் துண்டிக்கப்பட்ட தலை, எரிந்து கொண்டிருக்கும் ரயில் பெட்டியினுள் தூக்கி வீசப்பட்டது.
உண்மையற்ற செய்திகள்:
1) சில பெண் பயணிகள் காணாமல் போய்விட்டனர்.
2) சில பெண் பயணிகள் கற்பழிக்கப்பட்டனர், மானபங்கபடுத்தப்பட்டனர்
3) பயணிகள் தங்களுடன் ஆயுதம் ஏந்திச் சென்றனர்
4) இரயில்வே ஊழியர்கள், கலகக்காரர்களுடன் இணைந்து ரயில் எரிப்பில் ஈடுபட்டனர்
5) பயணிகள் கோதரா ரயில் நிலையத்தில் உள்ள சில முஸ்லீம்களை அவதூறாகப் பேசினர்
6) கலகக்காரர்கள் இரயில் எரிப்பில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லீம்கள் இறந்து போயினர்.
மர்மமான சம்பவங்கள்:
1) கோதராவின் துணை மாவட்ட ஆட்சியர் (உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லீம்), கோதரா சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே விடுப்பில் சென்று விட்டார். கோதராவில் வன்முறை நடந்து கொண்டிருக்கும் போது அவர் ஊர் திரும்பவில்லை. எல்லாம் முடிந்த பிறகு, பொறுமையாக மார்ச் மாதம் தான் ஊர் திரும்பினார்.
2) கோதராவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை, காரணமே இல்லாமல் அதிகரித்திருக்கிறது.
3) கோதரா மாவட்ட நிர்வாகம், எத்தனை பேருக்கு ஆயுத உரிமை வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை பராமரிக்கவில்லை
4) கோதரா வாழ் மக்களுக்கு அதிக அளவிலான பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது
5) குடும்ப அடையாள அட்டை இல்லாமல் நிறைய பேர் கோதராவில் உள்ள சிக்னல்ஃபாலியா மற்றும் போலன் பசார் பகுதிகளில் வசிக்கிறார்கள்
6) ஏராளமான வேலையில்லாத முஸ்லீம் இளைஞர்கள் கைபேசியுடன் கோதராவில் சுற்றித் திரிகின்றனர்.
7) இரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்னர், கோதராவிற்கும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கும் இடையே அதிக அளவில் தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.
8) சம்பவத்திற்கு முன்னர் கோதராவில் நடைபெற்ற இஸ்தேமா (மதக் கூட்டங்களில்) நிறைய வெளிநாட்டவர் பங்கு கொண்டிருக்கின்றனர்.
முடிவாக நீதிபதி திவத்தியா குழு, கோதரா இரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சர்வதேச தீவிரவாதச் செயல் என்றும், இந்தத் தீவிரவாதிகளின் நோக்கமே இந்தியாவில் பெரிய அளவில் கலவரம் ஏற்படவேண்டும் என்பதாகும் என்ற தங்களுடைய முடிவை வெளியிட்டது.

இது இப்படியிருக்கையில், 2004 ஆம் ஆண்டு, அதாவது கோதரா சம்பவம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டு காலம் கழித்து, காங்கிரஸ் அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, இரயில்வே அமைச்சராக செயல்பட்ட லல்லு பிரசாத் யாதவ், கோதரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான உமேஷ் சந்திர பானர்ஜி என்பவரை, ஒரு நபர் விசாரணைக் கமிஷனாக நியமித்தார்.

பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, பானர்ஜி கமிஷன் தன்னுடைய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

கமிஷன் தன்னுடைய அறிக்கையில், கோதராவில் இரயில் எரிந்தது சதியால் அல்ல; அது ஒரு விபத்து என்று தெரிவித்தது. இரயில் பெட்டியில் பயணிகள் சமையல் செய்து கொண்டிருந்ததால், அதன் பொருட்டு தீ பரவி இரயில்பெட்டி எரிந்து விட்டதாக, பானர்ஜி தன்னுடைய அறிக்கையில் இரயில்பெட்டி எரிந்ததற்கான காரணம் எனத் தெரிவித்தார்.
கோதரா ரயில் எரிப்பில் உயிர் பிழைத்த பயணியான நிலகந்த் துளசிதாஸ் பாத்தியா என்பவர், நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜியின் அறிக்கை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி குஜராத் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பானர்ஜி கமிஷன் நியமனம் செல்லாது என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. விசாரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ தான் அதிகாரம் உள்ளது என்றும், இரயில்வே நிர்வாகத்திற்கு இல்லை என்றும் கூறியது குஜராத் நீதிமன்றம். மேலும் தன்னுடைய தீர்ப்பில், "ஏற்கனவே மாநில அரசு, சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குள் நானாவதி தலைமையிலான ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்துள்ளது. ஒரு விசாரணைக் கமிஷன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதே விவகாரத்திற்காக இன்னொரு கமிஷனை நியமித்தது சரியாகாது" என்று தெரிவித்தது. மேலும், பானர்ஜி கமிஷன் சரியாக விசாரணை நடத்தவில்லை; முக்கியமான சாட்சிகளை விசாரிக்கவில்லை; பானர்ஜியின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது; எனவே அந்த அறிக்கை நிலைக்கத்தக்கதல்ல என்று அதை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான தீஸ்டா செட்டல்வாட் என்பவர், நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்குத் தொடுத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை தடைசெய்ய மறுத்துவிட்டது.v.kalathur seithi . 


நன்றி- https://www.facebook.com/Mission118


0 comments:

Post a Comment